Friday, May 31, 2024

கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா- ஞாயிறு மறையுரை -02.06.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

🔴மூவொரு கடவுள் பெருவிழா

02.06.2024

விப 24:3-8,  

எபிரேயர் 9: 11 - 15,

மாற்கு 14: 12 - 16, 22 - 26.

🔴அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

🔴மீட்பின் அடையாளம் நற்கருணை

🟢இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய பாஸ்கா உணவு என்பது விடுதலைப் பெற்று பயணப்பட்ட விடுதலைப் பயணத்தை நினைவு கூர்வது.

🟣எபிரேயர்களை மீட்க, இரத்தம் தெளிக்கப்பட்ட கதவு நிலைகளை கடந்து சென்று எகிப்திய தலைச்சன் பிள்ளைகளை கடவுள் அருளால் தூதர் வீழ்த்தினார் என்பது பழைய பாஸ்கா .

🟡புதிய இஸ்ரயேலராகிய நமக்கு ஆண்டவர் இயேசு வழங்கிய நற்கருணை புதிய பாஸ்காவாக மலர்கிறது.

🔴தொடக்கக் கால திரு அவையில் நற்கருணை விருந்து புதிய பாஸ்கா விருந்தாக அடையாளம் பெறுகிறது.

🔵ஆண்டவர் இயேசுவின் பாடு, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் அருட்சாதன அடையாளமாகிய கிறிஸ்துவின் திருரத்தமாகிய மறைபொருள் மக்களை பாவ இருள் நிலையிலிருந்து அருள் வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் பாஸ்கா உணவாகிறது.

🔴நிகழ்வு

ருமேனிய அரசு "புளோரெஸ்கியு" என்பவரை கிறிஸ்தவர் என்பதற்காக சிறையில் அடைத்தது. கிறிஸ்தவர்கள் ஒளிந்திருக்கும் இடங்களைக் காட்டிக் கொடுக்க கேட்டதற்கு மறுத்தார். இரண்டு வாரம் உட்கார முடியாதபடி நிறுத்தி வைத்தார்கள். அதோடு அவரது 14 வயது மகனை பிடித்து கட்டி அவரின் முன் நிறுத்தி தடியால் அடித்தார்கள். மகனை மீட்க "புளோரெஷ்கியு" தயாரான போது, 14 வயது மகன் தந்தையை உறுதிப்படுத்தினான். இறுதியில் அந்தச் சிறுவன் தந்தையின் கண்ணெதிரில் அடித்துக் கொல்லப்பட்டான். ருமேனிய நாட்டு கிறிஸ்தவர்களை காக்க மீட்க புளோரிஷ்கியு தன் மகனை பலியாக தியாகம் செய்ய வேண்டியிருந்தது.

🟢உலக மக்களை பாவ அடிமை நிலையிலிருந்து மீட்க தந்தை கடவுள் தன் மகனை தியாக, மீட்பின் கருவியாக பலியாக்கினார்.

🟣இயேசு தன்னை நிலை வாழ்வின், மீட்பின் உணவாக தன்னை மாற்றினார்.

🔴இயேசு தன்னை மீட்பின் உணவாக மாற்ற வேண்டிய தேவை என்ன?

🔴தன்னை பலியாகப் படைக்க வேண்டியதன் தேவை என்ன?

எரே 2:13 "ஏனெனில் என் மக்கள் இரண்டுத் தீச்செயல்களை செய்தார்கள். பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள். தண்ணீர் தேங்காத உடைந்த குட்டைகளைத் தங்களுக்கு என்று வைத்துக் கொண்டார்கள்.


♦️வாழ்வு தரும் கடவுளை புறக்கணித்தார்கள்.

♦️பிற தெய்வங்களை வழிபட்டார்கள். எனவே ஆண்டவர் அவர்களை எகிப்தியர், பாபிலோனியர், அசீரியர், உரோமையர் போன்றோரின் கைகளில் அடிமைகளாக ஒப்படைத்தார்.

♦️அடிமைதளையின் வலிகள் அதிகமாகவே, தங்கள் நாட்டை, கடவுளை, வழிபாடுகளை நினைத்து புலம்பினார்கள், அழுதார்கள்.

திபா. 137:1 "பாபிலோனின் ஆறுகளுக்கருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்" என்றும்

விப 2:23 "இஸ்ரயேல் மக்களோ அடிமைத்தனத்தால் அழுது புலம்பினர். அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அவர்களது முறையீடு கடவுளை நோக்கி எழும்பிற்று" ஆகிய இறைவார்த்தைகள் வழி இஸ்ரயேல் மக்களின் அடிமை வாழ்வு புலப்படுகிறது. அவர்களை மீட்கத்திருவுளம் கொண்ட கடவுள் மோசேயை கருவியாகத் தெரிந்து கொண்டார். மோசேயை அழைத்த போது

விப. 3:7 "எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்" எனவே அவர்களை மீட்க உன்னை ஏற்படுத்துகிறேன் என்று சொல்லி தான் மோசேயை அழைத்தார். மோசே வழியாக வாழ்வின் நாட்டிற்க்கு அழைத்துச் செல்லப்பட்ட இஸ்ரயேலின் பன்னிருகுலத்தோரும் மோசே முன்னிலையில் கடவுளோடு செய்த உடன்படிக்கையையும், அந்த உடன்படிக்கையை இரத்தத்தால் உறுதிப்படுத்தியதையும் இன்றைய முதல் வாசகம் உணர்த்துகிறது.

🟣இஸ்ரயேல் மக்கள் மாடுகளை நல்லுறவு பலிகளாக ஆண்டவருக்கு பலியிட்டனர். அதன் இரத்தத்தை

🔴பலிபீடத்தின் மீதும் தெளித்தனர்.

🔴மக்கள் மீதும் தெளித்தார்.

🟣ஏன் பலிபீடத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டது.

விப . 24:6 "மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்து கலங்களில் விட்டு வைத்தார். மறுபாதியை பலிபீடத்தின் மீது தெளித்தார்"

பலிபீடம்    - இறைவனின் உடனிருப்பை, இறைபிரசன்னத்தை உணர்த்தும் அடையாளம்.

இரத்தம் - உயிரின் அடையாளம்

♦️தெளிக்கப்பட்ட இரத்தம் - இறைவன் தன் உயிர்மீது ஆணையிட்டு,  தாம் ஏற்படுத்திய உடன்படிக்கையை நிறைவேற்றுவார் என்பதை உணர்த்துகிறது.

♦️இறைவன் - தன் வாக்கு மாறுவதில்லை, தான் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாய் இருப்பார்.

திபா 91:4 "அவரது உண்மையை (தவறாத அவருடைய வார்த்தை) கேடயமும், கவசமும் ஆகும்" என்ற இறைவார்த்தை இறைவன் சொன்ன சொல் மாறாதவர் என்பதை உணர்ந்து, இஸ்ரயேல் மக்களும்  விப 24:7"ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்தி கீழ்படிந்திருந்தோம்" என்று வாக்குறுதி கொடுத்ததை உணர்த்தி நிற்கிறது.

🟣ஏன் மக்கள் மீது இரத்தம் தெளிக்கப்பட்டது?

இன்றைய முதல் வாசகத்தின் இறுதி வார்த்தை

விப 3:8"மோசே இரத்தத்தை எடுத்து மக்கள் மேல் தெளித்து இவனைத்து வார்த்தைக்கிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" என்றார். இது மக்கள் தாங்கள் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு உட்பட்டு நடக்கும் உறுதிப்பாட்டை உணர்த்துகிறது.

🔴இரத்தம் உயிரின் அடையாளமாதலால், தங்கள் உயிரால் ஆணையிட்டு கூறும் பிரமாணிக்கத்தை எடுத்தியம்புகிறது. இறைவன் பிரமாணிக்கமாய் இருப்பது போல் நாமும் பிரமாணிக்கமாய் கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவர்களாய் விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

🟣மீட்பின் உணவான நற்கருணை

இயேசு சீடர்களோடு பாஸ்கா உணவு உண்ணும் போது, தம் சீடர்களின் மனக்கலக்கத்தை புரிந்து கொண்ட இயேசு, அவர்கள் திக்கற்றவர்களாக, தவிக்காமல் இருக்க அந்த இரவு விருந்திலே அப்பத்தை  - தன் உடலாகவும், ரசத்தை - தன் இரத்தமாகவும் மாற்றி திருத்தூதர்களுக்கு உண்ண, பருக வழங்கினார். இது தன்னை உடைத்து, உங்களை மீட்கிறேன் என்பதன் அடையாளமாய் அமைந்தது. தூய பேதுரு தூய வாழ்வுக்கான அழைப்பை விடுக்கும்போது, வழிவழியாய் வந்த வீணான நடத்தையின்று நம்மை மீட்க கொடுக்கப்பட்ட விலை என்னவென்றால்

1பேதுரு 1:19 "மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயிர் மதிப்புள்ள இரத்தமாகும்" என்று அறிவுறுத்துகிறார்.

கிண்ணத்தில் பருகுதல் என்பது நாம் பிறரோடு கொள்ளும் உறவை குறிக்கும். இயேசுவின் உடலை உண்டு, இரத்தத்தை பருகும் போது நாம் கிறிஸ்துவோடு இணைகின்றோம்.

🟢நற்கருணை உணவு மட்டுமல்ல, மாறாக நம்மை மீட்கும் பலியாகவும் அமைகிறது.

🔵தானே நித்திய குருவாக, பலிப்பொருளாய், பலிபீடமாய் விளங்கி புதிய உடன்படிக்கையை தனது இரத்தத்தால் உறுதிப்படுத்தினார்.

🔴இது என்றோ முடிந்து போனது அல்ல. மாறாக இந்த தியாக, மீட்பின் பலி எந்நாளும் நம் வாழ்வோடு ஒன்றாக வேண்டும் என்பதற்காகவே இதை நினைவாக செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.

🟣நற்கருணை நமது வாழ்வின் பலி

🟢நற்கருணை நமக்கு வாழ்வு தரும் உணவு

🔴நாம் உண்ணும் உணவு, நம் உடலோடு இரண்டறக் கலந்து நம்மை வலுப்படுத்துகிறது.

🟣நற்கருணை என்னும் நிலைவாழ்வின் உணவு நம்மை இயேசுவாக மாற்றுகிறதா?

🟡இயேசுவின் அன்பும், தியாகமும், பரிவிரக்கமும், பொறுமையும், மன்னிக்கும் மனமும், நன்மை செய்யும் உயரியப் பண்பும் நமதாக வேண்டும்.

🟢கிறிஸ்துவின் இரத்தம் நம் பாவத்தைக் கழுவி தூய்மையாக்குகிறது. புனிதப்படுத்துகிறது, புதுப்படைப்பாக்குகிறது எனவேதான் திரு. எண் 11 "கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சியும் நற்கருணை" என்று கூறுகிறது.

🟣நற்கருணை பலி

🔴ஒற்றுமையின் அடையாளம்

🔴இரக்கத்தின் அடையாளம்

🔴தியாகத்தின் அடையாளம்

🔴தன்னலமற்ற அன்பின் அடையாளம்

🔴மன்னிப்பின் அடையாளம்

🟢இந்த விருந்தில் பங்கு கொள்ளும் நாம் ஆண்டவர் இயேசுவின் பிரதிபலிப்பாக மறுகிறிஸ்துவாக செயல்படுகிறோமா?

🟡குடும்பத்தில் பரிமாறிய வாக்குறுதியில் நிலைத்திருக்கிறோமா?

🟣துறவற, குருத்துவ வார்த்தைப்பாடுகளில் வாழ்வின் பொருள் காண்கிறோமா?

🔵எனவே கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பெற்று மறுகிறிஸ்துவாக நம்மை உரு மாற்றுவோம்!

🔴உடல், உறுப்பு தானங்களால் பிறருக்கு வாழ்வு வழங்கும் அறச்செயல்கள் வழி கிறிஸ்துவை உலகிற்கு வழங்குவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment