Friday, January 12, 2024

பொதுக்காலம் 2 - ம் ஞாயிறு மறையுரை -14.01.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 2 -ம் ஞாயிறு

14.01.2024

1 சாமு 3 : 3 - 10, 19,  

1 கொரி  6: 13 - 15, 17 - 20, 

யோவான் 1: 35 - 42.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.



வந்து பாரும்

🟡உலகு தோன்றியது முதல் இன்று வரை மனித நிலையான நிறைவான வாழ்வைத் தேடுகின்றனர்

🔵எல்லாருடைய உள்ளத்திலும் முழுமையான தேடல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

🔴ஆண்டவர் இயேசு சீடர்களின் தேடலை புரிந்து கொண்டார்.

1 சாமு 16:1 "மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர், ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்" என்பதற்கிணங்க ஆண்டவர் இயேசு, மக்களின் சீடர்களின், தேடலை, உணர்வுகளைப் புரிந்து கொண்டார்.

🟢எனவே சீடர்களைப் பண்படுத்தி, அவர்கள் வழியாக உலகோரின் தேடலுக்குப் பதில் கொடுக்க, அவர்களைப் பண்படுத்த கடவுள் விரும்பினார்.

🟣மக்கள் வாழ்வு பெறவும், அதுவும் நிறைவாய் பெரும் பொருட்டு வந்த இயேசு அவர்களுக்கு வாழ்வும், வழியும் உண்மையுமாய் மாறினார்.

🟡இயேசுவைப் பின் தொடர்ந்த, திருமுழுக்கு யோவானின் சீடர்களை நோக்கி என்ன தேடுகிறீர்கள், என்றுக் கேட்டார் இயேசு.

🔴இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்று திருமுழுக்கு யோவானால் சுட்டிக்காட்டப்பட்ட இயேசுவைப் பற்றி அறியவும், அவரோடு இணைந்து வாழவும் விரும்பிய சீடர்களின் உள்ள ஆவலை அறிந்த இயேசு அவர்களிடம் வந்து பாருங்கள் என்று அழைப்பதைப் பார்க்கின்றோம்.

🔵ஒரு இடத்தை, அல்லது மனிதரை அல்லது ஒரு சமூகத்தை நோக்கி வருவதும், அறிவதும், தமிழே மாற்றத்தை ஏற்படுத்தும் உறவை வலுப்படுத்தும்.

நிகழ்வு (டிசம்பர் 2023 ஊடகச் செய்தி)

நடிகர் சின்னி ஜெயந்தியின் மகன் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் அவர்கள், விழுப்புறம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பதவியேற்றுள்ளார். இவர், வானூர், திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகில், பழங்குடியினர் வசிக்கும் இடத்திற்குச் சென்றார். பழங்குடி சிறுமிகள் ரோஜா மலர் கொடுத்து வரவேற்றனர். அங்குச் சென்ற கலெக்டர் ஸ்ருதன், பழங்குடி மக்களோடு அன்பொழுக உரையாடி, உறவாடி, அவர்களின் வாழ்வில் நிலைகளை கேட்டறிந்தார். கேட்டறிந்ததை ஆய்வு செய்தபின், அம்மக்களுக்கு போதிய வாழ்விடங்கள், அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்பதை அறிந்த கூடுதல் கலெக்டர், அவர்களின் வாழ்வின் நிலைமைக்காக 22 தொகுப்பு வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி வழங்கினார். அந்த வீடு கட்டும் பணியில் அந்த பழங்குடி மக்களே பணிபுரியலாம் என்றும் அப்பணிக்குரிய ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.அதோடு அங்கு இடியும் நிலையில் இருக்கும் அங்கன்வாடி மையத்தையும் புதிதாய் கட்டித் தருவதாகவும், கழிவறை வசதிகள் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார். கூடுதல் கலெக்டர் நேரடியாக வந்து, பழங்குடி மக்களின் நிலைகளை அறிந்து அவா்களுக்கான விடியலை ஏற்படுத்த முனைந்தார்.

கலெக்டர் அவர்களின் இந்த செயல் அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. எந்தவித பந்தாவும் இன்றி சாதாரணமாக, எளிய முறையில் வந்து, பழங்குடி மக்களின் வாழ்வின் நிலை உயர்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்த முனைந்த கலெக்டரை வானூர், திருச்சிற்றம்பலம், கூட்டுரோடு பழங்குடி மக்கள் மகிழ்வோடும், நன்றியோடும், அன்புடனும் வழியனுப்பினர்.


♦️வந்து பார்த்தல் என்பது தனிப்பட்ட முயற்சி, தனிமனித அனுபவம்.

♦️அது அறியவும், அறிதலின் அடிப்படையில் மாற்றத்திற்கான முயற்சியையும் முன்னெடுக்கிறது.

♦️இறைவனிடமும், மீட்பர் இயேசுவிடமும் மக்களை அழைத்து வருதலின் முக்கியத்துவத்தை இன்றைய வழிபாடு உணர்த்துகிறது. 

யோ 15:16 "நீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை, நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்" என்ற இறைவன், சாமுவேலை எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்பதை இன்றைய முதல் வாசகம் உணர்த்துகிறது.

♦️சிறுவன் சாமுவேல் ஆலயத்தில் குரு ஏலியின் வழிகாட்டுதலில் பணி செய்து வந்தான். ஆண்டவர் சாமுவேலை அழைக்கிறார் என்பதை உணர்ந்த குரு சிறுவன் சாமுவேலை வழிநடத்தி, அறிவுறுத்தியதின் அடிப்படையில், சாமுவேல் ஆண்டவரிடம்


1 சாமு . 3:10 "பேசும், உன் அடியான் கேட்கிறேன்" என்று பதில் கூறுவதைப் பார்க்கின்றோம். இந்த பதில் தன்னை முழுவதும் அர்ப்பணம் செய்வதனை உணர்த்தி நிற்கிறது. ஆபிரகாமை, மோசேயை அழைத்த போதும் அவர்களின் பதிலும் தொநூ .22:1 "இதோ அடியேன்" என்று ஆபிரகாமும், விப 3:4 "இதோ நான்"  என்று மோசேயும் பதில் கொடுத்தனர்.

அன்னை மரியாள் லூக்கா 1:38 "நான் ஆண்டவரின் அடிமை" என்று பதில் கொடுத்தார். இத்தகைய அழைப்பு எதற்கு எனில் கடவுளின் கரமாய், கடவுளின் வாயாய், கடவுளின் முகமாய் நாம் செயலாற்ற வேண்டும் என்பதற்காகவே.

யோ 15:16 "நீங்கள் கனித்தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்" என்பதற்கிணங்க, நாம் கனித்தந்து, பயனுள்ள கருவிகளாய் உலகத்திற்கு சாரம் செய்ய அழைக்கப்படுகின்றோம்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்தவ வாழ்வு என்பது சிடத்துவ வாழ்வு ஆகும். தலைவரும், ஆண்டவரும், நித்திய குருவும் ஆகிய இயேசுவின் சீடராக, அவருடைய இறையாட்சிப் பணியை அகிலமெங்கும் எடுத்துச் செல்வதே சீடத்துவ வாழ்வு என்பதை உணர்த்துகிறது.

♦️ஆண்டவர் இயேசுவின் அதிகாரத்தோடு கூடிய போதனை யாரையும் காயப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ செய்யாது.

♦️ஆற்றல் மிகு செயல்பாடுகளைக் கண்ட யோவானுடைய சீடர் அந்திரேயா, இயேசுவிடம் எங்கு தங்கியிருக்கிறீர்? என்றுக் கேட்டார். ஏனெனில் அவர்கள் அவரின் வாழ்வியல் முறைகளை அறிய முற்பட்டனர்.

♦️அவரோடு தங்கி ஆண்டவர் இயேசுவை அனுபவமாக்கிய அந்திரேயா தன் சகோதரர் சீமோனிடம்,

யோவான் 1:41 "மெசியாவைக் கண்டோம்" என்று கூறினார். அதோடு சீமோனையும் மெசியா, மீட்பர் ஆண்டவராகிய இயேசுவிடம் அழைத்து வந்தார்.

தன்னை வந்து பார்த்த பேதுருவின் உள்ள வேட்கையை ஆண்டவராகிய இயேசு அழைக்கிறார்.

♦️சீமோனின் உள்ளத்தில் உறைந்திருந்த

உண்மைக்கான

வாழ்வுக்கான

நேர்மைக்கான  

கபடிக்கு எண்ணம் கொண்ட           

- தேடலை ஆண்டவர் இயேசு அறிந்து தம் சீடராக்குகிறார்.

♦️வந்து பாருங்கள் என்று அழைப்பு எதற்கு எனில் மாற்கு 3:14 "தம்மோடு இருக்க" ஆகும்

♦️ஆண்டவர் இயேசுவின் பிள்ளைகள், சீடர்கள், அவரின் பணியை முன்னெடுப்போர் யாராயினும் அவரில் இணைதல் வேண்டும், அவ்வாறு இணையும் போது, திபா 34:8 "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" என்ற தாவீதின் இறை அனுபவத்தை நாம் பெற்றுக் கொள்வோம்.

♦️இந்த இறையனுபவம் நம்மை பயனுள்ளவர்களாக, கனிதருபவர்களாக, கடவுளின் முகங்களாக இந்த உலதிற்கு அடையாளப்படுத்தும்.

யோவான் 15:5 "ஒருவர் என்னுடனும், நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்" என்கிறார் இயேசு.

♦️கடவுளின் விருப்பமும் அதுதான், நாம் இந்த சமூகத்திற்கு பயனுள்ள கருவிகளாக, மிகுந்த கனி தருகிறவர்களாக மாற வேண்டும் என்பதுதான்.

யோவான் 15:8 "நீங்கள் மிகுந்த கனித்தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாற்றி அளிக்கிறது" என்கிறார்.

♦️சீடராதலின் உச்ச நிலை யாதெனில் கிறிஸ்துவோடு இணைதல். கிறிஸ்துவோடு இணையும் போது, நாம் நாமாக இல்லாமல் கிறிஸ்துவாகவே மாறுவோம். இந்த அனுபவத்தைப் பெறவே வந்து பாருங்கள் என்று அழைத்தார் இயேசு. இதனைத்தான் தூய பவுல்

கலா. 2:20 "வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்து வாழ்கிறார்" என்றார்.

சீடர் 

- கடவுளோடு இணைந்திருப்பார்

- கடவுளை சுவைப்பார்

- கனி தருவார்

- கிறிஸ்துவாகவே இந்த உலகிற்குப் புலப்படுவார்.

எனவே முதல் சீடர்களுக்கு விடுத்த அழைப்பு நமக்கு விடுக்கப்படுகிறது "வந்து பாரும்" என்று. நாம் அவரைப் பார்த்து, அவரோடு இணைந்து, அவரை சுவைத்து, அவருக்காக மிகுந்த கனி தந்து, அவராகவே வாழ முயற்சிப்போம்!

🔴அவ்வாறு நாம் வாழும்போது, கிறிஸ்துவின் உடல் உறுப்புகளாகவும், தூய ஆவி தங்கும் ஆலயமாகவும் மாற்றப்படுவோம். அதற்குரிய ஆற்றலை இரஞ்சுவோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment