Saturday, January 27, 2024

பொதுக்காலம் 4 - ம் ஞாயிறு மறையுரை -28.01.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 4 -ம் ஞாயிறு

21.01.2024

இணைச்சட்டம் 18 : 15 - 20,  

1 கொரி  7: 32 - 35, 

மாற்கு 1: 21 - 28.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

அதிகாரம் ஆற்றல் மிகு இறைவன்

🔴இறைவன் அந்தந்த காலங்களில் இறைவாக்கினர் வழியாக தம் திட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மோசே மேலானவராக விளங்கினார்.

🟢ஆற்றல் படைத்தவராக, சக்தி வாய்ந்தவராக, இறைத்திட்டங்களை எடுத்துரைக்கும் இறைவாக்கினராக மக்கள் மோசேயை பார்த்தனர்.

🔵இறைவாக்கினர் யாரெனில், தாங்கள் காட்சியில் கண்டதை இறைவனிடம் இருந்து கேட்டறிந்த உண்மைகளை, இறைவிருப்பத்தை மக்களுக்கு அச்சமின்றி அறிவிப்பவர்கள். 

🟡கடவுள் மோசேயிடம், அவரைப் போல் ஓர் இறைவாக்கினரை உருவாக்கப் போவதாகவும், அவர் ஆற்றில் மிக்கவராய் இருப்பார் என்றும், அவர் கடவுளின் திருவுளத்தையும் கடவுளின் வார்த்தைகளையும், மக்களுக்கு எடுத்துரைப்பார் என்று உறுதி கூறுகிறார்.

🟣அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இதனை இணைச்சட்டம் 18:15 "உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவில் நின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை   ஏற்படுத்துவார்" என்று கூறுகிறது.

🔴இந்த கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆற்றலை, அதிகாரத்தை நற்செய்தியாளர் மாற்கு 8 இடங்களில் எடுத்துக் கூறுகிறார்.

🟢இயேசுவின் அதிகாரம், ஆற்றல் கொண்ட போதனை, செயல்கள், எல்லாம் சமகாலத்து மறைநூல் அறிஞர்கள், இறைவாக்கினர்களிடம் இருந்து வேறுபட்டிருந்தது.

🟡ஆற்றல் படைத்த அதிகாரங்கள் நன்மை செய்வதற்கு ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

நிகழ்வு (2024 ஜனவரி ஊடக செய்தி)

தமிழகத்தின் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு விஜய கார்த்திகேயன் IAS. தான் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து பல நல்லப்  பணிகளை செய்து வருகின்றார். அவரின் சிந்தனையில் உருவான ஒரு நலத்திட்டம் "பிளாஸ்டிக் இல்லா திருப்பூர்" எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை சிந்திக்க ஆட்சியாளர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1324 அரசு பள்ளிகள், 600 தனியார் பள்ளிகள் இவற்றில் பயிலும் மாணாக்கர் மூலம் மாற்றம் ஏற்படுத்தலாம் என்று நினைத்த ஆட்சியர் இவ்வாறு அறிவித்தார். "ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் அந்த மாணவருக்கு படிப்பதற்கான நோட்டு, புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்" என்று எல்லா பள்ளிக்கூடங்கள் வழியாக எல்லா மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர் வீடுகளில் மிஞ்சும் பிளாஸ்டிக் பொருட்களை, எடுத்து வந்து, பள்ளியில் ஆசிரியர்களிடம் வழங்கி, நோட்டுப் புத்தகங்கள் வாங்கி பயன்படுகின்றனர்.

அதிகாரம் எல்லா ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது. ஆனால் இருக்கும் அதிகாரத்தை எப்படி ஆற்றில் மிகு செயல்பாட்டிற்குக் கொண்டு வருகின்றோம்? என்று சிந்திக்க வழிபாடு அழைக்கிறது.

ஆண்டவர் இயேசு இறையாட்சியை மக்கள் மத்தியில் எடுத்துரைத்த போது,  தந்தை கடவுள் தமக்கு அருளிய அதிகாரத்தை, ஆற்றலை மக்களின் நலங்களுக்காக அர்ப்பணம் செய்தார்.

திபா 10:38 "எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்"

🔵நோய்களைக் குணப்படுத்தி

🟡பேய்களை ஒட்டி

🟢பசித்தோருக்கு உணவளித்து

🔴தேவையில் இருந்தோருக்கு உதவி செய்து

🟣உள்மன காயங்களை ஆற்றி

🔵நன்மை செய்தார்

அதிகாரமும் ஆற்றல்மிகு பணியும்

இயேசு 👉 பதவி, செல்வாக்கு, அதிகாரம் நிறைந்த தலைமைக்கு ஒரு அல்ல.

இயேசு 👉 சட்டத்தை ஆழ்ந்து கற்று, தங்கள் வாசகப்பட்டைகளையும், குஞ்சங்களையும் பெரிதாக்கிய மறைநூல் அறிஞரும் அல்ல.

இயேசு 👉 பாரம்பரியமிக்க, லேவி, குருக்கள் குடும்பத்தில் பிறந்தவரும் அல்ல. சாதாரண தச்சன் மகன். நாசரேத்தைச் சார்ந்தவர். ஆனால் திருமறை அவரைக் குறித்துச் செல்லும் போது

யோவான் 1:3 "அனைத்தும் அவரால் உண்டாயின உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை" என்று. இவரே நமக்கு வழியும் உண்மையும் வாழ்வுமானவர். எனவே தான் இயேசு மக்களுக்கு வாழ்வு வழங்கும் பணியில் தன்னை முழுவதுமாய் இணைத்தார்.

இன்றைய நற்செய்தியில் தீய ஆவி பிடித்தவரை குணமாக்கும் இயேசுவின் செயலாற்றல் விளக்கப்படுகிறது. அவரின் போதனைகளை குறித்து மக்கள் சொல்லும் போது,

மாற்கு 1:22 "அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு கற்பித்து வந்தார்". இந்த அதிகாரம் தந்தை கடவுள் வழங்கியது. இது படைப்பு, உலகு, மனிதர் யாவற்றின் மீதும் உள்ள அதிகாரம். எனவே தான் தீய ஆவியிடம் "வாயை மூடு இவரை விட்டுப்போ" என்று இயேசு அகத்தியபோது அத்தீய ஆவி அவரை விட்டு வெளியேறியது. எனவே தான் மக்கள் வியந்து, திகைப்புற்று மாற்கு 1:27 "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே" என்று பேசிக் கொண்டனர்.

இயேசுவின் அதிகாரம்

பாவங்களை மன்னித்தது

மாற்கு 2:5 "மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

நோய்களைக் குணப்படுத்தியது

மாற்கு 2:11 "நீ எழுந்து உன்னுடைய படுக்கை எடுத்துக் கொண்டு உனது வீட்டிற்கு போ" என்பதன் வழியாக முடக்குவாத முற்றவன் எழுந்து நடந்தான்.

உயிர் கொடுத்தது

யோவான் 11:43 "லாசரே வெளியே வா" என்று அழைத்தபோது இறந்து மூன்று நாள் ஆன லாசர் உயிருடன் எழுந்தார்.

வாழ்வின் பாதையை மாற்றியது

மாற்கு 2:14 "என்னைப் பின்பற்றி வா" என்று ஆண்டவரால் அழைக்கப்பட்ட, சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த அல்பேயுவின் மகன் லேவி, புதிய பாதையில் பயணமானார்.

இயற்கையைக் கட்டுப்படுத்தியது

மத்தேயு 8:27 "காற்றும் கடலும் இவருக்கு கீழ்படிகின்றனவே இவர் எத்தகையவரோ" என்று இயேசு காற்றையும், கடலையும் அடக்கும்போது வியந்தனர். இவையெல்லாம் இயேசுவின் அதிகாரமிக்க, ஆற்றல் மிகு போதனைகளின் வெளிப்பாடுகள்.

தடைகளைத் தாண்டும் ஆற்றல்

இயேசுவின் இரக்கச்செயலால், பலர் நலமடைந்து முழுவாழ்வு பெற்றனர். தீமையை விளக்கும் போது அதிகாரத்தோடு செயலாற்றினர். இன்றைய நற்செய்தியில் தீய ஆவி பிடித்திருந்தவனை நலமாக்கும்போது அந்த தீய ஆவி இயேசுவிடம் மாற்கு 1:24 "நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்திய போது இயேசு வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ என்று அதட்டி வெளியேற்றினார்.

நேர்மையாய், உண்மையாய் இறையாற்றி பணி செய்யும் போது பலத்தடைகள் வரும். இயேசுவைப் புகழ்ந்து பேசுவது போல், தன்னை நிலைநிறுத்த பார்த்த தீயவன் அளிக்கப்பட்டான். அதுபோல கடவுள் நமக்குத் தந்த அதிகாரத்தை, ஆற்றலை உள்வாங்கி உண்மையான மனத்தோடு நல்லது செய்ய அழைக்கப்படுகின்றோம்.

இன்று நம் வாழ்வில் பல தீய சக்திகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. இயேசுவைப் போல், நாம் நன்மை செய்யாமல் இருப்பதே தீமையின் அடையாளம். இன்று நம்மிடம், பேராசை, பண ஆசை, பதவி வெறி, அதிகார வெறி. பிறரை அடக்கி ஆளும் தன்மை, பிறரின் மனித உணர்வுகளை மதியாமை, பணித்தலங்களில் லஞ்சம் வாங்குதல், பணி தாமதம் செய்து காலத்தை விரயம் செய்தல், குடும்பங்களில் வரதட்சணை பேய் போன்றவை நம்மை நாம் வாழும் சமூகத்தை ஆட்டிப் படைக்கும் போது அவற்றை அதிகாரத்தோடு, துணிந்து அப்புறப்படுத்த முன் வருகின்றோமா?

நமக்கு அல்லது நாம் பெற்றுக் கொண்ட திறமைகள் மூலம், தீயவற்றை புறந்தள்ள விழைகின்றோமா?

கடவுளுக்குப் பணிந்து வாழ்ந்து, அலகையை எதிர்த்து நின்றால் அது நம்மை விட்டும், நாம் வாழும் சமூகத்தை விட்டும் விலகும். அதை அதிகாரத்தோடும், துணிவோடும் மாற்ற நாம் முன்வருகின்றோமா?

யாக்கோபு 4:17 "நன்மை செய்ய ஒருவருக்கு தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால் அது பாவம்" என்பதை உணர்ந்து செயல்படுவோம்! 

இறையாட்சியில் ஆற்றல்மிகு செயல்வீரர் ஆவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment