Friday, November 17, 2023

ஆண்டின் பொதுக்காலம் 33 - ம் ஞாயிறு மறையுரை -19.11.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 33- ஆம் வாரம் ஞாயிறு) 19.11.2023.

நீ மொழி 31 : 10-13, 19-20, 30-31,

1 தெசலோனிக்கர் 5: 1 - 6,

மத்தேயு  25: 14- 30.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நம்பிக்கைக்கு உரியவராவோம்

♦️நம்பிக்கை + முயற்சி =  வெற்றி

♦️யாரை நம்புவது-நம்மை +கடவுளை

கதை 1: காடு தீப்பற்றி எரிந்தது, விலங்குகள் மடிந்தன. சில விலங்குகள் ஓடி வேறு இடம் சென்றன. மரத்திலே தூரத்தில் அமர்ந்திருந்த சிட்டுக்குருவி, தன் அலகிலே நீர் எடுத்து தீயில் ஊற்றியது. தீ அணையுமா? அணையாது.

♦️சிட்டுக்குருவியின் முயற்சி - உனக்கு வேண்டாமா?

♦️அதன் திறனை விட பல கோடி மடங்கு அதிகமானது.

♦️கடினப்பட்டு உழைத்தால் - அதற்கு இணை ஏதுமில்லை.

கதை 2: ஆன்மீக வழிகாட்டி வேதாந்த மகரிஷி வெற்று பானையைக் கவிழ்த்துப் போட்டான். இந்தப் பானையில் என்ன இருக்கிறது.

1. ஒன்றுமில்லை

2. எதுவும் இல்லை

3. விஷயம் ஒன்றுமில்லை

4. பானைக்குள்ளே காற்று இருக்கிறது.

இந்தப் பானையின் காற்றை வெளியேற்ற முடியுமா?

1. முடியாது

2. இயலாது

3. முடியவே முடியாது

4. முடியும் எப்படி? வாளி நிறைய நீர் கொணர்ந்து பானை நிரப்பினான்.

ரிஷி சொன்னார் - பானையில் காற்று போல்- நம் மனம் எதிரிடை சிந்தனைகளாய் நிரம்பி வழிகிறது. அதுவாக போகாது முயன்று விரட்டி முயற்சி, நன்மை என்று தண்ணீரை வைத்து நிரப்ப தீமை அகலும்.

முடியாது- என்றால் முடியாது

முடியும் -என்றால் முடியும்

உன்னையும் நம்பு, ஆண்டவரையும் நம்பு.

திபா 34:10 "சிங்கக்குட்டிகள் உணவின்றிப்பட்டினி இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது" இன்றைய நற்செய்தியில் 3-ம் நபருக்கு கொடுக்கப்பட்டது 1தாலந்து.

1.தாலந்து = 34 கிலோ கிராம் தங்கத்திற்கு சமம்.

I. தன்னிடமுள்ள செல்வத்தின் மதிப்பு அறியாமை

1 தாலந்து 34 கிலோ கிராம் தங்கம் இந்த பெரிய தொகையை புதைத்தது -அவமானம்.

புதைத்தல் =அழிதல் - பிணம் புதைப்பவர்.

விதைத்தல் - வாழ்வு விதை.

புதைத்து வைக்க இரு காரியம்:

1. சோம்பேறித்தனம்

2. பொறாமை -மற்றவர்களுக்கு என்னை விட அதிகம்.

இதே போல் -பிள்ளைகள் - தங்கள் திறமைகளை அறியாமல் இருக்கலாம் உழைப்பதற்கு மனம் இல்லாமல் - சோம்பேறியாய் இருக்கலாம்.

ll. பயம் - உமக்கு அஞ்சியதால்

🔴Self Confidence - இல்லாமை - சாக்குப்போக்கு

🟢சோம்பேறி சாக்குப்போக்கு சொல்வான்.

🟣தன்னைக் குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக் கொள்வான்.

நிகழ்வு:

லூயிஸ் ஈவ்லி பிறந்த பின்பு போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். கை, கால் ஊனம் மருத்துவர் சோதித்துப் பார்த்து வாழ்நாளை சக்கர நாற்காலியில் செலவிட வேண்டி இருக்கும் என்றார்.

கை, கால் பலம் பெறுவது இயலாத காரியம், ஆனால் லூயிஸ் ஈவ்லி பெரியவனான பின்பு டாக்டரின் வார்த்தையை ஏற்று தன்னை முடமாக்க விரும்பவில்லை. கை, கால்கள் வலுப்பெற கடுமையான பயிற்சிகள் செய்தான். அதன் பயனாக நடந்தான், ஆனால் திருப்தி அடையவில்லை லூயிஸ் ஈவ்லி மீண்டும் கடுமையான பயிற்சி, உயரம் தாண்டுதலில் 1964, 1968 தங்கபதக்கம் என்றான் ஒலிம்பிக்கில். இது நமக்கு உணர்த்துவது நம்பிக்கை, முயற்சி, வெற்றி என்பதாகும்.

நம் திறமைகளை 2 ஐ 4 ஆகவும் 5 ஐ 10 ஆகவும் மாற்ற முயல்வோம். 

சீன் வேனியர் யார் தங்களுக்குள் உள்ள திறமைகளை அறியாதிருக்கிறார்களோ அவர்கள் உள்ளத்திலிருந்து தான் பொறாமை புலப்படும்.

இச 11: 27 "இதோ இன்று உனக்கு முன்பாக ஆசியையும் சாபத்தையும் வைக்கிறேன்"

🟡ஆசி என்பது தெளிந்த சிந்தனை, இறையச்சம், உறுதிப்பாடு, உழைப்பு

🔵சாபம் என்பது முயலாமை, இறையச்சமின்மை

🔴தொலைக்காட்சி, தொலைபேசி, திரைப்படம், தேவையற்ற நண்பர்கள் கூட்டம்.

🟢வலிகளை தாங்கிக் கொண்டால் வரலாற்றில் இடம் பிடிக்கலாம்.

🟣கோயில் படியாகவும் இருக்கலாம்.

🟡கோயிலில் மக்கள் வணங்கும் சிலையாகவும் இருக்கலாம்.

🔵வலிகளை தாங்கினால் வணக்கத்திற்கு உரியவராவோம்.


2 கொரி 6:1 "நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம்"

கடவுள் நமக்கு அருளிய அருள் கொடைகளை முழுவதுமாய் பயன்படுத்த தான் வாழ்வு நமக்கு அருளப்பட்டுள்ளது. எல்லாருக்கும் ஒன்று போல் திறமைகள் வழங்கப்படுவதில்லை. 1 கொரி 12:10 "தூய ஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றை பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்கு பல்வகை பரவசப்பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்" அவரவர் இயல்புக்கேற்ப திறமைகள் வழங்கப்படுகிறது. அவரவர் பெற்றுள்ளவற்றை எப்படி பயன்படுத்தினர் என்று தீர்ப்பு நாளில் கணிக்கப்படும். என்னை விட மற்றவருக்கு அதிகமாக அளிக்கப்பட்டிருக்கிறதே, என்று பொறாமை கொள்வதை விட உனக்கு வழங்கப்பட்டுள்ள திறமைகளை தன்னை நம்பி கடினமாக உழைத்து பல மடங்காக கொடுக்க வேண்டும் என்பதே அறிவுடைமை.

இன்று நாம் வாழ்வில்

🔵கடவுள் அருளிய வாழ்வை ஒரு கொடை என உணர்கிறேனா?

🟡என்னுள் உறைந்திருக்கும் திறமைகளை இனம் காண்கிறேனா?

🟣திறமைகளை வளர்த்தெடுக்க நாம் எடுக்கும் முயற்சிகள் என்ன?

🔴பிறரை குறித்து பொறாமை உணர்வோடும் குறை கூறியும் வாழ்கிறேனா?

🟢எனக்குரிய திறமைகள் பொது நன்மைக்கு பயன்பட வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுகிறேனா?

நம்மை நாம் அறிந்து திறமைகளை இனம் கண்டு நம்பிக்கைக்குரியவராவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment