Friday, August 25, 2023

இன்றைய இறைவாா்த்தை - 26.08.2023 (சனி)


 

சிந்திக்க சில வாிகள் - 26.08.2023 (சனி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (தாழ்ச்சி என்னும் பண்பில் வளா்வோம்) - 26.08.2023 (சனி)


 

Tamil Catholic Status song (என்ன அழகு உன் அருள் அழகு) - 26.08.2023


 

இன்றைய இறைசிந்தனை (தாழ்ச்சி என்னும் பண்பில் வளா்வோம் ) - 26.08.2023 (சனி)


 

ஆண்டின் பொதுக்காலம் 21 - ம் ஞாயிறு மறையுரை - 27.08.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 21- ஆம் வாரம் ஞாயிறு)

27.08.2023. 

எசாயா 22 : 19- 23,

உரோமையர் 11: 33-36,

மத்தேயு  16: 13 - 20.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இயேசு - எனக்கு யார்?


♦️உலகின் மீட்பராகிய இயேசுவை நான் (or) நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கின்றோம்.

♦️என்னுடைய தனிப்பட்ட இறையனுபவமே, எனக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை, வெளிப்படுத்தும் கருவி.

♦️நான் அனுபவமாக்கியக் கிறிஸ்துவைப் பிறருக்கு எவ்வாறு அறிவிக்கின்றேன்.

திருப்பாடல் 34 : 8 "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" என்று தாவீது நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

♦️ எனவே ஆண்டவர் இயேசுவை பேதுரு, பவுல் போல் சுவைத்து, அந்த இறையனுபவத்தைப் பிறருக்கு நாம் அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்பாகிறது.

♦️நம் வாழ்வு நற்செய்தியாக மாற வேண்டும்.

நிகழ்வு


பெல்ஜியம் நாட்டில் 03.01.1840 - ல் பிறந்த தம்பியான் துறவற சபையின் குருவாகி இறைப்பணியாற்றினார். 1873 மே மாதம் 10 - ஆம் தேதி அவரின் ஆயரோடு மோலக்காய் தீவிற்கு தனது 33 - வது வயதில் வந்தார். அத்தீவில் பெரும்பாலானோர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அம்மக்கள் ஆயரைச் சூழ்ந்து நின்று அழுதனர். எங்களுக்கு ஒரு குருவானவரைத் தாருங்கள், என்று அழுது மன்றாடி கேட்டது அருட்தந்தை தமியானின் உள்ளத்தை உருக்கிற்று. எசாயா 6:8 "இதோ நான் இருக்கின்றேன் அடியேனை அனுப்பும்" இந்த எசாயாவை போல் இளம் அருள்தந்தை தமியான் தொழுநோயினர்களோடு பணியாற்ற முன் வந்தார்.

தொழுநோயாளர்களை கழுவி, தூய்மைப்படுத்துவது, மருந்துட்டு, ஆறுதல் வழங்கி, அவர்களோடு உண்டு, உறங்கி, அவர்களின் ஆடைகளைச் சுத்தம் செய்து, அன்புப் பணியாற்றினார்.

அம்மக்கள் குடி வெறியால் தங்களை மறக்க முயன்றனர். அறிவுரைக் கூறினார். அவர்களோ ஏற்க மறுத்து அவருக்கு எதிராக போராடினர். உள்ளம் நொந்து போனார் தந்தை தமியான்.

யோபு 3:3 "ஒழிக நான் பிறந்த அந்த நாளே, ஓர் ஆண் மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே" என்று யோபு தன் வேதனையில் புலம்பியதைப் போல், தந்தையும் மனம் வருந்தினார். ஆயினும் உள உவப்புடன் பணியாற்றினார்.

இறுதியில் தந்தை அவர்களும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, தொழுநோயாளியாகி 1889 ஏப்ரல் 15 அன்று மரித்தார். அன்று மோலக்காய் தீவு முழுவதும் அழுதது தந்தைக்காய்.

♦️அன்புக்காய், அன்பு செய்து அழுகியவர்.

♦️ஆண்டவர் இயேசுவை புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியவர்.

♦️ஏழையின் பங்காளன்.

♦️நலிந்தோரின் தேந்தரவாளர். 

இவரை திருஅவை புனிதராக உயர்த்தி தொழுநோயாளர்களின் பாதுகாவலராக அறிவித்து பெருமைப்படுத்தியது. தந்தை தமியானை உலகு மேற்கண்டவாறு புகழ்கிறது. நம்மைக் குறித்து மக்கள் என்னக் கூறுவார்கள். என்று சிந்திக்க வழிபாடு நம்மை அழைக்கிறது.

தலைமைத்துவம் எப்படிப்பட்டது

🔵கி.மு. 715 முதல் கி.மு. 687 வரை அசிரியப் பேரரசின் வளர்ச்சியில் பாலஸ்தீனம் அரசியல் நெருக்கடிக்குள்ளானது.

🔵பாலஸ்தீனத்தின் தலைமை அதிகாரியான "செபுனா" தன்னையும் பாலஸ்தீனத்தையும் காத்துக் கொள்ள எகிப்துடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்.

🔵ஆனால் இறைவாக்கினர் எசாயா பாலஸ்தீனம் தனித்திருக்க வேண்டும். ஏனெனில் முன்பு நம்மை அடிமைப்படுத்திய எகிப்தோடு ஒப்பந்தம் கூடாது என்றார்.

🔵அதற்கு மாற்றாக மன்னனும் மக்களும் மனம் திரும்பி, கடவுளிடம் நம்பிக்கைக் கொண்டு சரணடைய வேண்டும் என்றார் இறைவாக்கினர்.

🔵இதனை தலைமை அதிகாரி "செபுனா" எதிர்த்தான். எனவே அவன் நீக்கப்பட்டு "எலியாக்கிமை" தலைமை அதிகாரி ஆக்கினார். இது இன்றைய முதல் வாசகத்தின் பின்புலம்.

இன்றைய முதல் வாசகம் நமக்கு ஆழமான, தெளிவான சிந்தனையை முன் வைக்கிறது.

அன்றைய நாளில் மக்களை வழி நடத்துகிற தலைவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், அதனால் ஏற்பட்ட விளைவு இவற்றை குறிக்கிறது.

முதன்மை அமைச்சர் நீண்ட அங்கி, இடைக்கச்சையும் அணிந்து காணப்படுவர். அவர்களுக்குரிய அதிகாரத்தின் அடையாளமாக திறவுகோலையும் வழங்குவர். இத்தலைவன் அரசனுக்கு அடுத்த நிலையில் ஆட்சி புரிவான். தலைவர்கள் திருப்பாடல்கள் 103:13 "தந்தை தம் பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போல்" தம் மக்களை இரக்கத்துடன் வழிநடத்த வேண்டும். ஏரே 3:15 "என் இதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்கு கொடுப்பேன் அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழி நடத்துவார்கள்" என்பதைப் போல் அறிவோடும், ஞானத்தோடும் வழிநடத்த கூடியவர்களாக இருக்க வேண்டும். மாறாக மக்களை அதிகாரத்தால் அடிமைப்படுத்தி, மிரட்டி, பயத்திற்கு உள்ளாக்குவது அல்ல தலைமைத்துவம்.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் தன் சொந்த மக்களை போல உள்ளத்தால் மதித்து, இரக்கம் காட்டி, நீதியோடு, ஞானத்தோடு வழிநடத்த வேண்டும். இந்த நெறிமுறையில் இருந்து தவறும் போது அவர்களை நீக்கி உரியவர்களை அமர்த்துவார் அதன் அடையாளமாக.

எசாயா 22:22 "அந்நாளில் தாவீதின் குடும்பத்தாரின் திறவுகோலை அவர் தோளின் மேல் வைப்பேன். "

எசாயா 22:23 "உறுதியான இடத்தில் அவனை முனை போல் அடித்து வைப்பார்கள்." என்று எல்லா அதிகாரமும், பலமும் வழங்கி மேன்மைப்படுத்துகிறார்.

🟣இன்று மக்களை வழிநடத்தும் தலைவர்கள், அரசியலாகட்டும், சமய தலைவர்களாகட்டும், எப்படி மக்களைச் சிதறடிக்கிறார்கள்.

🟣அதிகாரங்களை எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள்.

🟣பதவிகள் பணிவிடை புரியவா? பழி வாங்கவா?

🟣அதிகாரங்கள் அன்பு பணி செய்யவா? அழிக்கவா?

🟣விவிலியம் காட்டும் "செபுனா" - வைப் போல் தன்நிலை இழக்காதிருக்க, தன்னிலை உணர்ந்து செயல்பட அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு உரையாடல் வழியாக உண்மையை உணர வைக்கிறார். "மானிட மகன்"யாரென்று மக்களின், சீடர்களின் கருத்தை சோதித்தறிகின்றார்.

🟡மக்கள் இயேசுவை இறைவாக்கினராக, புதுமை செய்பவராக, வியத்தகு செயல்களை செய்பவராக பார்த்தனர்.

🟡சீடரிடம் வினா தொடுக்கப்பட்டபோது அமைதியான அப்போஸ்தலர்கள் மத்தியில் பேதுரு அமைதியை குலைத்து அறிக்கையிட்டார்.


மத் 16:16 "நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" இந்த அறிக்கை பேதுருவின் ஆழமான அனுபவ வெளிபாடு.

🟢உண்மையாகிய, வழியாகிய, வாழ்வாகிய கடவுளை பேதுரு சரியாய் புரிந்து கொண்டார்.

🟢இயேசு கல்வாரியில் இறக்கும்போது அங்கு நின்ற நூற்றுவர் தலைவர் இயேசுவைக் குறித்து மாற்கு 15:39 "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்" என்றார். சிலுவையில் அவரோடு அறையப்பட்ட கள்வரில் ஒருவன் இயேசுவை குற்றமற்றவராக, மீட்பராகக் கண்டான் எனவே தான். லூக் 23:42 "இயேசுவே நீர் ஆட்சி உரிமை பெற்று வரும் போது என்னை நினைவிற்கொள்ளும் என்றான்" இதேபோல் எனக்கு இயேசு யாராக இருக்கிறார் என்று நம்மை நாம் சுய ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

🟢நம் தனிப்பட்ட அனுபவமே சான்றாக மாறும்.

பேதுரு என்ற பாறை

பேதுரு இயேசுவை நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் என்று அறிக்கையிட்டது அவருடைய அனுபவத்தாலும் தந்தை கடவுளின் உடனிருப்பாலும் நிகழ்ந்தது.

எபி 12:2 "நம்பிக்கையை தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களை பதிய வைப்போம்" என்று அறிவுறுத்துவதைப் போல் பேதுரு இயேசு மீது கண்களை உறுதியாய் பதித்தார். எனவேதான் இயேசுவின போதனையைக் கேட்டு எல்லோரும் விலகிச் சென்ற போது, பேதுரு மட்டும் உறுதியாக இயேசுவை நம்பி. யோ 6:68 "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உன்னிடம் தானே உள்ளன" என்று அறிக்கையிட்டார்.

🔴பேதுரு தான் நம்பியது மட்டுமல்ல மற்றவரும் ஆண்டவர் இயேசுவில் உறுதி கொள்ள தன் அனுபவத்தால் சான்று பகிர்ந்தார்.

🔴பேதுருவின் நம்பிக்கை மற்றும் அனுபவம் என்னும் பாறை மீதுதான் திருச்சபைக் கட்டப்பட்டுள்ளது.

🔴தொடக்க கால திருஅவைக்கு நற்செய்தி அறிவிக்கும் போது இயேசுவை மூலைகல் என்றும், உலகம் முழுமைக்கும் மீட்பர் இவரே என்றும் உறுதிப்பட கூறினார்.

திப. 4:12 "இவராலயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்த பெயரும் கொடுக்கப்படவில்லை" என்றார். தலைமைச் சங்கத்தார் இயேசுவைக் குறித்து பேசக்கூடாது என்று அச்சுறுத்திய போது. திப 4. : 20 "என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க எங்களால் முடியாது" என்று உறுதியாக எடுத்துரைத்தார்.

இயேசுவின் வார்த்தைகளை கேட்டு செயல்படுகிறவர் பாறை மீது தன் வீட்டை கட்டியதுப் போல், இயேசு கிறிஸ்துவை மூலைக் கல்லாகக் கொண்டு, பேதுரு என்ற விசுவாச பாறை மீது கட்டப்பட்டுள்ள திருஅவையின் விசுவாச சான்றாகும்.

நம் வாழ்வில்

🟣உறுதியான, கற்பாறைப் போன்ற, அசைக்க முடியாத நம்பிக்கை நம்மில் உறுதி பெற்றிருக்கிறதா?

🟣உறுதியாக நம்பிக்கையும், தாழ்ச்சியும் கொள்ளும்போது எசாயா கூறுவது போல் உறுதியான இடத்தில் நம்மை இறைவன் வளர்த்தெடுப்பார் என்ற உறுதிபாடு இருக்கிறதா?

🟣குடும்பங்களை விசுவாச விளைநிலங்களாக பண்படுத்துகிறோமா? அதிகார அரங்குகளாக்குகிறோமா?

🟣நம் நம்பிக்கை, அனுபவம், பணி வாழ்வால் இயேசுவே எனக்கு மீட்பர் என்று சான்று பகர்வோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

Thursday, August 24, 2023

இன்றைய இறைவாா்த்தை - 25.08.2023 (வெள்ளி)


 

சிந்திக்க சில வாிகள் - 25.08.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (அன்பு மனிதாில் வளர வளர படைப்பு அழகாகும்) - 25.08.2023 (வெள்ளி)


 

Tamil Catholic Status song (இருப்பவா் கொடுப்பதில் இன்பமென்ன?) - 25.08.2023


 

இன்றைய இறைசிந்தனை (அன்பு மனிதாில் வளர வளர படைப்பு அழகாகும் ) - 25.08.2023 (வெள்ளி)


 

இன்றைய இறைவாா்த்தை - 24.08.2023 (வியாழன்)


 

சிந்திக்க சில வாிகள் - 24.08.2023 (வியாழன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (எல்லோாிடமும் நன்மைத் தனங்களை காணும் பாா்வை பெறவோம் - 24.08.2023 (வியாழன்)


 

Tamil Catholic Status song (நான் செல்லும் இடமெல்லாம் நீ முன்னே செல்ல வேண்டும்) - 24.08.2023


 

இன்றைய இறைசிந்தனை (எல்லோாிடமும் உள்ள நன்மைத் தனங்களை காணும் பாா்வை பெறவோம்) - 24.08.2023 (வியாழன்)


 

Sunday, August 20, 2023

சிந்திக்க சில வாிகள் - 21.08.2023 (திங்கள்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (பொருள் சோ்க்கும் ஆசையை தவிா்ப்போம்) - 21.08.2023 (திங்கள்)


 

Tamil Catholic Status song (அதிகாலை நேரம் உன்னை) - 21.08.2023


 

இன்றைய இறைசிந்தனை (பொருள் சோ்க்கும் ஆசை விலக்கி வாழ்வோம்) - 21.08.2023 (திங்கள்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (கடவுளை நம்பினோா் கைவிடப்படுவதில்லை) - 20.08.2023 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (கைவிடாத கடவுளே) - 20.08.2023


 

இன்றைய இறைசிந்தனை (கடவுளை நம்பினோா் கைவிடப்படுவதில்லை) - 20.08.2023 (ஞாயிறு)


 

Friday, August 18, 2023

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (குழந்தை உள்ளம் கொண்டு வாழ்வோம்) - 19.08.2023 (சனி)


 

Tamil Catholic Status song (நானே உன்னை காக்கும்) - 19.08.2023


 

இன்றைய இறைசிந்தனை (குழந்தை உள்ளம் கொண்டு வாழ்வோம்) - 19.08.2023 (சனி)


 

ஆண்டின் பொதுக்காலம் 20 - ம் ஞாயிறு மறையுரை - 20.08.2023.

 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 20- ஆம் வாரம் ஞாயிறு)

20.08.2023. 

எசாயா 56 : 1, 6-7,

உரோமையர் 11: 13-15, 29-32,

மத்தேயு  15: 21 - 28.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நம்புவோம் நலம் பெறுவோம்

உலகின் மீட்பர் யூத குலத்தில் தோன்றினாலும், அவர் கொணர்ந்த மீட்பு அனைவருக்குமானது என்பதை இன்றைய வழிபாடு உணர்த்துகிறது.

குலத்தால், இனத்தால், மொழியால் மனிதன் வேறுபட்டாலும் இயேசுவை மீட்பராக ஏற்பதற்குத் தடையில்லை.

கொலேசையர் 3:4 "கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர்" என்பதை நம்பிய கானானியப் பெண்ணின் ஆழமான உறுதியான நம்பிக்கையையும், நம்பிக்கையின் வெளிப்பாடாக இயேசுவிடம் அருள் பெற்றதையும் நாம் காண்கிறோம்.

சாதி, சமயம், இனம், மொழி கடந்து வாழ வேண்டுமெனில் தடைகள் பல உண்டு. நாம் அவற்றைத் தாண்டி தான் வாழ வேண்டும் என்பதற்கு கானானியப் பெண் நமக்குப் பாடமாகிறாள்.

மத்தேயு 15:28 "அம்மா உமது நம்பிக்கைப் பெரிது" என்று இயேசு ஆண்டவரால் பாராட்டப்பட்ட கானானியப் பெண்ணின் நம்பிக்கை என்னில் அமைந்திருக்கிறதா என சிந்திக்க அழைக்கிறது வழிபாடு.

நிகழ்வு

பிரான்ஸ் நாட்டில் உள்ள புனித லூர்து அன்னைத் திருத்தலம், அதிகமான நோயாளிகள் நலம் பெற்று செல்லும் நலம் நல்கும் திருத்தலமாக அமைந்துள்ளது. ஒரு நாள், தன்னுடைய கால் ஊனமான  12 வயது சிறுவனை, தாய்  அன்னை காட்சி வழங்கி, அருள் வழங்கும் தூய லூர்து அன்னை பேராலயத்திற்கு அழைத்து வந்தாள். பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு ஒன்றாய் கூடி செபித்தனர். திருப்பலிக்கு பின் நற்கருணை ஆண்டவரை சுமந்து வந்து நோயுற்றோருக்கு ஆசி வழங்கும் நிகழ்வு நடைபெறும். அன்று அருட்தந்தை அவர்கள் நற்கருணை கதிர் பாத்திரத்தை சுமந்து அச்சிறுவன் அருகில் வந்தார். அச்சிறுவன் நற்கருணை ஆண்டவரை உற்றுப்பார்த்து "ஆண்டவரே நீங்கள் என்னை குணப்படுத்தவில்லை எனில் உங்கள் அம்மாவிடம் சொல்லி விடுவேன்" என்று கண்ணீரோடுக் கூறினான். திபா. 107:19 "உங்கள் நெருக்கடியில் ஆண்டவரைக் கூப்பிடுங்கள் அவர் உங்களைத் துன்பத்திலிருந்து விடுவிப்பார்" என்பதற்கிணங்க நற்கருணை இருந்த கதிர் பாத்திரத்திலிருந்து பேரொளி படர்ந்து அச்சிறுவனை ஆட்கொள்ள, அச்சிறுவன் எழுந்து நடந்தான் ஆனந்த கண்ணீரோடு.      விடுதலை பயணம் 15:26 "நானே உங்களை குணமாக்கும் ஆண்டவர்" என்ற ஆண்டவரின் வார்த்தைகள், சிறுவனின் நம்பிக்கையில் நிறைவேறியதை நமக்கு உணர்த்துகிறது. 

இன்றைய வழிபாடு கடவுளின் சில பண்பு நலன்களை நமக்கு உணர்த்தி நிற்கிறது.

1. கடவுள் பொதுவானவர்

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள், ஆலயம், வழிபாடு, திருச்சட்டம் ஆகியவை முக்கிய இடம்பெறுகிறது. கடவுள் எல்லாருக்கும் தந்தை, அதுபோல இறைவனை வழிபடும் ஆலயம் அனைவருக்கும் பொதுவானது என்பதையும், கடவுளின் அன்பு, பரிவு, இரக்கம் அவருக்கு அஞ்சும் அனைவருக்கும் உரியது என்பதை உறுதிபட எடுத்துரைக்கிறது.

இஸ்ரயேல் மக்களின் மத்தியில் கடவுள், ஆலயம் என்பது எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட, உரிமை குடிமக்களாகிய அவர்களுக்கே உரியது என்ற ஆணவம் இருந்தது. ஆலயம் கட்டுவது மற்றும் ஆலயப் பணிகளில் பிற இனத்தார் இணைய முடியாது. எஸ்ரா 4:3 "நாங்கள் மட்டுமே இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோயில் கட்டுவோம்" என்று மேன்மைப் பாராட்டினர். இச்சூழலில் தான் இறைவாக்கினர் எசாயா கடவுள் ஆலயம் எல்லாருக்கும் பொதுவானது என்ற சமத்துவ சிந்தனையை நிலைநாட்டுகிறார். 

எசாயா 56.7 "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறை மன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்" என்கிறார் இறைவாக்கினர் எசாயா. இஸ்ரயேலின் அரசர் சாலமோன் ஆண்டவருக்கு ஆலயம் கட்டிய பின்பு, இந்த ஆலயத்தில் இஸ்ரயேல் மட்டுமின்றி புறவினத்து மக்களின் வேண்டுதலையும், ஆண்டவர் கேட்டருள் புரிய மன்றாடுகிறார்.

1 அரசர் 8:43, "உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்குச் செவி சாய்த்து அந்த அந்நியர் கேட்பதையெல்லாம் அருள்வீராக" என்று வேண்டுகிறார். இதனால் உலகின் எல்லாரும் உமது அன்பு பிள்ளைகள் என்றாகி, உமக்கு அஞ்சி வாழ்வர். அதனால் உமது பெயர் மாட்சியுறும் என்று வேண்டுவதன் வழியாக, கடவுள், ஆலயம் அனைவருக்கும் பொது என்கிற கருத்தை ஆழமாய் உணர்த்துகிறது.

2. கடவுள்-இரக்கமுள்ளவர்

புற இனத்தாரின் திருத்தூதர் என்று தன்னை அடையாளப்படுத்திய தூய பவுல், இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் பேரிரக்கத்தை சுட்டிக் காட்டுகின்றார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் இயேசுவை ஏற்கவும், நம்பவும் மறுத்தபோது புற இனத்து மக்கள் வாழ்வு தருபவரான இயேசுவை நம்பினர், ஏற்றுக் கொண்டனர். அவர்களின் நம்பிக்கையில் மீட்பைப் பெற்றுக் கொண்டனர்.

இஸ்ரயேல் மக்களின் கீழ்படியாமையால் அனைவருக்கும் மீட்பு சொந்தமாயிற்று, ஆயினும், தம் வழிமரபுகளை, பிடிவாதங்களை, கீழ்படியாமை, ஏற்றுக்கொள்ள மறுக்கும் தீமைகளை விட்டு விலகி கடவுளிடம் வந்தால் எசாயா 56.7 "அவர்களுக்கு இரக்கம் காட்டுவார் அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும். ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்" என்று ஆண்டவரின் இரக்கத்தை, தூய பவுல் வழியாக அறிகின்றோம்.

3. நம்பிக்கையும் நலமும்

இயேசு கிறிஸ்து யூதர்களுக்கு மட்டுமா? இல்லை எல்லாருக்குமான மீட்பரா? என்ற ஐயப்பாட்டை இன்றைய நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. இயேசுவின் இரக்கத்தை, அருளை, நலன்களைப் பெற "நம்பிக்கையே" அளவுகோலாக அமைந்துள்ளது.

இன்றைய நற்செய்தி - நாம் தொடர்ந்து, இடைவிடாமல் உள்ள தளர்ச்சியின்றி செபிக்க வேண்டும் என்பதை கானானியப் பெண் வழி உணர்த்துகிறார். இன்றைய நற்செய்தியில் அப்பெண் 3 முறை இறைவனிடம் இரஞ்சி நிற்பதைப் பார்க்கின்றோம்.

மத்தேயு 15:22 "ஐயா தாவீதின் மகனே எனக்கு இரங்கும்"

மத்தேயு 15:25 "ஐயா எனக்கு உதவியருளும்"

மத்தேயு 15:27 "ஆம் ஐயா ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறுத்துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து வேண்டிக் கொண்டதால் நலமும், பாராட்டும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்துப் பெற்றுக் கொண்டார்.

திருப்பாடல் 20:4 "உமது மனது விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக" என்ற இறைவாக்கு ஏற்ப கானானியப் பெண்ணின் மன விருப்பை ஆண்டவர் நிறைவேற்றினார்.  

மத்தேயு நூல் இன்னொரு நிகழ்வையும் உறுதியான தொடர் வேண்டுதலை உணர்த்த நமக்கு வழங்குகிறார்.

பார்வையற்ற இரு மனிதர்களின் மன்றாட்டு அவர்களுக்கு நலம் நல்கியது.

மத்தேயு 20:30 "ஆண்டவரே தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும்"

மத்தேயு 20:31 "ஆண்டவரே எங்கள் கண்களைத் திறந்தருளும்". என்ற தொடர்ச்சியான வேண்டுதலினால் பார்வையைப் பெற்றுக் கொண்டதை விவிலியம் உணர்த்துகிறது. நம்பிக்கை, உறுதிபாடு, தொடர் தேடல் வாழ்வைப் பெற்றுக் கொடுத்தது. 1தெச 5:17 "இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்" என்று தூய பவுல் அறிவுறுத்துகிறார். நாம் தொடர்ந்து செபிக்கும்போது உறுதியான மனத்தோடு செபிக்க அழைக்கப்படுகின்றோம்.

யாக் 1:6 "நம்பிக்கையோடு ஐயப்பாடின்றி  கேட்க வேண்டும்"  எனவே நம்பிக்கையோடு ஐயமின்றி வேண்டி நலம் பெற வழிபாடு அழைக்கிறது ஏனெனில் திபா 9:10 "உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை" நாம் ஆண்டவர் இயேசுவை நம்பிக்கையோடு நாடி, தேடி நலன்களைப் பெற்றுக் கொள்வோம்.

நம் வாழ்வில்

🔵நம் நம்பிக்கையின் உறுதிப்பாடு என்ன?

🔴நாம் யாரை நம்புகின்றோம்?

🟢பிறரை விட நாம் உயர்ந்தவர் என்ற, பிரித்தாளும் மனப்பான்மை என்னில் உறைகிறதா?

🟣நாம் நினைப்பவை, வேண்டுவதை உடனடியாக கிடைக்கவில்லை எனில், விசுவாசத் தளர்வு கொள்கிறேனா? இல்லை கானானியப் பெண் போல் நிலைத்து நிற்கிறேனா?

🟡ஆலயத்தில், இறைவன் முன் அனைவரும் சமமே என்ற உயர்நிலையை மனதில் ஏற்றிருக்கிறேனா?

🔵இறைவன் - பொதுவானவர், இரக்கமுள்ளவர், அவரில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நலமும், வாழ்வும் பெறுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (திருமணங்களில் புாிதலும், நற்பண்பும் நிறைந்திருக்கட்டும்) - 18.08.2023 (வெள்ளி)