Saturday, December 23, 2023

கிறிஸ்து பிறப்பு பெருவிழா மறையுரை -25.12.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

கிறிஸ்து பிறப்பு

25.12.2023.

எசாயா 62 : 1 - 5,  

திபணி 13: 16 - 17, 22 - 25,

மத்தேயு 1: 1 - 25.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இறைவன் மனிதரை சந்தித்தாா்

🔴ஏவாவை - பாம்பு சந்தித்தது - பாவமும், சாவும் வந்தது.

🔵ஆபிரகாமை . இறைவன் சந்தித்தார் - சந்ததி வந்தது.

🟢கடவுள் - மோசேயை சந்தித்தார் - விடுதலை தலைவரானார்.

🟡மோசே - பாரவோனை சந்தித்தார் - விடுதலை கிடைத்தது

🟣சாமுவேல் - தாவீதை சந்தித்தார் - தாவீது அரசரானார்.

🔴நாத்தான் - தாவீதை சந்தித்தார் - மனமாற்றம்

🔵மரியாவை - இறைத்தூதர் சந்தித்தார் - மீட்பர் கிடைத்தார்.

🟡கிறிஸ்து - சிலுவையை சந்தித்தார் - மீட்பு கிடைத்தது.

🟣பவுல் - கிறிஸ்துவை சந்தித்தார் - கிறிஸ்தவம் பிறந்தது.

♦️கடவுள் என்ற நிலையில் இருந்து இறைவன் இறங்கி நம்மோடு கடவுளாய், இம்மானுவேலனாய் பிறந்த விழா.

விண் - மண்ணை சந்திக்கிறது

புண்ணியன் - பாவியை சந்திக்கிறார்

♦️எதற்காக சந்தித்தார்?

♦️யார் இந்த இயேசு ?

♦️சந்திப்பதற்கான காரணம் என்ன? என்ற வினாக்களை நாம் எழுப்பினால் அதற்கான விடை புலப்படும்.

யார் இந்த இயேசு?

இயற்கை விதிகளுக்குப் புறம்பாய்

எளிமையில் தன்னை மறைத்து

குழந்தையில் அகதியாய்

செல்வமும் செல்வாக்கும் இன்றி

பதவியின்றி, ஏழையாய் உதித்தவர்.

பிறந்ததும் ஏரோதுவால் கொலை செய்ய தேடப்பட்டவர்.

முறைப்படி கல்வி இல்லை. ஆனால்,

♦️சிறுவனாக இருந்தபோதே - பெரியோருக்கு மறை நூலை விளக்கியவர்

♦️இளைஞனாகிய போது - காற்றையும் கடலையும் அடக்கியவர்.

♦️நூல் எழுதவில்லை - உலகின் பெரும்பாலான நூல்கள் அவரைப் பற்றி பேசும்.

♦️மருத்துவம் படிக்கவில்லை - ஏழை மக்களின் உடல் உள்ள நோய்களை குணமாக்கி செல்வராய் இருந்தும் ஏழையாய் பிறந்தார்.

மரியா

யோசேப்பு

மூன்று ஞானிகள் - கேட்டுப்பாருங்கள் பதில் கிடைக்கும் இவ்வாறு,

பிறந்தது - அன்னியரின் மாட்டு தொழுவம்

உறங்கிய படகு - உழைக்கும் மக்களின் உயிர் காக்கும் தொழில் கருவி.

பயணித்த கழுதை - அன்னியரின் அடிமை விலங்கு

கல்லறை - அடுத்தவருக்குச் சொந்தமானது. 

ஆனால் திருவிவிலியம் கூறுகிறது,

யோவான் 1:3 "அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை"

முதலும் முடிவுமான இயேசு அடிமையாய் வந்தார் நம்மை சந்திக்க.

ஏன் சந்திக்க வேண்டும் ?

பாதை மாறி, பாவத்தில் விழுந்து பரிதவித்து வாழத்துடித்த மனிதனை  - புதிய பாதைக்கு அழைத்துச் செல்ல வந்தார்.

விழி இழந்தோர்க்கு ஒளியாய்

பாவி மனம் மாறி வாழ்வு பெற

தடுமாறும் கால்கள் நிலைத்து நிற்க

அகங்கார மனநிலை அன்பைப்பெற

அன்பாய் தேடி வந்தார்

உறவே மனிதமாய் உறவே புனிதமாய்

வாழ வேண்டிய மானுடக் குடும்பத்தில்

அழுவோர் எண்ணிக்கை அதிகரித்தது

மனிதரின் உள்ளம் வெறுப்பால் வெந்தது

தோப்பு - தனி மரமாகியது

வீடு - காடாகியது

மனிதன் - மிருகமானான்

அன்பு அற்றுப்போய் சுயநலம் சலங்கை கட்டி ஆட்டம் போட்டது. இவ்வேளையில் எசாயாவின் ஏக்கம் நனவாக,

எசாயா 49:15 "பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ கருத்தாகினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ" என்ற இறை வார்த்தை உயிர்பெற, அம்மையும் அப்பனுமான ஆண்டவன் குழந்தையாய் சந்திக்க வந்தார்.

♦️அருள் மிகப் பெற்றவர்களை ஆண்டவர் சந்தித்தார்.

லூக்கா 2:10 "அஞ்சாதீர் இதோ எல்லா மக்களுக்கும் மாபெரும் மகிழ்ச்சியூட்டு நற்செய்தி"

எனவே தான் நம்மை சந்திக்க வந்த கடவுள் நமக்குாய் தன்னை இழந்தார்.

இழப்பு - வழி - வாழ்வு, உயிர் கிடைக்கும்.

கிறிஸ்து - கடவுள் நிலை இழந்து மனிதரானார். நாம் வாழ்வு பெற்றோம்.

நிகழ்வு

அவள் பெயர் - சிந்துஜா, ஏழாம் வகுப்பு. முதல் மதிப்பெண் எடுத்தாள். அரையாண்டுத் தேர்வில் வகுப்பாசிரியர் பரிசு கொடுத்தார். வீட்டிற்கு வந்து அம்மா அப்பாவிடம் பரிசை வழங்கி மகிழ்ந்தார்.

பெற்றோர் கேட்டனர் உனக்கு என்ன பரிசு வேண்டும்? சிந்துஜா சென்னாள் "தலை முடியை மழித்து மொட்டையடியுங்கள்" தன் செல்ல குழந்தையை அழகு செய்யச் சீவி சிங்காரிக்கும் தலைமுடியை மொட்டையடிப்பதா? வேண்டாம்.

வேணும், மொட்டை வேணும், குழந்தை சிந்துஜாவின் பிடிவாதம் அது. 

- இறுதியில் வென்றவள் அவள் தான்.

- மறுநாள் குழந்தை சிந்துஜாவை அவள் தந்தை பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றார் காரில்.

- காரில் இருந்து இறங்கினாள். குழந்தை சிந்துஜாவைக் கண்ட நடுத்தர வயது பெண் ஒருவர் ஓடி வந்தார். குழந்தையைக் கட்டி அணைத்து அழுதாள். கண்ணீரோடு சொன்னாள். என் மகன் ஜெய், அவள் வகுப்பு, ரத்தப்புற்று நோய். Hemo Theraphy - ல் தலைமுடி உதிர்ந்தது. வகுப்பு நண்பர் பரிகசிப்பர். எனவே பள்ளி செல்ல தயக்கம். நேற்று வகுப்பு நண்பர்கள் என் மகனைப் பார்க்க வந்தனர்.

- பள்ளிக்கு வா! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

- வர இயலாது - முடியில்லை, பரிகசிப்பர்.

- நானும் மொட்டை அடிக்கிறேன் என்று சொல்லி சென்ற சிந்துஜா மறுநாள் மொட்டையாய் வந்த போது, மாசு மறுவற்ற குழந்தையின் அன்பும், பரிவும், பாசமும் அறிந்து, அனைவர் கண்களும் பனித்தது.

- நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனைத் தேற்றி தன்னை இழக்க துணிந்த குழந்தை போல் பாவநோய் பிடித்த மனுக்குலத்தை மீட்க கடவுள் மனிதரானார்.

- காரிருளில் நடந்த நாம் பேரொளியை காணுமாறு மனிதராய் நம்மை சந்தித்தார்.

- கிறிஸ்துவின் சந்திப்பு மகிழ்வைக் கொடுத்தது.

நம் சந்திப்பு?

கடவுள் எட்ட முடியாத தூரத்தில் எங்கோ இருப்பவர் அல்ல,

தேடி வந்த தெய்வம் இயேசு - நம்மை தேடி வந்த தெய்வம் இயேசு.

மனித சந்திப்பிலே, உறவிலே மகிழ்கின்றவர்.

நாம் கடவுளை எங்கு தேடுவது?

ஏழைகளில், எளியவரில், தாழ்ச்சி என்னும் பண்பில் சிறையில் வாடும் மக்களோடு மத்தேயு 25:40 "மிகச்செரியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" வதைபடும் வாழும் மானிடத்தில் கிறிஸ்துவை சந்திக்க கற்றுக் கொள்வோம்.

- சந்திப்புகள் சந்தோசமாகட்டும்!

- நம்மை சந்திக்கிறவர்கள் - கிறிஸ்துவை நம்மில் கண்டு கொள்ளட்டும்!

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment