Friday, January 19, 2024

பொதுக்காலம் 3 - ம் ஞாயிறு மறையுரை -21.01.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 3 -ம் ஞாயிறு

21.01.2024

யோனா 3 : 1 - 5, 10,  

1 கொரி  7: 29 - 31, 

மாற்கு 1: 14 - 20.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

மாற்றம்

🔴நாம் வழிபடும் இறைவன் அன்பின் இறைவன், இரக்கத்தின் இறைவன், மன்னிக்கும் இறைவன்.

🟡நம் கடவுள் எல்லோருக்கும் எல்லாமுமானவர், வேறுபாடற்றவர்.

🔵நாம் நம் சுயநலத்தால் அவர் அன்பிலிருந்து விலகி, தீமையில் உழலும் போது, நம்மைத் தண்டித்துத் திருத்தி புது வாழ்வு தரவும் தயங்காதவர்.

🟣நாம் ஆண்டவரின் விருப்பப்படி மனமாறி புது வாழ்வு வாழ வழிபாடு அழைக்கிறது.

இன்றைய வழிபாடு நான்கு மாற்றங்களை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.

(i) யோனாவின் மாற்றம்

(ii) நினைவே மக்களின் மாற்றம்

(iii) கடவுளின் மாற்றம்

(iv) சீடர்களின் மாற்றம்

1. யோனாவின் மாற்றம்

♦️இன்றைய முதல் வாசகம், புற இனத்து மக்களாகிய அசிரியர்களையும் தன்  உரிமை சொத்தாக ஏற்கும் கடவுளின் அன்பும், இரக்கமும் ஒருபுறம்.

♦️மறுபுறம் புற இனத்து மக்களாகிய அசிரியர்கள் கடவுளின் அன்புக்கும், இரக்கத்திற்கும் தகுதியற்றவர்கள் என்ற யோனாவின் முன்சார்பு எண்ணமும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ன் யோனா அப்படி எண்ணம் கொண்டார்?

1. அசிரியர்கள் பலமுறை இஸ்ரயேல் நாட்டுடன் போர் தொடுத்து, இஸ்ரயேல் நாட்டைச் சூறையாடி அடுத்தவர்கள் என்பதாலும்

2. புறஇனத்தார் எல்லாரும் பாவிகள் எந்த சுயநல உணர்வாலும்

3. தான் பரிசேயன் என்ற மேட்டிமை  எண்ணத்தாலும்

4. நான் விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய கடவுளை வழிபடுகிறவன் என்ற ஆணவத்தாலும்.

யோனா 1:9 "நான் ஓர் எபிரேயன், நீரையும், நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்" என்ற எண்ணத்தாலும் நினிவே செல்ல மறத்தார். அதோடு நினிவே நகர் மக்கள் பொல்லாதவர்கள், சொல்பேச்சு கேளாதவர்கள், கொடியவர்கள், பிடிவாத குணமுடையவர்கள், முரடர்கள். எனவேதான் நினிவே போக மாட்டேன் என்ற எண்ணம் கொண்டார். எனவே யாருக்கும் தெரியாமல் நான் தார்சீஸ் -க்கு தப்பி ஓடிவிடுவேன் என்று முடிவெடுத்தார் செயல்படுத்தினார். ஆனால் ஆண்டவர் நம் எண்ணம், உணர்வு, சிந்தனை, செயல் எல்லாவற்றையும் அறிகிறார். அவர் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்ற உணர்வு யோனாவிற்கு அற்று போயிற்று. திபா. 139:2 "நான் அமர்வதையும், எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர். என் நினைவுகள் எல்லாம் தொலைவில் இருந்தே உய்த்துணர்கின்றீர்" என்பதை யோனா கடல் பயண அனுபவத்தால், அறிந்து கொண்ட போது, தன் எண்ணத்தை மாற்றி, ஆண்டவரின் கருவியாக நினிவே சென்று, ஆண்டவரின் வாக்கை அறிவித்தார்.

தன் எண்ணத்தை மாற்றிய யோனா, நினிவே மக்களும் மாற அழைக்கின்றார். யோனா கடவுளின் கரமாய் நினிவே மாநகரில் செயலாற்றினார்.

2. நினிவே மக்களின் மாற்றம்:

நினிவே நகரில் யோனா ஆண்டவரின் வாக்கை தீர்க்கமாக எடுத்துரைத்தார். யோனா 3:4 "இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்" யோனாவின் இந்த இறைவாக்கு எல்லாருடைய உள்ளத்தையும் அசைத்தது.

ஏதேசதிகாரம் கொண்ட மக்களை அடிமைப்படுத்தித் துன்புறுத்தி இன்பம் காணும், வாழ்வில் நெறித்தவறிய வழிகளை விட்டொழிந்தனர்.

திபா. 51:17 "கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே கடவுளே! நொறுங்கிய குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை" என்பதை உணர்ந்து யோனா 3:5 "நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர், சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்"

♦️இது நினிவே மக்களின் நல்ல மனதினை, மாற்றத்திற்கான முயற்சியாய் வெளிப்பட்டது.

♦️அரசு ஆணையாக நினிவே நகரத்தார்க்கு அறிவிக்கப்பட்ட செய்தி யாதெனில்

♦️மனித சாக்கு உடை உடுத்திக் கொள்ள வேண்டும் (சாக்கு - நம்மை எளிமைப்படுத்துவதன் அடையாளம்)

♦️எல்லாரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்.

♦️எல்லாரும் தீய செயல்களை விட்டொழிக்க வேண்டும்..

♦️நாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் கைவிட வேண்டும் என்பதாகும்.

எல்லாரும் அரசு ஆணையையும், யோனாவின் மாற்றத்திற்கான அழைப்பையும் ஏற்று தங்களை மாற்றத்திற்கு உட்படுத்தினர். புது வாழ்வுக்குக் கடந்தனர்.

எசேக்கியேல் 36:26 "நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்தேன் புதிய ஆவி உங்களுள் புகுத்துவேன். உங்கள் உடலில் இருந்து கல்லான இதயத்தை எடுத்து விட்டு சதையால் ஆன இதயத்தை பொருத்துவேன்" என்ற இறைவாக்கினர் எசேக்கியேலின் கூட்டுப்படை நினைவே மக்கள் புதிதாய் படைக்கப்பட்டனர்.

கல் - உணர்வற்றது

        - உயிரற்றது - இந்த நிலையிலிருந்து

சதை - உணர்வுடையது

           - ஈரமுடையது, கனிவுடைய நிலைக்கும்.

🟢புதிய ஆவி என்பது - புதிதாய் பிறப்பது, மொத்தத்தில் நினிவே மக்கள் புதிதாய் பிறப்பெடுத்தனர்.

3.  இறைவனின் மாற்றம்

எசேக்கியேல் 18:23 "உண்மையில் பொல்லாரின் சாவையே நான் விரும்புகிறேன்" அவர்கள் தம் வழிகளின்று திரும்பி வாழ வேண்டும், என்பதுதான் கடவுளின் உள ஆவல். எனவே கனிவும், பரிவும், இரக்கமும் கொண்ட இறைவன், கொடியவர்கள் தம் வழிமுறைகளையும் தீயவர்கள் தம் எண்ணங்களையும் விட்டு விட்டு, ஆண்டவரிடம் திரும்பி வர வேண்டும் என்று விரும்பினார்.

எசாயா 55:7 "அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும். அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார். அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும். ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்" என்பதற்கிணங்க, இறைவன் அவர்களை மன்னித்தார். ஏனெனில் இறைவன் லூக்கா 19:10 "இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்" என்பதற்கிங்க இனிதே மக்கள் தன் தீய வழிகளை விட்டபோது ஆண்டவர் உள்ளம் இரக்கத்தாலும், மன்னிப்பாலும் நிரம்பி வழிந்தது.

யோனா 3:10 "அவர்கள் தீய வழிகளின்று விலகியதை அவர் கண்டு தம் மனதை மாற்றிக் கொண்டார்" இவ்வாறு மனதை மாற்றிக் கொண்ட இறைவன்,

யோனா 4:11 "இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனோ" என்றால் இறைவன்.

கடவுளின் மனமாற்றம்

- பரிவாய்

- இரக்கமாய்

- மன்னிப்பாய்

- வாழ்வு வழங்குவதாய் வெளிப்பட்டது.

4. சீடர்களின் மாற்றம்

ஆண்டவர் இயேசு  - தன் இறையாச்சிப் பணியில் உடனுழைப்பாளர்களாய் சீடர்களை அழைத்தபோது, ஆண்டவர் அவர்களுக்கு விடுத்த அழைப்பு இரண்டு,

1. மன மாற்றமும்

2. நற்செய்தியை நம்புவதும்

மாற்கு 1:15 "காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அறைகூவல் விடுத்தார்.

கலிலேயா கடற்கரையில் எளிமையாய், மீன் பிடித் தொழில் செய்த சீமோன், அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரை அழைக்கின்றார்.

மாற்கு 1:17 "என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்பது ஆண்டவர் இயேசு விடுத்த அழைப்பு

♦️அழைத்தவர் யார்?

♦️எதற்காக அழைக்கிறார்?

♦️நாம் என்ன செய்யப் போகின்றோம்?

♦️நம் எதிர்காலம் என்ன?

♦️என்ன தொழில் செய்யப் போகின்றோம்?

♦️எங்கள் குடும்பம் என்ன ஆகும்? என்று சிந்தியாது அழைத்தவர் பின் அணித்திரண்டனர்.

மாற்கு 1:18 "உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரை பின்பற்றினார்"

♦️என்ன விட்டு விடுகின்றோம் என்பது முக்கியமல்ல மாறாக எத்தகைய மனநிலையில் விட்டு விடுகின்றோம் என்பது முக்கியம். ஏனெனில்

2 கொரி 9:7 "முக மலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்குரியவர்" என்பதற்கு இணங்க இவர்கள் தங்களையே ஆண்டவர் இயேசுவுக்குக் கொடுக்கும் மனநிலையில் மாற்றம் பெற்றனர்.

🟣தம்மோடு இணைந்து பணியாற்ற அழைத்த சீடர்களுக்கு ஆண்டவர் இயேசு, தம்மோடு இருக்கவும், நற்செய்தியை பறைசாற்றவும், பேய்களை ஓட்டவும் (தீமையை அழிக்க) அதிகார வழங்கி ஆற்றல் படுத்தினார் 

இன்று இறைவன் நம்மையும்

🟢மனம் மாறி நற்செய்தியை நம்பி இறை குடும்பத்திற்கு ஏற்ப வாழ அழைக்கின்றார்.

🔵யோனா - நினிவே நகரத்திற்கு விடுத்த அழைப்பும், இயேசு கலிலேயா, யூதேயா, சமாரியப் பகுதிகளில் எடுத்த அழைப்பும் இன்று நமக்கு விடுக்கப்படுகிறது.

🟣நினிவே மக்களைப்போல் பழைய வாழ்வை விட்டு புதிய வாழ்வுக்கு கடந்து போக தயாரா?

🟡சீடர்களைப் போல எந்த முன்சார்பு எண்ணமோ, எத்தகைய காரணமுமின்றி, திறந்த, எளிய மனத்தோடு இறைவன் குரலுக்கு செவிமடுக்கிறோமா

🔴புது வாழ்வுக்கான பயணத்தில் நம்மை நாம் புதுப்பித்து மாற்றம் கண்டு, இறையாட்சிக்கு உரியவராகவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment