👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
பொதுக்காலம் 14-ம் ஞாயிறு
07.07.2024
எசேக்கியேல் 2: 2 - 5,
2 கொரி 12: 7 - 10,
மாற்கு 6: 1- 6.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
🔴நம்முடன் வாழ்கிறவர்களை நாம் உள்ளன்போடு ஏற்றுக்கொள்கிறோமா?
🟣பிறரின் நற்பண்புகள், திறமைகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேனா?
🔵பிறரின் பலவீனங்களைச் சொல்லி, ஏளனப் பொருளாய் அவர்களைப் பார்க்கிறேனா?
🟡உள்ளொன்று வைத்து புறமொன்றுப் பேசித் திரிகிறேனா?
🟢பிறரைக் குறித்து உயர்வான எண்ணம் உடையவராய் திகழ்கிறேனா,
🔴பிறரும் கடவுளின் சாயல், என் அயலான், என் சகோதரன் என்ற எண்ணம் கொண்டு, வாழ்வில் மானுடம் மதிக்கும் மானுடம் போற்றும் செயல்களில் ஈடுபடுகிறேனா என்று சிந்திக்க வழிபாடு அழைக்கிறது.
நிகழ்வு
குளச்சல் அருகே ரீத்தாப்புறம் என்ற சிறிய கிராமம். ஒரு குடும்பத்தில் பெற்றோருக்குப் பிறந்தக் குழந்தை ஊனமாய் இருந்தது. உடல் ஊனமே தவிர உள்ளம் எழுச்சி மிக்கதாய் இருந்தது. 5 வயதாகிய போது எல்லா குழந்தைகளைப் போன்றும் குழந்தையும் பள்ளிக்குப் போக துடித்தது. குழந்தைகள் விருப்பை நிறைவேற்ற துடித்தது. குழந்தையின் விருப்பை நிறைவேற்ற தாய் தினமும் காலை 3 கிலோமீட்டர், மாலை 3 கிலோ மீட்டர் தூரம் குழந்தையை பள்ளிக்கு தூக்கி சுமப்பாள், அக்குழந்தை பள்ளிக்கூடம் செல்ல பலர் அக்குழந்தையை, சப்பாணி, நொண்டி இதுக்குப் படிப்பு ஒரு கேடா? என்று இழந்தனர். ஆனால் அக்குழந்தையும், குழந்தையின் தாயும் மனம் காயப்பட்டாலும், தங்கள் முயற்சியை வலுவாக்கினர். குழந்தை நன்றாக பாடுவான், பேசுவான், கலைகளில் சிறந்து விளங்கினான். கல்வி கற்று இந்தியன் வங்கியில் வேலைப் பார்த்தார். அவரின் முயற்சி, திறமைகளைப் பாராட்டி தமிழக அரசு 20.01.2011 கலை மாமணி விருது வழங்கிப் பாராட்டியது. அவரிடம் இந்த விருதை யாருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவரின் பதில் இவ்வாறு அமைந்தது.
1. என் தாய் : தினமும் 6 கிலோ மீட்டர் என்னைத் தூக்கி சுமந்து எனக்கு கல்வியைத் தந்து, என்னை வளர்த்து ஆளாக்கியவருக்கு.
2. என் மனைவி : எல்லா பெண்களும் தன் கணவர் தன்னைவிட சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பும்போது பட்டம் பயின்ற ஒரு பெண் ஊனமான என்னை ஏற்று எனக்கு வாழ்வு வழங்கினார். அவருக்கும் அர்ப்பணம் செய்கிறேன் என்றார்.
🔵யார் பரிகசித்தாலும், யார் உதாசீனப்படுத்தினாலும், யார் பழித்தாலும் நீ ஆண்டவரை நம்பி முயன்றால் ஆண்டவர் உன்னை லெபோலனின் கேதுரு மரம் போல் உயர்த்துவார் என்பதற்கு மாசில்லா மணியேச் சான்று.
அழைத்து அனுப்பும் ஆண்டவர்
🔴தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட இறைவாக்கினர் மக்களிடையே அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
🔴இறைவாக்குரைக்கும் வரம் பிறரின், சமூகத்தின் நலனைக் கருதி இறைவன் அருள்கின்றார்.
🔴இறைவன் இறைவாக்குப் பணிக்கு யாரை நான் அனுப்புவேன், என் பணிக்காய் யார் போவார்? என்று ஆண்டவர் வினவிய போது ஏசாயாவின் பதில்.
எசாயா 6:8 "இதோ நான் இருக்கின்றேன் அடியேனை அனுப்பும்" என்று அமைந்தது.
🔵ஆண்டவரும் ஏசாயா எதை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
🔵இறைவாக்கினர் எரேமியாவை ஆண்டவர் இறைவாக்குப் பணிக்காய் அழைத்தபோது, எரேமியா ஆண்டவரிடம், நான் சிறுபிள்ளை, எனக்குப் பேசத் தெரியாது என்று பதில் வழங்கினார். அதற்கு ஆண்டவராகிய கடவுள்
எரேமியா 1:7 "சிறுபிள்ளை நான் என்று சொல்லாதே யாரிடம் எல்லாம் உன்னை அனுப்புகிறேனோ அவர்களிடம் செல். எவற்றையெல்லாம் சொல்ல கட்டளையிடுகிறேனோ அவற்றைச் சொல்" என்றும்
🔵இறைவாக்கினர் எசேக்கிலிடம் கூறும் போது எசேக்கியேல் 2:3 "மானிடா எனக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் இனத்தாரகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன்" என்று பக்குவப்படுத்தி, தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே என்று துணிந்து சொல்ல வலியுறுத்துகிறார்.
🟢இறைவாக்கினர் எசேக்கியல் இறைவாக்குரைத்தாலும் விவேகமற்ற, முரட்டுத்தனமான, வன்கண் கொண்ட மக்கள் இறைவார்த்தையைக் கேட்க மாட்டார்கள் மறுப்பார்கள்.
🟢இத்தகைய எதிர்ப்பு, முரட்டுத்தனமான செயல்கள், காயப்படுத்தும் சொற்கள், இழிவாக நடத்துவோர் முன்னிலையில் இறைவாக்கினரின் கடமையைச் செய்.
🟢ஒருவேளை இறைவாக்கினர் இறைவாக்கு உரைக்காவிட்டாலும், இறைவாக்கினரின் உடனிருப்பு, பிரசன்னம் அவர்களுக்கு பாடமாய் அல்லது மாற்றத்திற்கு உட்படுத்துவதாய் அமையும் என்றார்.
🟢அப்பழுக்கற்ற வாழ்க்கையே ஆண்டவருக்கு சாட்சியம் பகரும் வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்வோம்.
மக்களின் மனநிலை
🟡கப்பர்நாகூமில் இயேசு போதித்தப் போதனையால் மக்கள் மலைத்துப் போயினர். ஏனெனில் அவரின் போதனை மற்ற ரபிக்களை விட வேறுபட்டிருந்தது. மாற்கு 1:2 "ஏனெனில் அவர் மறைநூலைறிஞரைப் போன்று அதிகாரத்தோடு அவர்களுக்கு கற்பித்து வந்தார்" இதனால் ஆச்சரியப்பட்டனர்.
🟡கப்பா்நாகூமைக் கடந்து, சொந்த ஊருக்கு வருகிறார். அங்கும் அதிகாரத்தோடும், ஆற்றலோடும் போதிக்கிறார். இங்கும் மக்கள் வியப்பில் ஆழ்கிறார்கள். இந்தப் போதனை இருவிதமான எண்ண ஓட்டம் கொண்ட மக்களை இனம் பிரித்துக் காட்டுகிறது.
1. நேரடியான வியப்பு
ஆண்டவர் இயேசுவின் போதனையில், உள்ளம் நெகிழ்ந்து, வியந்து மாற்கு 6:2 "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம், என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்" என்று உள்ளத்து உணர்வுகளைப் பகிர்ந்த பலர் உண்டு.
2. மானுடம் சிறக்கும் செயல்களை அவர்களில் சிலரும் செய்தனர். அவா்கள் யாரெனில் பெற்றோர், தொழில், உறவுகளை குறித்து இழிவாக பேசி, பரிகசிக்கும் கூட்டத்தார்.
மாற்கு 6:3 "இவர் தச்சர் அல்லவா? மரியாவின் மகன் தானே யாக்கோபு, மோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா" என்று பேசியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள தயங்கினார்கள்.
🔴மொத்தத்தில் இயேசுவை குற்றவாளியைப் போல பார்த்தனர்.
2. பிறரைப்பற்றிய நமது மதிப்பீடு என்ன?
இயேசுவின் எளிய குடும்பப் பின்னணி, இயேசு மெசியா என ஏற்கத் தடையாக அமைந்தது. அதுபோல நாமும் பிறரை உருகண்டு எண்ணாமல் உளம் போற்றும் மாண்போடு செயல்பட அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் இறைவாக்கினார்கள் அனுப்பப்படும் போது, அனுப்பப்பட்ட மக்கள் எப்படிப்பட்டவர்களாக? எத்தகைய மனநிலை உடையவர்களாக விளங்கினார்கள் என்பதை திருமறை நமக்கு உணர்த்துகிறது.
🟣எசேக்கியல் பணியாற்ற சென்ற இடத்தின் மக்கள் மனநிலை எசேக்கியேல் 2:4 "வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன்" என்றாா் இறைவன்.
🟣எரேமியா பணியாற்றச் சென்ற இடத்தின் மக்கள் எரேமியா 18:18 "வாருங்கள் எரேமியாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்வோம்" என்றனர்.
🟣லூக்கா நற்செய்தி 20 - ஆம் அதிகாரத்தில் கொடிய குத்தகைக்காரன் உவமையில்
லூக்கா 20:14 "இவன் தான் சொத்துக்குாியவன். நாம் இவனைக் கொன்று போடுவோம்" இதெல்லாம் பணித்தளத்தின் மக்கள் மனநிலையை பிரதிபலிக்கிறது. இத்தகைய மக்களுக்கும் இறைவாக்கினர் வழியாக நற்செய்தியைப் போதித்து மானுடம் தழைக்கச் செய்தார் இறைவன்.
நம் வாழ்வில்
🟢நாம் பிறரை எத்தகைய சொற்களால் அழைக்கின்றோம்.
🟢பிறரைக் குறை கூறும் நாம், நம் குறைகளை ஆய்வதுண்டா?
🟢பிறருடைய தோற்றம், குடும்பங்களை வைத்து இழிவாக நடத்துகிறோமா?
🟢பிறரின் நற்பண்புகளை ஏற்க மனமில்லாமல் பொறாமை கொள்கிறோமா?
🟢பிறரை சாதி, மொழி, நிறம் இவற்றால் பிரித்தாள்கிறோமா?
சீராக்கின் கூற்றை நம் உள்ளங்களில் சீர்தூக்கிப் பார்ப்போம்
சீராக்கின் ஞானம் 23:13 "பண்பற்ற பேச்சுக்கு உன் நாவை பழக்காதே அது பாவதற்குரியப் பேச்சு"
பண்போடு பேசி மனிதனை நேசிப்போம்!
மானுடம் பேணுவோம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
No comments:
Post a Comment