Saturday, April 6, 2024

பாஸ்கா காலம் 2- ஆம் ஞாயிறு மறையுரை -07.04.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பாஸ்கா 2-ஆம் ஞாயிறு

07.04.2024

திருத்தூதர் பணிகள் 4: 32 - 35,

1 யோவான் 5:1 - 6,

யோவான் 20:19 - 31.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நம்பிக்கை இரக்கமாய் வெளிப்படட்டும்

🔵இயேசு அவரது இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் வழியாக நாம் அவரது மாட்சியில் பங்குபெற வேண்டும் என விரும்பினார்.

🟣கலக்கம் தவிர்த்து - ஆழமான நம்பிக்கைக்கொள்ள பணித்தார்.

🟡 இயேசு உண்மையான, நிலையான அமைதி தர வந்தவர்.

🔴தொலைக்காட்சி, அலைப்பேசி, வலைதளம் போன்ற ஊடகங்களில் தொலைந்தவர்களுக்கு இயேசு வழியும், பாதையும், இலக்கும் ஆனார்.

🟡தந்தையிடம் போக வழி தெரியாது என்று தவித்த தோமாவிற்கு வழியும் உண்மையும், வாழ்வும் நானே என்று தெளிவுபடுத்தி, என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை என்பதை உறுதிபட உரக்கச் சொன்னார்.

🔵 இயேசு காட்டிய வழியில் நம்பிக்கையோடு பயணப்பட்டால் பணிகள் எளிதாய் அமையும்.

🟣இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தால் கழுவப்பட்டு, அவரது காயங்கள் வழியாக தந்தையின் மாட்சியைப் பெற முயன்றவர் புனித தோமா.

🔴இயேசுவை எந்த அளவிற்கு நேசித்தார் எனில் "நாமும் செல்வோம் அவரோடு இறப்போம்" (யோவான் 11:16) என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் அப்போஸ்தலராக வந்து கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாய் மடிந்தவர்.

🟢தோமா என்ற விசுவாச விருட்சத்தின் விதைகள் நாம்.

🟡நம் நம்பிக்கை, செயல்களில் இரக்கமாய் வெளிப்படட்டும்.

நிகழ்வு : 1 (2024 மார்ச் மாத ஊடகச் செய்தி)

உத்திரபிரதேசம் மாநிலம், கயான்சிங், கிரிராஜ்குமாரி ஆகிய பெற்றோருக்கு மகனாய் பிறந்தவர் சுபோத்சிங். சிறுவனாய் இருக்கும் போது அவரின் தாய், ஏழைகளுக்கு இரங்கி உதவ வேண்டும் என்று கற்றுத் தந்தார். நான் என் தாயின் அறிவுரையை ஏற்று, கல்வி கற்றேன். மருத்துவராகி சிறப்பு பாடமாக பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணராக மாறிய டாக்டர். சுபோத்சிங் இதுவரை 37,000 அறுவை சிகிச்சை இலவசமாக நடத்தியிருக்கிறார். ஒரு அறுவை சிகிச்சைப் பண்ணவே காசு பிடுங்கும் உலகத்தில் 37,000 அறுவை சிகிச்சை இலவசமாய் புரிந்த மருத்துவர் ஏழையின் தெய்வம் தான்.

நிகழ்ச்சி : 2

திருச்சியில் கிறிஸ்தவர்கள் நடத்தும் முதியோர் காப்பகம். பெரியார் அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போதைய திருச்சி ஆயர், தந்தை பெரியாரிடம் நீங்கள் கடவுளையும், சமயத்தையும் நம்பாதவர்கள் . ஏன் இந்த சமய சார்புடைய நிகழ்வில் கலந்து கொண்டீர்கள் என்று கேட்டார்.

தந்தை பெரியார் இவ்வாறு சொன்னார். நான் மக்கள் மீது அக்கறை இல்லாத சமயத்தையும், மக்களின் கண்ணீரைப் போக்காத கடவுளையும், மக்கள் மடியும் போது மகிழ்வோடு ஆண்டவனை வழிபடும் மக்களையும் வெறுக்கிறேன். மக்கள் நல்வாழ்வுப் பணிகளில், இரக்கச் செயல்களில் நான் கடவுளை காண்கிறேன் என்றார். இன்றைய வழிபாடு, இரக்கத்தின் ஞாயிறு இதனைத் தான் நமக்கு உணர்த்துகிறது.

🔵பிறரின் வேதனைகள், துன்பங்களை நமது வேதனை துன்பங்களாக ஏற்கும் மனப்பக்குவம்.

🟣பிறரின் தேவைகளைப் புரிந்து அதனை நிறைவு செய்ய உழைக்கும் மனநிலை - நம்பிக்கைக் கொண்டோரின் செயல்களாக அமைகிறது.

🔴இன்றைய முதல் வாசகம், ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்ட, தொடக்க கால மக்களின் மனநிலை, செயல்பாடு பற்றி விளக்குகிறது.

🟢கடவுளை நாம் நம்பும்போது, கடவுளில் நாம் நிலைக்கும் போது

(i) பிறரன்பு பணிகளிலும்

(ii) பிறர் நலப்பணிகளிலும் - நம்மை நாம் இணைத்துக் கொள்வோம்.

(i) பிறரன்பு பணி

♦️உடைமைகள் பொதுவாய் வைத்தல், நட்போடு உறவாடல், அப்பத்தைப் பிறருக்காய் பகிர்தல், உடைமைகளை பொதுவாய் வைத்தல், ஒவ்வொரு நாளும் பேருவகையோடு, எளிய உள்ளத்தோடு உணவைப் பிறரோடு பகிர்ந்து மகிழ்வது, தேவையில் உழல்வோர் எவரும் இல்லை என்ற நிலையில் சமூகத்தைக் கட்டமைப்பது.

(ii) பிறர் நலப்பணி

பிறர் நலப்பணி என்பது, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு பேதுரு, யோவான் இறைவேண்டல் செய்ய எருசலேம் ஆலயம் செல்கின்றனர். பிறவியிலேயே கால் ஊனமுற்றவரைச் சுமந்து வருகின்றனர் பிச்சை எடுப்பதற்காக. பேதுரு அவர் மீது இரங்குகிறார்.

திபணி 3:5 "பேதுரு அவரிடம் வெள்ளியும், பொன்னும் என்னிடமில்லை. என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" என்று கூறி கையைப் பிடித்து தூக்கி விடுவதைப் பார்க்கின்றோம்.

🔵பேதுரு, யோவானைப் போல் கிறிஸ்துவை நம்பி, கிறிஸ்துவை இந்த சமூகத்திற்கு சுமந்து செல்லும் மக்களாகவும் அதன் வழி பிறர் வாழ்வில் ஒளி ஏற்றவும் வழிபாடு அழைக்கிறது.

கலா . 2:26 "அன்பின் வழியாய் செயலாற்றும் நம்பிக்கை" என்கிறார் தூய பவுல்.

நம்பிக்கை 

♦️அன்பை அவனியில் விதைக்கும்.

♦️செயலாக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

யாக்கோபு 2:17 "நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாகும்"

நாம் நம்பிக்கையை யார் மீது வைப்பது?

எபி 12: 2 "நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும், அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்"

இன்றைய நற்செய்தியில் - அல்லல்பட்டு உழன்று, பயந்து இலட்சியத்தை இழந்த, வாழ்வில் நம்பிக்கை அற்றுப்போன சீடர்களுக்கு இயேசு தோன்றி

🔵அமைதியை வழங்கி

🟣தூய ஆவியைப் பொழிகிறார்

🔴பாவங்களை மன்னிக்கும் ஆற்றல் வழங்கி

🟢விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறார்

🟡நம்பிக்கையே சாட்சிய, பணி வாழ்வின் அடிப்படை. எனவே நம்பிக்கை அற்றோராய் , பயந்து இலட்சியத்தை தொலைத்து விடாமல், உறுதியாய் உண்மையாய் சான்று பகர அழைக்கிறார்.

🔵விசுவாச தளர்வுற்ற தோமா, ஆண்டவரைக் கண்டு, அவரை சுவைத்த பின்பு

யோவான் 20:28 "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" என்று சான்று பகர்வதைப் பார்க்கின்றோம்.

🟣பயம், சந்தேகம், செயலற்றத்தன்மை - ஆகியவை ஆண்டவர் இயேசுவால் பொழியப்பட்ட தூய ஆவியாரில் மறைந்து போயிற்று, உண்மையை உணர்த்தி நம்பிக்கையில் உறுதியுடன் பயணிக்கவும், சான்று பகரவும், சக்திப்படுத்துகிறார் தூய ஆவியார்.

இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு :

🟣இந்த சமூகத்தை நேசிக்க, அன்பு செய்ய, சமூக ஏற்றத்தாழ்வு மறைய உழைக்க அழைக்கிறது.

1யோ 3:18 "நம் சொல்லிலும், பேச்சிலும் அல்ல செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.

🔴பசித்தோருக்கு, உணவளித்து, தாகமாய் இருப்போருக்கு - தாகம் தணித்து, அன்னியரை ஏற்று அன்பு செய்து, ஆடையின்றி இருப்போரே நல்ல மதிப்பீட்டு என்னும் ஆடையால் உடுத்தி, நோயுற்றவரை - சீர்பட எடுத்து ஏற்றுக்கொள்ளும் இரக்கச் செயல்களில் மிளிர்கிறார். கிறிஸ்துவுக்குச் சான்று பகரப்படுகிறது.

மத் 25:40 "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்"

🟢நம்பிக்கை இரக்கமாய் வெளிப்படட்டும் இரக்கம் - தந்தையின் ஆசிக்கு உரியவராய் நம்மை மாற்றட்டும்!

🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment