Wednesday, January 31, 2024

இன்றைய இறைவாா்த்தை- 31.01.2023 (புதன்)


 

சிந்திக்க சில வாிகள் - 31.01.2023 (புதன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (இரக்கத்தின் வடிவாய் வாழ்வோம்)-31.01.2024 (புதன்)


 

Tamil Catholic Status song (அன்பு எனக்கு இல்லையேல்)- 31.01.2024


 

Tamil Catholic Status song (இரக்கத்தின் வடிவாய் வாழ்வோம்)- 31.01.2024


 

இன்றைய இறைவாா்த்தை- 30.01.2023 (செவ்வாய்)


 

சிந்திக்க சில வாிகள் - 30.01.2023 (செவ்வாய்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (வாழ்வின் மீது நம்பிக்கை வைப்போம்)-30.01.2024 (செவ்வாய்)


 

Tamil Catholic Status song (உன் பாதம் சோ்ந்தால்)- 30.01.2024


 

Tamil Catholic Status song (வாழ்வின் மீது நம்பிக்கை வைப்போம்)- 30.01.2024


 

Sunday, January 28, 2024

இன்றைய இறைவாா்த்தை- 29.01.2023 (திங்கள்)


 

சிந்திக்க சில வாிகள் - 29.01.2023 (திங்கள்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (பிறா் துயா் காணும் கண்கள் பெறுவோம்)-29.01.2024 (திங்கள்)


 

Tamil Catholic Status song (யோசேப்பை போல் நான்)- 29.01.2024


 

Tamil Catholic Status song (பிறா் துயா் காணும் கண்கள் பெறுவோம்)- 29.01.2024


 

சிந்திக்க சில வாிகள் - 28.01.2023 (ஞாயிறு)


 

இன்றைய இறைவாா்த்தை- 28.01.2023 (ஞாயிறு)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (கடவுளின் குரலாய் ஒலிப்போம்)-28.01.2024 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (உணா்கின்றேன் உணா்கின்றேன்)- 28.01.2024


 

Tamil Catholic Status song (கடவுளின் குரலாய் ஒலிப்போம்)- 28.01.2024


 

Saturday, January 27, 2024

பொதுக்காலம் 4 - ம் ஞாயிறு மறையுரை -28.01.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 4 -ம் ஞாயிறு

21.01.2024

இணைச்சட்டம் 18 : 15 - 20,  

1 கொரி  7: 32 - 35, 

மாற்கு 1: 21 - 28.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

அதிகாரம் ஆற்றல் மிகு இறைவன்

🔴இறைவன் அந்தந்த காலங்களில் இறைவாக்கினர் வழியாக தம் திட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மோசே மேலானவராக விளங்கினார்.

🟢ஆற்றல் படைத்தவராக, சக்தி வாய்ந்தவராக, இறைத்திட்டங்களை எடுத்துரைக்கும் இறைவாக்கினராக மக்கள் மோசேயை பார்த்தனர்.

🔵இறைவாக்கினர் யாரெனில், தாங்கள் காட்சியில் கண்டதை இறைவனிடம் இருந்து கேட்டறிந்த உண்மைகளை, இறைவிருப்பத்தை மக்களுக்கு அச்சமின்றி அறிவிப்பவர்கள். 

🟡கடவுள் மோசேயிடம், அவரைப் போல் ஓர் இறைவாக்கினரை உருவாக்கப் போவதாகவும், அவர் ஆற்றில் மிக்கவராய் இருப்பார் என்றும், அவர் கடவுளின் திருவுளத்தையும் கடவுளின் வார்த்தைகளையும், மக்களுக்கு எடுத்துரைப்பார் என்று உறுதி கூறுகிறார்.

🟣அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இதனை இணைச்சட்டம் 18:15 "உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவில் நின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை   ஏற்படுத்துவார்" என்று கூறுகிறது.

🔴இந்த கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆற்றலை, அதிகாரத்தை நற்செய்தியாளர் மாற்கு 8 இடங்களில் எடுத்துக் கூறுகிறார்.

🟢இயேசுவின் அதிகாரம், ஆற்றல் கொண்ட போதனை, செயல்கள், எல்லாம் சமகாலத்து மறைநூல் அறிஞர்கள், இறைவாக்கினர்களிடம் இருந்து வேறுபட்டிருந்தது.

🟡ஆற்றல் படைத்த அதிகாரங்கள் நன்மை செய்வதற்கு ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

நிகழ்வு (2024 ஜனவரி ஊடக செய்தி)

தமிழகத்தின் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு விஜய கார்த்திகேயன் IAS. தான் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து பல நல்லப்  பணிகளை செய்து வருகின்றார். அவரின் சிந்தனையில் உருவான ஒரு நலத்திட்டம் "பிளாஸ்டிக் இல்லா திருப்பூர்" எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை சிந்திக்க ஆட்சியாளர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1324 அரசு பள்ளிகள், 600 தனியார் பள்ளிகள் இவற்றில் பயிலும் மாணாக்கர் மூலம் மாற்றம் ஏற்படுத்தலாம் என்று நினைத்த ஆட்சியர் இவ்வாறு அறிவித்தார். "ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் அந்த மாணவருக்கு படிப்பதற்கான நோட்டு, புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்" என்று எல்லா பள்ளிக்கூடங்கள் வழியாக எல்லா மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர் வீடுகளில் மிஞ்சும் பிளாஸ்டிக் பொருட்களை, எடுத்து வந்து, பள்ளியில் ஆசிரியர்களிடம் வழங்கி, நோட்டுப் புத்தகங்கள் வாங்கி பயன்படுகின்றனர்.

அதிகாரம் எல்லா ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது. ஆனால் இருக்கும் அதிகாரத்தை எப்படி ஆற்றில் மிகு செயல்பாட்டிற்குக் கொண்டு வருகின்றோம்? என்று சிந்திக்க வழிபாடு அழைக்கிறது.

ஆண்டவர் இயேசு இறையாட்சியை மக்கள் மத்தியில் எடுத்துரைத்த போது,  தந்தை கடவுள் தமக்கு அருளிய அதிகாரத்தை, ஆற்றலை மக்களின் நலங்களுக்காக அர்ப்பணம் செய்தார்.

திபா 10:38 "எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்"

🔵நோய்களைக் குணப்படுத்தி

🟡பேய்களை ஒட்டி

🟢பசித்தோருக்கு உணவளித்து

🔴தேவையில் இருந்தோருக்கு உதவி செய்து

🟣உள்மன காயங்களை ஆற்றி

🔵நன்மை செய்தார்

அதிகாரமும் ஆற்றல்மிகு பணியும்

இயேசு 👉 பதவி, செல்வாக்கு, அதிகாரம் நிறைந்த தலைமைக்கு ஒரு அல்ல.

இயேசு 👉 சட்டத்தை ஆழ்ந்து கற்று, தங்கள் வாசகப்பட்டைகளையும், குஞ்சங்களையும் பெரிதாக்கிய மறைநூல் அறிஞரும் அல்ல.

இயேசு 👉 பாரம்பரியமிக்க, லேவி, குருக்கள் குடும்பத்தில் பிறந்தவரும் அல்ல. சாதாரண தச்சன் மகன். நாசரேத்தைச் சார்ந்தவர். ஆனால் திருமறை அவரைக் குறித்துச் செல்லும் போது

யோவான் 1:3 "அனைத்தும் அவரால் உண்டாயின உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை" என்று. இவரே நமக்கு வழியும் உண்மையும் வாழ்வுமானவர். எனவே தான் இயேசு மக்களுக்கு வாழ்வு வழங்கும் பணியில் தன்னை முழுவதுமாய் இணைத்தார்.

இன்றைய நற்செய்தியில் தீய ஆவி பிடித்தவரை குணமாக்கும் இயேசுவின் செயலாற்றல் விளக்கப்படுகிறது. அவரின் போதனைகளை குறித்து மக்கள் சொல்லும் போது,

மாற்கு 1:22 "அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு கற்பித்து வந்தார்". இந்த அதிகாரம் தந்தை கடவுள் வழங்கியது. இது படைப்பு, உலகு, மனிதர் யாவற்றின் மீதும் உள்ள அதிகாரம். எனவே தான் தீய ஆவியிடம் "வாயை மூடு இவரை விட்டுப்போ" என்று இயேசு அகத்தியபோது அத்தீய ஆவி அவரை விட்டு வெளியேறியது. எனவே தான் மக்கள் வியந்து, திகைப்புற்று மாற்கு 1:27 "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே" என்று பேசிக் கொண்டனர்.

இயேசுவின் அதிகாரம்

பாவங்களை மன்னித்தது

மாற்கு 2:5 "மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

நோய்களைக் குணப்படுத்தியது

மாற்கு 2:11 "நீ எழுந்து உன்னுடைய படுக்கை எடுத்துக் கொண்டு உனது வீட்டிற்கு போ" என்பதன் வழியாக முடக்குவாத முற்றவன் எழுந்து நடந்தான்.

உயிர் கொடுத்தது

யோவான் 11:43 "லாசரே வெளியே வா" என்று அழைத்தபோது இறந்து மூன்று நாள் ஆன லாசர் உயிருடன் எழுந்தார்.

வாழ்வின் பாதையை மாற்றியது

மாற்கு 2:14 "என்னைப் பின்பற்றி வா" என்று ஆண்டவரால் அழைக்கப்பட்ட, சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த அல்பேயுவின் மகன் லேவி, புதிய பாதையில் பயணமானார்.

இயற்கையைக் கட்டுப்படுத்தியது

மத்தேயு 8:27 "காற்றும் கடலும் இவருக்கு கீழ்படிகின்றனவே இவர் எத்தகையவரோ" என்று இயேசு காற்றையும், கடலையும் அடக்கும்போது வியந்தனர். இவையெல்லாம் இயேசுவின் அதிகாரமிக்க, ஆற்றல் மிகு போதனைகளின் வெளிப்பாடுகள்.

தடைகளைத் தாண்டும் ஆற்றல்

இயேசுவின் இரக்கச்செயலால், பலர் நலமடைந்து முழுவாழ்வு பெற்றனர். தீமையை விளக்கும் போது அதிகாரத்தோடு செயலாற்றினர். இன்றைய நற்செய்தியில் தீய ஆவி பிடித்திருந்தவனை நலமாக்கும்போது அந்த தீய ஆவி இயேசுவிடம் மாற்கு 1:24 "நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்திய போது இயேசு வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ என்று அதட்டி வெளியேற்றினார்.

நேர்மையாய், உண்மையாய் இறையாற்றி பணி செய்யும் போது பலத்தடைகள் வரும். இயேசுவைப் புகழ்ந்து பேசுவது போல், தன்னை நிலைநிறுத்த பார்த்த தீயவன் அளிக்கப்பட்டான். அதுபோல கடவுள் நமக்குத் தந்த அதிகாரத்தை, ஆற்றலை உள்வாங்கி உண்மையான மனத்தோடு நல்லது செய்ய அழைக்கப்படுகின்றோம்.

இன்று நம் வாழ்வில் பல தீய சக்திகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. இயேசுவைப் போல், நாம் நன்மை செய்யாமல் இருப்பதே தீமையின் அடையாளம். இன்று நம்மிடம், பேராசை, பண ஆசை, பதவி வெறி, அதிகார வெறி. பிறரை அடக்கி ஆளும் தன்மை, பிறரின் மனித உணர்வுகளை மதியாமை, பணித்தலங்களில் லஞ்சம் வாங்குதல், பணி தாமதம் செய்து காலத்தை விரயம் செய்தல், குடும்பங்களில் வரதட்சணை பேய் போன்றவை நம்மை நாம் வாழும் சமூகத்தை ஆட்டிப் படைக்கும் போது அவற்றை அதிகாரத்தோடு, துணிந்து அப்புறப்படுத்த முன் வருகின்றோமா?

நமக்கு அல்லது நாம் பெற்றுக் கொண்ட திறமைகள் மூலம், தீயவற்றை புறந்தள்ள விழைகின்றோமா?

கடவுளுக்குப் பணிந்து வாழ்ந்து, அலகையை எதிர்த்து நின்றால் அது நம்மை விட்டும், நாம் வாழும் சமூகத்தை விட்டும் விலகும். அதை அதிகாரத்தோடும், துணிவோடும் மாற்ற நாம் முன்வருகின்றோமா?

யாக்கோபு 4:17 "நன்மை செய்ய ஒருவருக்கு தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால் அது பாவம்" என்பதை உணர்ந்து செயல்படுவோம்! 

இறையாட்சியில் ஆற்றல்மிகு செயல்வீரர் ஆவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

Thursday, January 25, 2024

இன்றைய இறைவாா்த்தை- 26.01.2023 (வெள்ளி)


 

சிந்திக்க சில வாிகள் - 26.01.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நலிந்தோரை வறியோரை பாதுகாப்பதே குடியாட்சி)- 26.01. 2024 (வெள்ளி)


 

Tamil Catholic Status song (கைவிடாத கடவுளே)- 26.01.2024


 

Tamil Catholic Status prayer (நலிந்தோரை வறியோரை பாதுகாப்பதே குடியாட்சி)- 26.01. 2024

 

 

இன்றைய இறைவாா்த்தை- 25.01.2023 (வியாழன்)


 

சிந்திக்க சில வாிகள் - 25.01.2023 (வியாழன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (தூய பவுலைப் போல் மனம் மாறுவோம்)- 25.01. 2024 (வியாழன்)


 

Tamil Catholic Status song (சுகராகம் நீயே இயேசுவே)- 25 .01.2024


 

Tamil Catholic Status prayer (தூய பவுலைப் போல் மனம் மாறுவோம்)- 25.01. 2024


 

Saturday, January 20, 2024

இன்றைய இறைவாா்த்தை- 21.01.2023 (ஞாயிறு)


 

சிந்திக்க சில வாிகள் - 21.01.2023 (ஞாயிறு)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நம் வாழ்வை நாள்தோறும் புதுப்பிப்போம்)- 21.01. 2024 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (நிலையான இறைவா)- 21.01.2024


 

Tamil Catholic Status prayer (நம் வாழ்வை நாள்தோறும் புதுப்பிப்போம்)- 21.01. 2024


 

இன்றைய இறைவாா்த்தை- 20.01.2023 (சனி)


 

சிந்திக்க சில வாிகள் - 20.01.2023 (சனி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (மக்கள் பணியில் ஆா்வத்துடன் உழைப்போம்)- 20.01. 2024 (சனி)


 

Tamil Catholic Status song (கருணை நிறைந்த பாா்வை போதும்)- 20.01.2024


 

Tamil Catholic Status prayer (மக்கள் பணியில் ஆா்வத்துடன் உழைப்போம்)- 20.01. 2024


 

Friday, January 19, 2024

பொதுக்காலம் 3 - ம் ஞாயிறு மறையுரை -21.01.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 3 -ம் ஞாயிறு

21.01.2024

யோனா 3 : 1 - 5, 10,  

1 கொரி  7: 29 - 31, 

மாற்கு 1: 14 - 20.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

மாற்றம்

🔴நாம் வழிபடும் இறைவன் அன்பின் இறைவன், இரக்கத்தின் இறைவன், மன்னிக்கும் இறைவன்.

🟡நம் கடவுள் எல்லோருக்கும் எல்லாமுமானவர், வேறுபாடற்றவர்.

🔵நாம் நம் சுயநலத்தால் அவர் அன்பிலிருந்து விலகி, தீமையில் உழலும் போது, நம்மைத் தண்டித்துத் திருத்தி புது வாழ்வு தரவும் தயங்காதவர்.

🟣நாம் ஆண்டவரின் விருப்பப்படி மனமாறி புது வாழ்வு வாழ வழிபாடு அழைக்கிறது.

இன்றைய வழிபாடு நான்கு மாற்றங்களை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.

(i) யோனாவின் மாற்றம்

(ii) நினைவே மக்களின் மாற்றம்

(iii) கடவுளின் மாற்றம்

(iv) சீடர்களின் மாற்றம்

1. யோனாவின் மாற்றம்

♦️இன்றைய முதல் வாசகம், புற இனத்து மக்களாகிய அசிரியர்களையும் தன்  உரிமை சொத்தாக ஏற்கும் கடவுளின் அன்பும், இரக்கமும் ஒருபுறம்.

♦️மறுபுறம் புற இனத்து மக்களாகிய அசிரியர்கள் கடவுளின் அன்புக்கும், இரக்கத்திற்கும் தகுதியற்றவர்கள் என்ற யோனாவின் முன்சார்பு எண்ணமும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ன் யோனா அப்படி எண்ணம் கொண்டார்?

1. அசிரியர்கள் பலமுறை இஸ்ரயேல் நாட்டுடன் போர் தொடுத்து, இஸ்ரயேல் நாட்டைச் சூறையாடி அடுத்தவர்கள் என்பதாலும்

2. புறஇனத்தார் எல்லாரும் பாவிகள் எந்த சுயநல உணர்வாலும்

3. தான் பரிசேயன் என்ற மேட்டிமை  எண்ணத்தாலும்

4. நான் விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய கடவுளை வழிபடுகிறவன் என்ற ஆணவத்தாலும்.

யோனா 1:9 "நான் ஓர் எபிரேயன், நீரையும், நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்" என்ற எண்ணத்தாலும் நினிவே செல்ல மறத்தார். அதோடு நினிவே நகர் மக்கள் பொல்லாதவர்கள், சொல்பேச்சு கேளாதவர்கள், கொடியவர்கள், பிடிவாத குணமுடையவர்கள், முரடர்கள். எனவேதான் நினிவே போக மாட்டேன் என்ற எண்ணம் கொண்டார். எனவே யாருக்கும் தெரியாமல் நான் தார்சீஸ் -க்கு தப்பி ஓடிவிடுவேன் என்று முடிவெடுத்தார் செயல்படுத்தினார். ஆனால் ஆண்டவர் நம் எண்ணம், உணர்வு, சிந்தனை, செயல் எல்லாவற்றையும் அறிகிறார். அவர் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்ற உணர்வு யோனாவிற்கு அற்று போயிற்று. திபா. 139:2 "நான் அமர்வதையும், எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர். என் நினைவுகள் எல்லாம் தொலைவில் இருந்தே உய்த்துணர்கின்றீர்" என்பதை யோனா கடல் பயண அனுபவத்தால், அறிந்து கொண்ட போது, தன் எண்ணத்தை மாற்றி, ஆண்டவரின் கருவியாக நினிவே சென்று, ஆண்டவரின் வாக்கை அறிவித்தார்.

தன் எண்ணத்தை மாற்றிய யோனா, நினிவே மக்களும் மாற அழைக்கின்றார். யோனா கடவுளின் கரமாய் நினிவே மாநகரில் செயலாற்றினார்.

2. நினிவே மக்களின் மாற்றம்:

நினிவே நகரில் யோனா ஆண்டவரின் வாக்கை தீர்க்கமாக எடுத்துரைத்தார். யோனா 3:4 "இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்" யோனாவின் இந்த இறைவாக்கு எல்லாருடைய உள்ளத்தையும் அசைத்தது.

ஏதேசதிகாரம் கொண்ட மக்களை அடிமைப்படுத்தித் துன்புறுத்தி இன்பம் காணும், வாழ்வில் நெறித்தவறிய வழிகளை விட்டொழிந்தனர்.

திபா. 51:17 "கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே கடவுளே! நொறுங்கிய குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை" என்பதை உணர்ந்து யோனா 3:5 "நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர், சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்"

♦️இது நினிவே மக்களின் நல்ல மனதினை, மாற்றத்திற்கான முயற்சியாய் வெளிப்பட்டது.

♦️அரசு ஆணையாக நினிவே நகரத்தார்க்கு அறிவிக்கப்பட்ட செய்தி யாதெனில்

♦️மனித சாக்கு உடை உடுத்திக் கொள்ள வேண்டும் (சாக்கு - நம்மை எளிமைப்படுத்துவதன் அடையாளம்)

♦️எல்லாரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்.

♦️எல்லாரும் தீய செயல்களை விட்டொழிக்க வேண்டும்..

♦️நாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் கைவிட வேண்டும் என்பதாகும்.

எல்லாரும் அரசு ஆணையையும், யோனாவின் மாற்றத்திற்கான அழைப்பையும் ஏற்று தங்களை மாற்றத்திற்கு உட்படுத்தினர். புது வாழ்வுக்குக் கடந்தனர்.

எசேக்கியேல் 36:26 "நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்தேன் புதிய ஆவி உங்களுள் புகுத்துவேன். உங்கள் உடலில் இருந்து கல்லான இதயத்தை எடுத்து விட்டு சதையால் ஆன இதயத்தை பொருத்துவேன்" என்ற இறைவாக்கினர் எசேக்கியேலின் கூட்டுப்படை நினைவே மக்கள் புதிதாய் படைக்கப்பட்டனர்.

கல் - உணர்வற்றது

        - உயிரற்றது - இந்த நிலையிலிருந்து

சதை - உணர்வுடையது

           - ஈரமுடையது, கனிவுடைய நிலைக்கும்.

🟢புதிய ஆவி என்பது - புதிதாய் பிறப்பது, மொத்தத்தில் நினிவே மக்கள் புதிதாய் பிறப்பெடுத்தனர்.

3.  இறைவனின் மாற்றம்

எசேக்கியேல் 18:23 "உண்மையில் பொல்லாரின் சாவையே நான் விரும்புகிறேன்" அவர்கள் தம் வழிகளின்று திரும்பி வாழ வேண்டும், என்பதுதான் கடவுளின் உள ஆவல். எனவே கனிவும், பரிவும், இரக்கமும் கொண்ட இறைவன், கொடியவர்கள் தம் வழிமுறைகளையும் தீயவர்கள் தம் எண்ணங்களையும் விட்டு விட்டு, ஆண்டவரிடம் திரும்பி வர வேண்டும் என்று விரும்பினார்.

எசாயா 55:7 "அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும். அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார். அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும். ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்" என்பதற்கிணங்க, இறைவன் அவர்களை மன்னித்தார். ஏனெனில் இறைவன் லூக்கா 19:10 "இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்" என்பதற்கிங்க இனிதே மக்கள் தன் தீய வழிகளை விட்டபோது ஆண்டவர் உள்ளம் இரக்கத்தாலும், மன்னிப்பாலும் நிரம்பி வழிந்தது.

யோனா 3:10 "அவர்கள் தீய வழிகளின்று விலகியதை அவர் கண்டு தம் மனதை மாற்றிக் கொண்டார்" இவ்வாறு மனதை மாற்றிக் கொண்ட இறைவன்,

யோனா 4:11 "இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனோ" என்றால் இறைவன்.

கடவுளின் மனமாற்றம்

- பரிவாய்

- இரக்கமாய்

- மன்னிப்பாய்

- வாழ்வு வழங்குவதாய் வெளிப்பட்டது.

4. சீடர்களின் மாற்றம்

ஆண்டவர் இயேசு  - தன் இறையாச்சிப் பணியில் உடனுழைப்பாளர்களாய் சீடர்களை அழைத்தபோது, ஆண்டவர் அவர்களுக்கு விடுத்த அழைப்பு இரண்டு,

1. மன மாற்றமும்

2. நற்செய்தியை நம்புவதும்

மாற்கு 1:15 "காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அறைகூவல் விடுத்தார்.

கலிலேயா கடற்கரையில் எளிமையாய், மீன் பிடித் தொழில் செய்த சீமோன், அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரை அழைக்கின்றார்.

மாற்கு 1:17 "என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்பது ஆண்டவர் இயேசு விடுத்த அழைப்பு

♦️அழைத்தவர் யார்?

♦️எதற்காக அழைக்கிறார்?

♦️நாம் என்ன செய்யப் போகின்றோம்?

♦️நம் எதிர்காலம் என்ன?

♦️என்ன தொழில் செய்யப் போகின்றோம்?

♦️எங்கள் குடும்பம் என்ன ஆகும்? என்று சிந்தியாது அழைத்தவர் பின் அணித்திரண்டனர்.

மாற்கு 1:18 "உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரை பின்பற்றினார்"

♦️என்ன விட்டு விடுகின்றோம் என்பது முக்கியமல்ல மாறாக எத்தகைய மனநிலையில் விட்டு விடுகின்றோம் என்பது முக்கியம். ஏனெனில்

2 கொரி 9:7 "முக மலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்குரியவர்" என்பதற்கு இணங்க இவர்கள் தங்களையே ஆண்டவர் இயேசுவுக்குக் கொடுக்கும் மனநிலையில் மாற்றம் பெற்றனர்.

🟣தம்மோடு இணைந்து பணியாற்ற அழைத்த சீடர்களுக்கு ஆண்டவர் இயேசு, தம்மோடு இருக்கவும், நற்செய்தியை பறைசாற்றவும், பேய்களை ஓட்டவும் (தீமையை அழிக்க) அதிகார வழங்கி ஆற்றல் படுத்தினார் 

இன்று இறைவன் நம்மையும்

🟢மனம் மாறி நற்செய்தியை நம்பி இறை குடும்பத்திற்கு ஏற்ப வாழ அழைக்கின்றார்.

🔵யோனா - நினிவே நகரத்திற்கு விடுத்த அழைப்பும், இயேசு கலிலேயா, யூதேயா, சமாரியப் பகுதிகளில் எடுத்த அழைப்பும் இன்று நமக்கு விடுக்கப்படுகிறது.

🟣நினிவே மக்களைப்போல் பழைய வாழ்வை விட்டு புதிய வாழ்வுக்கு கடந்து போக தயாரா?

🟡சீடர்களைப் போல எந்த முன்சார்பு எண்ணமோ, எத்தகைய காரணமுமின்றி, திறந்த, எளிய மனத்தோடு இறைவன் குரலுக்கு செவிமடுக்கிறோமா

🔴புது வாழ்வுக்கான பயணத்தில் நம்மை நாம் புதுப்பித்து மாற்றம் கண்டு, இறையாட்சிக்கு உரியவராகவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

Thursday, January 18, 2024

இன்றைய இறைவாா்த்தை- 19.01.2023 (வெள்ளி)


 

சிந்திக்க சில வாிகள் - 19.01.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நன்மைகளை மட்டுமே செய்யும் நல்லவராவோம்)- 19.01. 2024 (வெள்ளி)


 

Tamil Catholic Status song (தாய் தந்தை மறந்திடினும்)- 19.01.2024


 

Tamil Catholic Status prayer (நன்மைகளை மட்டுமே செய்யும் நல்லவராவோம்)- 19.01. 2024


 

இன்றைய இறைவாா்த்தை- 18.01.2023 (வியாழன்)


 

சிந்திக்க சில வாிகள் - 18.01.2023 (வியாழன்)