Friday, December 29, 2023

புது வருட பிறப்பு மறையுரை -01.01.2024. (திங்கள்)

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

புது வருட பிறப்பு

01.01.2024.

எண்ணிக்கை 6 : 22 - 27,  

கலாத்தியர்  4: 4 - 7, 

லூக்கா 2: 16 - 21.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

புனித கன்னி மரி கடவுளின் தாய்

🔵இன்று ஆண்டின் முதல் நாள், நமக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஊட்டும் நாள்.

🟢இன்று அன்னை மரியாவின் தாய்மைக்கு விழா எடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

🔴அன்னை மரியா கடவுளின் தாயாக ஆனதால் நமக்கும் தாயாக மாறுகிறாள்.

🟣இறை மக்களுக்குரிய புனித வாழ்வும், அன்பு வாழ்வும் வாழ அன்னை மரியாவிடம் இந்த நாளில் அருள் வேண்டுவோம்.

🟡இந்த புதிய ஆண்டில் இறைவன் நமக்கு வழங்க ஆசிக்கும், இறையாசீரையும் பெற்றுக்கொள்ள நம்மை பயன்படுத்துவோம்.

🟣தாய்மை என்பது உயிராற்றல், நம்பிக்கை, துணிவு.

தாய்மை என்பது வாழ்வு, தியாகம்.

நிகழ்வு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 65 வயதான லதா என்ற தாய் அவருக்கு வயதான கணவர், மூன்று பெண் குழந்தைகள், வறுமையான குடும்பம், இருவரும் கடினப்பட்டு உழைத்து மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்தனர். இப்போது வயதான பெற்றோரை மூன்று பிள்ளைகளும் திரும்பிப் பார்ப்பது இல்லை.

2013 - ஆம் ஆண்டு லதாவின் கணவர் நோய்வாய்ப்பட்டார். லதா அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். மருத்துவர் சோதித்துப் பார்த்த பின் வேறு பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச்ச செல்லச் சொன்னார். ஏழைகள், வசதியில்லை, லதா அக்கம் பக்கத்தாரிடம் நிலைமையைச் சொல்லி பணம் கேட்கிறாள். சிறு தொகை ரூ 2000/- கிடைக்கிறது. அதை வைத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு மருத்துவர் பரிசோதித்து விட்டு லட்ச ரூபாய்க்கு மேலாகும். உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டார். லதா தன்னிடம் இருப்பதைக் கொடுக்கிறாள். இது போதுமானதாக இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பப்படுகின்றார்.

மனச்சோர்வு, உடல் சோர்வு ஆகிய இரண்டோடு இருவரும் அருகில் இருந்த டீ ஸ்டால் போய் 2 சமுசா மற்றும் 2 டீ கேட்கின்றனர். 2 சமுசா ஒரு பேப்பரில் புரிந்து கொடுக்கப்படுகிறது. டீ குடிக்கும் போது சமுசா பொதிந்த பேப்பரில் வந்த செய்தியைப் படிக்கிறார் லதா. தான் வசிக்கும் இடத்திற்கு அருகில் இரு நாட்கள் கழித்து மாரத்தான் போட்டி நடைபெறுவதாகவும், வெற்றி பெறுபவர்களுக்கு பல லட்சம் பரிசு தொகை என்ற விளம்பரத்தைப் பார்க்கிறார். தேதியை உறுதிப்படுத்துகிறார்.

இரு நாட்கள் கழித்து மாறத்தான் தொடங்கும் இடத்திற்கு லதா சென்றார். தானும் போட்டியில் கலந்து கொள்வதாக அதன் பொறுப்பாளர்களிடம் சொல்கிறாள். அவளைப் பார்த்ததும் அவளின் தோற்றம் கண்டு நிராகரிக்கிறது அக்குழு. லதா விடாப்பிடியாய் நிற்கிறாள். அவளின் மன உறுதியைக் கண்டு சம்மதிக்கின்றனர். லதாவைத் தவிர போட்டியில் கலந்து கொண்ட மற்ற அனைவரும் பல மாதங்கள் பயிற்சி பெற்றவர்கள் மாரத்தான் தொடங்குகிறது. லதாவும் ஓடுகிறாள். முடிவில் எல்லாரையும், பல மீட்டர் தூரம் பின்னுக்குத் தள்ளி, பல கிலோமீட்டர் தூரம் ஓடி முதல் பரிசான பல லட்ச ரூபாயை பெற்றார். அத்தொகையைக் கொண்ட கணவருக்கு மருத்துவம் செய்து அவரைக் காப்பாற்றினார்.

தன் கணவரை காப்பாற்ற ஒரு தாய்மையின் போராட்ட நிகழ்வு இது. தாய்மை சிறப்பானது, உயர்வானது.

மானுட குழந்தைகளைப் பாவ நோயில் இருந்து காக்க, மீட்க, மனமுவந்த கடவுளின் தாயின், தாய்மை, வீரம், முயற்சி, மனத்திடம் ஆகியவற்றிற்கு விழா எடுக்கின்றோம்.

கலாத்தியர் 4:4 "நம்மை மீட்டு தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பியுள்ளார்" எனவே தந்தை கடவுள் மரியாவை மீட்பின் கருவியை தெரிந்தெடுத்தார்.

ஆகவே மரியா கடவுளின் தாயாக, மீட்பின் தாயாக, ஆண்டவரின் தாயாக, நமது தாயாக உயர்த்தப்பட்டார்.

இன்றைய முதல் வாசகத்தில், மனிதன் கடவுளிடம் மன்றாடும் போது மூன்று அருட்கொடைகளை கடவுள் மனமுவந்து வழங்குவதாக வாக்குறுதி வழங்குகிறார்.

எண் 6:24 "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னை காப்பாராக"

என் 6:25 "உன் மீது அருள் பொழிவாராக"

எண் 6:26 "உனக்கு அமைதி அருள்வாராக"

ஆசி, பாதுகாப்பு, அருள், அமைதி என்னும் அருளாற்றலை ஆரோனுக்கும் அவன் வழி மரபினருக்கும் நிறைவாய் பொழிவதாக மோசே வழி உறுதி அளிக்கிறார் இறைவன்.

1. ஆசி வழங்கி உன்னைக் காப்பார்

இறையாசீர் நம்மை வழி நடத்துகிறது. இறை யாசின் நம்மை தீமையில் இருந்து பாதுகாக்கிறது.

ஆண்டவரின் ஆசியைப் பெற நாம் ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடக்க வேண்டும். ஆண்டவருக்கு அஞ்சுகிறவர்கள் ஆண்டவர் பார்வையில் பெயர் பெற்றவராய் கருதப்படுவர். ஆண்டவருக்கு அஞ்சுகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசிராக

🟣நமது உழைப்பின் பயனை நாம் உண்போம்.

🟡நற்பேறும் நலமும் பெறுவோம்.

🔴மனைவி கனிதரும் திராட்சைக் கொடிபோல், வளமையைக் கொணர்வாள்.

🟢பிள்ளைகள் ஒலிவக்கன்றுகளைப் போல் பெற்றோரை சூழ்ந்திருப்பர்.

🔵பிள்ளைகளின் பிள்ளைகளை காணும் நீண்ட ஆயுளை வழங்குவார்.

திபா. 128:5 "ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக"

இந்த ஆசீர் பாதுகாப்பாக எப்போதும் இருக்கும்.

திபா. 121:8 "நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும், எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்" என்று கடவுள் தம் ஆசியால் நம்மை எல்லா நிலைகளிலும் பாதுகாப்பார் என்ற உறுதியை இந்த நாள் வழங்குகிறது.

2. உன் மீது அருள் பொழிவார்

இப்புத்தாண்டில் ஆண்டவரின் அருள், இரக்கம், கருணை நம்மை நிரப்ப வேண்டுவோம்.

தாவீது ஆண்டவரை பார்த்து மன்றாடும்போது திபா. 4:6 "ஆண்டவரே எங்கள் மீது உமது முகத்தில் ஒளி வீசும் படி செய்தருளும்" என்று வேண்டினார். ஆண்டவரின் முகத்தின் ஒளி, இறையருளை உணர்த்துகிறது.

நான் பலவீனம் படும்போது கடவுளின் அருள் நம்மை நிறைத்து நம்மை பலவான்களாக மாற்றும்.

2 கொரி 12:9 "என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்று தூய பவுல் அறிவுறுத்துகின்றார். இந்த அருளால் நாம் நிரப்பப்பட நமக்குத் தேவையான இறையனுபவமே.

எபே. 2:8 "நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள் இது உங்கள் செயல் அல்ல மாறாக இது கடவுளின் கொடை" என்கிறார் தூய பவுல். எனவே நம்பிக்கை வழியாக கடவுளின் கொடையான அருள், பரிவு, இரக்கத்திற்கு உரியவராவோம்.

3. உனக்கு அமைதி அருள்வார்

இப்புவியில் சாதி, இனம், மொழி, சமய வேறுபாடின்றி, கற்றவன், கல்லாதவன், உள்ளவன், இல்லாதவன் என்ற பேதம் இன்றி எல்லாரும் ஏங்குவது "அமைதி" க்காக. இவ்வாண்டில் இப் புதிய நாளில் இறைவன் மன அமைதியை நிறைவாய் அருள வேண்டுவோம்.

எபே. 2:14 "அவரே நமக்கு அமைதி அருள்பவர்" என்று எபேசு திருச்சபைக்குத் தூய பவுல் அறிவுறுக்குகிறார்.

2 கொரி 13:11 "மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள். அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்" என்கிறார் பவுலடியார்.

♦️♦️ஒற்றுமை - அமைதியான வாழ்வை வழங்கும்.

♦️♦️ஒற்றுமையும், அமைதியும், அன்பும் கடவுளை நம்மிடம் அழைத்து வரும்.

♦️♦️ஆண்டவர் இயேசு தீமையை, துன்பத்தை, பாடுகளை, சாவை வென்றபின் தம் சீடர்களை உறுதிப்படுத்தி வாழ்த்தியது.

யோவான் 20:19

யோவான் 20:21

யோவான் 26:26 - "உங்களுக்கு அமைதி உரித்தாகுக

மூன்று முறை அறிவிப்பதன் வழியாக, அமைதியை வழங்கி மன அமைதியோடும், நிறைவோடும் வாழ உறுதிப்படுத்துகிறார்.

எனவே இப்புத்தாண்டில், அன்னை மரியாள் இறை நம்பிக்கையில் பெற்றுக் கொண்ட இறையாசி, பாதுகாப்பு, இறையருள், இறையமைதி ஆகியவற்றை அன்னை வழியாக நாமும் பெற்றுக் கொண்டு இவ்வாண்டு முழுவதும், நலமுடனும், வளமுடன் வாழ அருள் வேண்டுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment