Friday, April 12, 2024

பாஸ்கா காலம் 3- ஆம் ஞாயிறு மறையுரை -14.04.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பாஸ்கா 3-ஆம் ஞாயிறு

14.04.2024

திபணி. 3: 13 - 15, 17 - 19,

1 யோவான் 2:1 - 5,

லுக்கா 24: 35-48.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நீங்கள் என் சாட்சிகள்

யார் சான்று பகர்வார்?

எவர் ஒருவர் ஒரு மனிதரோடு பழகி, அந்த மனிதரின் உணர்வுகளோடு கலந்து, எல்லாமுமாய் ஆனால், சுயமாய் தன் அனுபவத்தைப் பிறருக்கு எடுத்துரைப்பார்.

🟡இவர்களிடையே நல்ல நட்பு, நல்ல சிந்தனை, நல்ல புரிதல், பிறரை குறித்த அக்கறை இருக்கும்.

🔵இன்றைய வழிபாட்டில் தாங்கள் அனுபவித்த ஆண்டவர் இயேசுவைக் குறித்து திருத்தூதர்கள் சான்று பகர்ந்தனர்.

🟢வாழ்வின் நடைமுறை, செயல்பாடுகள் ஒருவர் பெற்றுக்கொண்ட அனுபவத்தைப் புலப்படுத்தும்.

🔴இயேசுவின் சீடர்களைப் போன்று நாமும் உயிர்த்த இயேசுவின் இறையனுபவம் பெற்று கிறிஸ்துவுக்கு நம்வாழ்வு, செயல் இவற்றால் சான்று பகர அழைக்கப்படுகின்றோம்.

நிகழ்வு

ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த துப்புரவுப் பணியாளர் ஆசா காந்தாரா. திருமணமாகி ஒரு சில வருடங்களிலே, திருமண வாழ்வு முறிவுற, தன் பிள்ளைகளை வளர்த்தெடுக்க துப்புரவு பணியை செய்து வந்தார். நேர்மையாக உழைத்தும், உயரதிகாரிகளின் வசை மொழிக்கும் கடுஞ்சொல்லுக்கும் உள்ளானார். ஒரு நாள் ஒரு உயர் அதிகாரி ஆசா காந்தாராவைப் பார்த்து நீ என்ன கலெக்டரா? இல்லை பெரிய அதிகாரியா? என்று ஏளனமாக திட்டியது அவருடைய ஆளுமையை சிதைத்ததைப் போன்று உணர்ந்தார். உயர் அதிகாரிகள் கேலிப் பேச்சு, வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற உந்துதலை வழங்கியது. காலையில் துப்புரவு பணியாளராகப் பணிபுரிந்து கொண்டு, மாலையில் பட்டப்படிப்பை முடித்தார். இராஜஸ்தான் நிர்வாக சேவைகள் (RAS) என்ற தேர்வுக்குத் தன்னை தயார்படுத்தினார். RAS தேர்வில் வெற்றிப் பெற்றார். இராஜஸ்தான் மாநில அரசு அவரை மாவட்ட உதவி ஆட்சியராக பணி நியமனம் செய்தது. துப்புரவு தொழிலாளியாக இருந்து, மாவட்ட உதவி ஆட்சியராக உயர்ந்த ஆசா காந்தாரா முயன்றால் முன்னிலை பெற முடியும் என்பதற்கும், நம் உணர்வுகளை பிறர் காயப்படுத்தும் போது கருகிப் போகாமல் பீனிக்ஸ் பறவையாய் மீண்டௌ முடியும் என்பதற்கும் சான்றாய் அமைகிறார்.

இன்றைய வழிபாடு ஆண்டவர் இயேசுவின் பாடுகளுக்குப் பிறகு, திசைமாறி, கொள்கை இழந்து, கொண்டதே கோலம் என இருந்த சீடர்களை, ஆண்டவர் இயேசு தன் உயிர்ப்பாலும், தூய ஆவியின் அருட்பொழிவாலும், உறுதிப்படுத்தப்பட்ட பின்பு ஆண்டவர் இயேசுவுக்கு உயிருள்ள சாட்சிகளாய் மாறினார்கள்.

இயேசுவைக் குறித்துச் சான்று பகர்ந்த பேதுரு நாங்கள் யாரைக் குறித்து சான்று பார்க்கின்றோம் எனில்

(i) தூய்மையும் நேர்மையுமானவரை குறித்தும்  (திபணி.  3:14)

(ii) வாழ்வுக்கு ஊற்றானவரை குறித்தும் (திபணி.  3:15)

(iii) நம் பாவங்களுக்கு கழுவையாய் மாறியவரும்   (1 யோ.  2:2)

(iv) அனைத்து உலகின் பாவங்களின் கருவாயாய் (1யோ 2:2) வந்த உன்னத மீட்பராகிய இயேசுவுக்குச் சான்று பகர்த்தனர்.

🟣இப்படி இயேசுவைக் குறித்து சீடர்கள் சான்று பகர்ந்ததைப் போல் நாமும் சான்று பகர அழைக்கப்படுகின்றோம்.

🔴நாம் சான்று பகர இரு அடிப்படைக் காரியங்கள் நமக்குத் தேவை

1. சீடர்களைப் போல் நாமும் அவரோடு இருக்க வேண்டும்

2. சீடர்களைப் போல் நாமும் அவரை சுவைக்க வேண்டும்

1. அவரோடு இருத்தல்

ஆண்டவர் இயேசு சீடர்களை அழைத்த போது அவர்களுக்கு வழங்கிய முதல் அறிவுரை அவரோடு இருப்பது தான்

மாற்கு 3:14 "தம்மோடு இருக்கவும்" என்பது

🟢கிறிஸ்துவின் பிள்ளைகள், சீடர்கள், பணி செய்வோா் யாராயினும் அவரோடு இணைதல் முக்கியம். எப்படி இணைய வேண்டும்?

யோவான் 10:30 "நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கின்றோம்" என்பது போல கிறிஸ்துவோடு ஒன்றாக அழைக்கிறார்.

யோவான் 14:9 "என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்" என்ற இறைவார்த்தை இயேசுவின் அப்பா அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.

ஏன் இணைய வேண்டும்

யோவான் 15 : 5 "ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனித்தருவார்"

கனி தருதல் என்பது பலன் கொடுத்தல். இதுதான் சான்று வாழ்வு.

🔵நாம் கிறிஸ்துவோடு இணைதல் என்பதே, பலன் கொடுக்க.

கிறிஸ்துவோடு இணையவில்லை எனில் பயன்தர இயலாது

யோவான் 15 : 8 "நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சியாகிறது"

மிகுந்த கனி கொடுத்தல் சாட்சிய வாழ்வின் உச்ச நிலை

2. ஆண்டவரை சுவைப்பது

திபா. 34:8 "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" இது தாவீதின் சான்று.

கலா 2:20 "வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்து வாழ்கிறார்" இது பவுலின் சான்று.

யோவான் 20:28 "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" இது தோமாவின் சான்று. இவர்கள் கடவுளை அனுபவமாக்கி வாழ்ந்தவர்கள்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு உள்ளம் கலங்கி சோர்வுற்ற சீடர்களிடம்

லூக் 24:39 "என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள் நானே தான் என்னை தொட்டுப்பாருங்கள்" இவ்வாறு சீடர்கள் உடனிருந்து தொட்டு அனுபவமாக்கி, சுவைத்த இயேசுவுக்குச் சான்று பகர தான் நாம் அழைக்கப்படுகின்றோம்.

திபணி. 4:20 "என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க எங்களால் முடியாது" என்ற பேதுருவின் கூற்று, உயிர்த்த இயேசுவை அறிமுகமாக்கிய பின் கூறிய சான்று.

இன்றைய நற்செய்தியில் உயிர்ப்பின் அனுபவத்திற்கும் நீங்கள் சாட்சிகள் என்று உறுதிப்படுத்தினார் எனில் நாம் நம்மை ஆய்வு செய்வோம்.

(i) நாம் அவரோடு இருக்கிறோமா?

(ii) நாம் கிறிஸ்துவை சுவைக்கிறோமா?

நம் வாழ்வில்

🔴மனிதரை ஆட்டிப்படைக்கும் நோய்கள் யாதெனில், பயம், கவலை சீடர்களை அதிகமே ஆட்கொண்டது. இயேசு அனுபவம் பெற்ற பிறகு துணிந்து சான்று பகர்ந்தனர். நாம் துணிவோடு சான்று பகர தயாரா ?

🟣கிறிஸ்து அவருக்கு சான்று பகர அழைக்கும் போது நம் செயல்பாடுகள் கிறிஸ்துவை இந்த உலகிற்கு வழங்குவதாய் அமைகிறதா?

🔵மக்கள் நலனில் அக்கறை உள்ள, சென்ற இடமெல்லாம் நன்மை செய்த கிறிஸ்துவின் மனநிலை, நான் பெற்றிருக்கிறேனா?

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment