Thursday, February 29, 2024

இன்றைய இறைவாா்த்தை- 01.03.2023 (வெள்ளி)


 

சிந்திக்க சில வாிகள் - 01.03.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (பொறாமை குணம் இல்லா உள்ளம் பெறுவோம்)-01.03.2024 (வெள்ளி)

 


Tamil Catholic Status song (வியாகுல மாமாியே) - 01.03.2024


 

Tamil Catholic Status prayer (பொறாமை குணம் இல்லா உள்ளம் பெறுவோம்)- 01.03.2024


 

இன்றைய இறைவாா்த்தை- 29.02.2023 (வியாழன்)


 

சிந்திக்க சில வாிகள் - 29.02.2023 (வியாழன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (இதயம் அன்பால் நிறைந்திருந்தால் உலகில் அமைதி நிலைத்திருக்கும்)-29.02.2024 (வியாழன்)


 

Tamil Catholic Status song (இதயமே இதயமே) - 29.02.2024


 

Tamil Catholic Status prayer (இதயம் அன்பால் நிறைந்திருந்தால் உலகில் அமைதி நிலைத்திருக்கும்)- 29.02.2024


 

Tuesday, February 27, 2024

இன்றைய இறைவாா்த்தை- 28.02.2023 (புதன்)


 

சிந்திக்க சில வாிகள் - 28.02.2023 (புதன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (எவருக்கும் சூழ்ச்சி செய்யாமல் வாழ்வோம்)-28.02.2024 (புதன்)


 

Tamil Catholic Status song (அமுதூறும் நிலவே) - 28.02.2024


 

Tamil Catholic Status prayer (எவருக்கும் சூழ்ச்சி செய்யாமல் வாழ்வோம்)- 28.02.2024


 

இன்றைய இறைவாா்த்தை- 27.02.2023 (செவ்வாய்)


 

சிந்திக்க சில வாிகள் - 27.02.2023 (செவ்வாய்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நன்மை செய்யக் கற்றுக்கொள்ளும் நற்பயிற்சி பெறுவோம்)-27.02.2024 (செவ்வாய்)


 

Tamil Catholic Status song (தந்தாய் அருளை தர வந்தாய்) - 27.02.2024


 

Tamil Catholic Status prayer (நன்மை செய்யக் கற்றுக்கொள்ளும் நற்பயிற்சி பெறுவோம்)- 27.02.2024


 

Sunday, February 25, 2024

இன்றைய இறைவாா்த்தை- 26.02.2023 (திங்கள்)


 

சிந்திக்க சில வாிகள் - 26.02.2023 (திங்கள்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (இரக்கமும் மன்னிப்பும் கொண்டு வாழ்வை அழகாக்குவோம்)-26.02.2024 (திங்கள்)


 

Tamil Catholic Status song (தந்தையின் அன்பினை) - 26.02.2024


 

Tamil Catholic Status prayer (இரக்கமும் மன்னிப்பும் கொண்டு வாழ்வை அழகாக்குவோம்)- 26.02.2024


 

இன்றைய இறைவாா்த்தை- 25.02.2023 (ஞாயிறு)


 

சிந்திக்க சில வாிகள் - 25.02.2023 (ஞாயிறு)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நம் வாழ்வை கடவுளுடன் நெருக்கமாக்குவோம்)-25.02.2024 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (கொஞ்ச நேரம் கொஞ்சும்) - 25.02.2024


 

Tamil Catholic Status prayer (நம் வாழ்வை கடவுளுடன் நெருக்கமாக்குவோம்)- 25.02.2024


 

இன்றைய இறைவாா்த்தை- 24.02.2023 (சனி)


 

சிந்திக்க சில வாிகள் - 24.02.2023 (சனி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (மனதார கடவுளின் நியமங்களை நிறைவேற்றுவோம்)-24.02.2024 (சனி)


 

Tamil Catholic Status song (சம்மதமே இறைவா) - 24.02.2024




 

Tamil Catholic Status prayer (மனதார கடவுளின் நியமங்களை நிறைவேற்றுவோம்)- 24.02.2024


 

இன்றைய இறைவாா்த்தை- 23.02.2023 (வெள்ளி)


 

சிந்திக்க சில வாிகள் - 23.02.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நோ்மையை கடைப்பிடிப்போா் கடவுளுக்கு நெருக்கமானவா்கள்)-23.02.2024 (வெள்ளி)


 

Tamil Catholic Status song (இயேசுவின் அன்பை) - 23.02.2024


 

Tamil Catholic Status prayer (நோ்மையை கடைப்பிடிப்போா் கடவுளுக்கு நெருக்கமானவா்கள்)- 23.02.2024


 

இன்றைய இறைவாா்த்தை- 22.02.2023 (வியாழன்)


 

சிந்திக்க சில வாிகள் - 22.02.2023 (வியாழன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (தலைவா்கள் கூட்டுப்பொறுப்புடன் இணைந்து முடிவெடுப்போம்)-22.02.2024 (வியாழன்)


 

Tamil Catholic Status song (நீதானே என் சொந்தம்) - 22.02.2024


 

Tamil Catholic Status prayer (தலைவா்கள் கூட்டுப்பொறுப்புடன் இணைந்து முடிவெடுப்போம்)- 22.02.2024


 

Saturday, February 24, 2024

தவக்காலம் 2- ம் ஞாயிறு மறையுரை -25.02.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

தவக்காலம் 2 -ம் ஞாயிறு

25.02.2024

தொநூ22 : 1 - 2, 9-13,15-18,  

உரோமையர் 8 : 31 - 34, 

மாற்கு 9: 2  - 10.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நம் செயல்கள் மாட்சியை உணர்த்தட்டும்

🟣இயேசு தன் பாடுகளை முதன் முதல் அறிவித்தபோது, அதை எதிர்த்த பேதுருவை கடிந்து கொண்ட விதம் சீடர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.

🔴சீடர்கள் இயேசுவின் மீது கொண்டிருந்த எதிர்பார்ப்பு எல்லாம், இயேசுவின் இந்த அறிவிப்பால் உடைந்து சுக்கு நூறாகி போனது.

🟡ஆனால் சீடர்களின் பலவீனம், அறியாமையை உணர்ந்த இயேசு, தம் பாடு, மரணம் இவற்றிற்குப்பின் வரவிருக்கும் வெற்றியை , மாட்சியை தம் உருமாற்ற நிகழ்வு மூலம் வெளிப்படுத்துகிறார்.

🟢பாடுகளை அறிவித்த போது துடித்துப்போன பேதுரு, உருமாற்றத்தின் மாட்சியைக் கண்டு பரவசமடைந்து பெருமகிழ்ச்சி கொள்கிறார். அதிலே நீடித்திருக்க, நிலைத்திருக்க விரும்புகிறார்.

🔵மலைமேல் பேதுரு, யாக்கோபு, யோவான் பெற்ற அனுபவத்தை, மக்களோடு பகிர்ந்து வாழ்வாக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆவல்.

🟣இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் தான் கொண்ட விசுவாசத்தை மோரியாவில் - நிரூபணமாக்கி, அந்த இடத்திற்கு "யாவேயீரே" அதாவது "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்ற உள்ள உறுதியை வெளிப்படுத்தியதால், ஆண்டவரால்

தொநூ 22:17 "நான் உன் மீது உண்மையாகவே ஆசிப் பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன்" என்று மாட்சிப்படுத்தப்பட்டதையும் பார்க்கின்றோம்.

🔴மாற்றங்கள் -இறைமாட்சியை உணர்த்தும் போது, அதை புரிந்து ஏற்றுக்கொள்ள ஆழமான நம்பிக்கை அவசியமாகிறது.

நிகழ்வு (2024 பிப்ரவரி ஊடகச் செய்தி)

ஒருவேளை உணவுக்கான, தங்களின் பெற்றோரைத் தவிக்கவிடும், பிள்ளைகளுக்கு நடுவில் வறுமை, நோய், பிள்ளைகளின் புறக்கணிப்பால் மற்றும் தனிமையில் வாழும் பல முதியவர்களுக்கு, தன் சொந்த பணத்தில் உணவை சமைத்து வீடுகள், வீதிகளுக்குச் சென்று கொடுக்கிறார் மும்பையைச் சார்ந்த டாக்டர் உதய் மோடி. பல ஆண்டுகளுக்கு முன்பு பசியால் தவித்த பெரியவருக்காக தனது சொந்த வீட்டிலிருந்து உணவை விநியோகிக்கத் தொடங்கிய டாக்டர் உதய் மோடி சில நாட்களிலேயே இதைப் போன்ற பலர் இருப்பதை அறிந்து Shravan Tiffin Seva என்று அமைப்பை நிறுவி தினமும் உணவு வழங்குகிறார்.  அதோடு Son's Home என்ற பெயரில் முதியவர் இல்லம் கட்டி பராமரித்து வருகிறார்.

நிகழ்வு 2

பைசாபத் (Faizabad) நகரில் வசிக்கும் முகமது ஷெரீப் என்ற 82 வயதான, ஒரு சாதாரண சைக்கிள் கடை வைத்திருக்கும் ஒரு எளிய மனிதர்.

1992-ல் ஒரு நாள் இவரின் மகன் காணாமல் போனான். மீண்டும் வீடு திரும்பி வருவான் என்ற எதிர்பார்ப்பு, ஏக்கத்தோடு நம்பியிருந்த நிலையில், ஒரு மாதம் கழித்து, தண்டவாளத்தில் மகனின் உடலின் பெரும் பகுதி காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு, உடலின் எஞ்சியப்பகுதி கிடைத்தது. இந்தக் கொடிய வலி வேறு யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்த முகமது ஷெரீப், அன்று முதல் இன்று வரை யாரும் உரிமை கோராமல் அனாதையாய் கிடக்கும் உடல்களை எடுத்து எந்த பாகுபாடும் பார்க்காமல் மத ரீதியாக அடக்கம் செய்துள்ளார். இதுவரை 25000 உடல்களை அடக்கியுள்ளார். இவரின் இந்த மனிதாபிமான செயலுக்காக 2020-ல் "பத்மஸ்ரீ" விருது வழங்கப்பட்டது. இருவேறு நிகழ்வுகள், ஆனால் இரு நிகழ்வுகளிலும் "மனிதம் " "மனித நேயம் " அடிப்படையாகிறது. டாக்டர் உதய் மோடி மற்றும் திருமிகு முகமது ஷெரீப் இருவரும் தங்கள் செயல்களால் மக்கள் மனங்களில் ஏற்றம் பெற்று உயர்ந்து நிற்கிறார்கள்.

இன்றைய வழிபாட்டின் முதல் வாசகம் மோரியா பகுதியில் அமைந்துள்ள மலையில் ஆபிரகாம் ஈசாக்கை ஆண்டவர் விருப்பப்படி பலியிடத் துணிந்ததையும், தந்தை கடவுள் அவரை மாட்சிப்படுத்தியதையும் விளக்குகிறது.

இன்றைய நற்செய்தியில் தபூர் மலையில் ஆண்டவர் இயேசு உருமாற்றம் அடைந்து, தந்தை கடவுளோடு ஒன்றானார் என்பதையும், தந்தை கடவுள் அவரை மாட்சிப்படுத்தி மகிழ்ந்ததையும் உணர்த்துகிறது.

ஆபிரகாமின் நம்பிக்கையும், கடவுளின் கருணையும் :

ஆபிரகாம், சாரா இவரின் வயதான காலத்தில் கடவுளின் கொடையால் வழங்கப்பட்டவர் தான் ஈசாக்கு.

சிறுவன் வளர்ந்து வரும் வேளை ஆண்டவர் ஆபிரகாமிடம்

தொநூ 22:2 "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்கு காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்" என்று கேட்டபோது ஆபிரகாம் எவ்வித மறுப்போ, எவ்வித மன கலக்கமோ இன்றி அதிகாலையில் ஆபிரகாம் பயணப்பட்டார் ஈசாக்குடன்.

ஆபிரகாமின் நம்பிக்கை எல்லாம் உரோ 4:17 "இறந்தவர்களை வாழ்விப்பவரும், இல்லாததை தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு" வாழ்ந்தார். எனவேதான் மோரியா நோக்கிய பயணப்பாதையில் ஈசாக்கு தன் தந்தையை பார்த்து,

தொநூ 22:7 "இதோ நெருப்பும், விறகுக் கட்டுகளும் இருக்கின்றன. எரி பலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே" என்று தான் பலியாகப் போவது அறியாமல் கேட்டபோது ஆபிரகாம் "கடவுளே பார்த்துக்கொள்வார்" என்று பதில் கொடுத்தார்.

மலை உச்சியில் மகனை பலியிட முற்பட்டபோது மகனும், மறுப்பு சொல்லவில்லை, கடவுளும் கைவிடவில்லை ஆபிரகாமை

திபா 13:5 "நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன் நீர் அளிக்கும் விடுதலையில் என் இதயம் களிகூறும்" என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப ஆண்டவர், ஆபிரகாமை மாட்சிப்படுத்தினார்.

ஆபிரகாமின் நம்பிக்கை தன் மீது அல்ல, மாறாக கடவுள் மீது பிலி 4:13 "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு" என்பதை உறுதிப்பட வெளிப்படுத்தினார்.

நம் நம்பிக்கையின் ஆழம் என்ன?

நம் நம்பிக்கை செய்யலாக்கம் பெறுகிறதா?

யாக் 2:26 "உயிர் இல்லாத உடல் போல செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே" என் சொல். செயல்களால் நம்பிக்கையின் சிறந்த மாதிரியாக விளங்குகிறேனா?

ஆபிரகாமின் இறை நம்பிக்கை செயல் வடிவம் பெற்றது. ஆகவே அது அவரை மாட்சிப்படுத்தியது, உயர்த்தியது. நாம் இறைத்திட்டத்தை நிறைவேற்ற "நான் தயார்" என்ற பதில் கொடுக்க இயலுமா?

இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் உருமாற்றமும், தந்தை கடவுளின் செயலாக்கமும் உணர்த்தப்படுகிறது.

இயேசுவின் உருமாற்றத்தின் தேவை

🔴இயேசு "வார்த்தை மனு உருவானவர்" நம்மோடு ஒருவராக வாழ்ந்து, வளர்ந்து, தன்வாழ்வு, பணி இவற்றால் தந்தை கடவுளின் அன்புக்கு ஆட்பட்டார் என்பதை உணர்த்தவே இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்தது.

மாற்கு 9:7 "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவருக்கு செவி சாயுங்கள்" நேரம் வந்துவிட்டது மணிமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டு, பலவாறு துன்புறுத்தப்படுவார். இறுதியில் சிலுவைச்சாவை வழங்குவர். அதை எதிர் கொள்ள தந்தை கடவுள் இயேசுவை வலுவூட்டிய நிகழ்வாக உருமாற்றம் அமைந்தது.

🟣 அல்லலுற்ற சீடர்களைத் திடப்படுத்த, துன்பம் வழி மாட்சி, மகிமை, வாழ்வு பெற முடியும் என்பதை உணர்த்த உருமாற்றம் நிகழ்ந்தது.

இயேசு தன்பாடு, மரணம், உயிர்ப்பு இவற்றைச் சொன்ன போது சீடர்கள் துயருற்றனர், வேதனைப்பட்டனர். பேதுரு இயேசுவை தனியே அழைத்து,

மத் 16:22 "பேதுரு அவரைத்  தனியே அழைத்து கடிந்து கொண்டு ஆண்டவரே, இது உமக்கு வேண்டாம் இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார் எனவே அவர்களைத் திடப்படுத்த உருமாற்றம் தேவைப்பட்டது.

🔵தந்தை கடவுளோடு நாம் ஒன்றாகும் போது நாம் எத்தகைய நிலையை அடைவோம் என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது.

ஆண்டவரும் கடவுளமாகிய நாம் தூயவர் என்ற கடவுளோடு இயேசு ஒன்றான போது மாற்கு 9:3 "அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவிற்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின" அந்த அளவிற்கு மாட்சிப்படுத்தி சிறப்பு செய்தார்.

🟢இழப்பே வாழ்வு என்பதை உணர்த்திய நிகழ்வு. ஆபிரகாம் இழக்கத் துணிந்தார். விசுவாசத்தின் தந்தையானார். இயேசு கடவுள் நிலையில் இருந்து மனிதராகி, ஏழையாகி அடிமையானார் ஆகவே பிலி 2:11 "இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவும் அறிக்கையிடும்" என்பதன் வழியே இயேசு மாட்சி பெற்றார்.

🟡பழைய ஏற்பாடு கிறிஸ்துவில் முழுமை பெற்றது சட்டத்தை அழிக்க வந்தேன் என நினைக்க வேண்டாம் அதை நிறைவேற்றவே வந்தேன் என்பதன் வழியாக அது கிறிஸ்துவில் முழுமை பெற்றது.

🟢மோசே சட்டத்தின் அடையாளமாகவும், எலியா இறைவாக்கு இறைவாக்கினர்களின் அடையாளமாகவும் தோன்றியது கிறிஸ்துவில் சட்டமும், இறைவாக்கும் நிறைவு பெற்றது என்பதை உணர்த்தியது.

நம் வாழ்வில்

🟢 உரோ 6:8 "கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம்" எந்த நம்பிக்கையில் போட்டி, பொறாமை களைந்து, ஆண்டவர் இயேசுவில் மாற்றம் பெறுவோம்.

🟣சமூக வாஞ்சை, சமூக சிந்தனை அந்த நிலையில் இருந்து விசாலமான பார்வை பெறுவோம்.

🔵சுயநலம் களைந்து பொதுநலனில் அக்கறை கொள்ளும் பார்வை பெறுவோம். அதுவே நம்மை மாட்சிப்படுத்தும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

Thursday, February 15, 2024

தவக்காலம் 1- ம் ஞாயிறு மறையுரை -18.02.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

தவக்காலம் 1 -ம் ஞாயிறு

18.02.2024

தொநூ 9 : 8 - 15,  

1 பேதுரு  3 : 18 - 22, 

மாற்கு 1: 12  - 15.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

மனம் மாறி நற்செய்தியாய்

🔵இன்றைய வழிபாடு மனமாற்றம் பெற்று இறையாட்சியின் செயல் வீரர்களாய் மாற, வாழ அழைப்பு விடுக்கிறது.

🟣இறையாட்சி என்பது நம் செயல்களால் நாம் தந்தை கடவுளின் உரிமை சொத்து என்பதை உணர்த்துவதோடு, மானுட குழந்தைகள் நாம் சகோதரர் என்ற உயர் மதிப்பை உரக்க எடுத்துரைப்பதாகும்.

🔴நம் செயல்கள் நாம் கடவுளின் பிள்ளைகள், இறையாட்சியின் பிள்ளைகள் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

🟢நம் வாழ்வில் நல்லவற்றை, நல்ல மதிப்பீடுகளை, நல்ல சிந்தனைகளை வாழ்வாக்கும்போது இந்த உலகிற்கு நாம் நற்செய்தியாகின்றோம்.

🟡நம் நற்செயல்கள் மாற்றத்திற்கான வெளிச்சப்புள்ளியாய், புளிக்காரமாய் செயல்பட வேண்டும்.

🔵தொடக்க நூலில் மனிதன் இறைவனை மறந்து, இறைவன் மனம் வருந்தும்படி வாழ்ந்த காலத்தில் நோவா - அம்மக்களுக்கு நற்செய்தியாக விளங்கினார்.

🔴பாவத்தில் திளைத்த நம்மை மீட்க நீதிமானாகிய, பாவமே அறியாத கிறிஸ்து நமக்காகத் தன்னை இழந்தது நற்செய்தி என்பதை தூய பேதுரு எடுத்துரைக்கின்றார்.

🟢இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பும் இதுதான், நம்முடைய சுயநலனை, குறுகிய, பிறரன்பற்ற, செயல்களைக் கடந்து இறைவனோடும், பிறரோடும்,  நம்மோடும் உறவைப் புதுப்பித்து, இறையாட்சியின் பிள்ளைகளாய் நற்செய்தியாய் வாழ அழைக்கிறது.

🟣எல்லாவற்றிற்கும் மேலாக மாற்றம் வரும்போது இறைவன் தங்கும் புனிதமிக்க இடமாகின்றோம்.

நிகழ்வு 1

ஆஸ்டிரியா நாட்டின் தலைநகரம் "வியன்னா". இங்கு வசித்து வருபவர் 31 வயதான மெரின்எங்கல்ஹோம்.  இவ் மிகப்பெரிய செல்வந்தர். அவர் தன்னிடமிருந்து சொத்தின் பெரும் பகுதி அதாவது 25 மில்லியன் யூரோவை ஏழைகளுக்கு தானமாக வழங்கினார். இத்தொகையில் இந்திய மதிப்பு 227 கோடி ரூபாயாகும், ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் இவரின் செயல் நற்செயலாகியது.

நிகழ்வு 2

ஈரோட்டைச் சார்ந்த 23 வயதான இளம் பெண் மனீஷா. இவர் இறைச்சி வெட்டும் தொழிலாளியான கிருஷ்ணசாமியின் மகள். தன்னுடைய சிறு வயதிலேயே வார இறுதி நாட்களில் இறைச்சி கடைக்குச் சென்று, தந்தைக்கு உதவுவார். தந்தை தன்மகள் மனீஷாவுக்கு கொடுக்கும் சிறிய தொகையை சேமித்து வைத்து ஏழைகளுக்கு உணவு, உடை வாங்கி கொடுத்து மகிழ்வார். 12- ஆம் வகுப்பு முடித்து B.Scநர்சிங் பாடப்பிரிவைத் தேர்வு செய்து, படித்து முடித்து "நந்தா" கல்லூரியில் விரிவுரையாளர் ஆனார். மாலை மற்றும் விடுமுறை நாட்களில், சாலை மற்றும் வீதிகளில், பஸ் நிலையங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும், முதியவர், அனாதைகள், மனநிலை குன்றியோர், பசியால் துன்புறுவோர் ஆகியோரை இனம் கண்டு, அவர்களைத் தூய்மைப்படுத்தி, உணவு, உடை வழங்கி அரசு துணையோடு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 350 - க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர், மனிஷாவால் காப்பாற்றப்பட்டு மறுவாழ்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 23 வயதான ஈரோட்டு மனீஷா பல ஆயிரம் குழந்தைகளுக்கும், பல ஆயிரம் இளைஞர்களுக்கும் நற்செய்தியாக வாழ்கிறார்.

மனதுருகும் இறைவன்

கடவுள் எல்லாவற்றையும் படைத்த பின்பு, மனிதரை தம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்குவோம் என்று எண்ணி, மானுடரை அவருடைய சாயலில் படைத்து மகிழ்ந்தார். தொநூ 1:31 "கடவுள் தான் உருவாக்கி அனைத்தையும் நோக்கினார். அதை மிகவும் நன்றாய் இருந்தது" ஆனால் மனிதன் தான் கடவுளின் சாயல் என்பதை மறந்து, பேராசை, வஞ்சகம், சூழ்ச்சி, கொலை, ஒழுக்கக்கேடு, வன்முறை ஆகியவற்றையே தன் வாழ்வாக்கியதால் தொநூ 6:6 "மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்ததது" என்று ஆண்டவரின் மனதுருக்கத்தை எடுத்தியங்குகிறது. ஆகவே வேதனையுற்றக் கடவுள்  தொநூ 6:7 "நான் படைத்த மனிதரை மண்ணில் இருந்து அழித்தொழிப்பேன். மனிதர் முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப்பறவைகள் வரை அனைத்தையும் அளிப்பேன்" என்றார். ஆனால் கடவுள் பார்வையில் நேர்மையோடு நடந்த நோவாவிற்கு ஆண்டவரின் அருள் பார்வைக் கிடைத்தது.

40 நாள் இரவும் பகலும் மண்ணுலகில் பெரும் மழை பெய்தது. ஆண்டவரின் அறிவுறுத்தல் படி பேழைக்குள் நுழைந்த நோவாவும், அவரின் குடும்பத்தாரும், பறவை, விலங்குகள் காப்பாற்றப்பட்டன.

பேரழிவிற்குப்பின் ஆண்டவர் நோவாவுடன் ஏற்படுத்திய நல்லுறவு உடன்படிக்கையையே இன்றைய முதல் வாசகம்.

இறைவன் நோவா மற்றும் அவன் பிள்ளைகளோடு மட்டும் உடன்படிக்கைச் செய்யவில்லை. மாறாக, விலங்குகள், பறவைகள், படைப்பனைத்தோடும் உடன்படிக்கை மேற்கொண்டார். இந்த உடன்படிக்கை மூன்று உண்மைகளை உணர்த்துகிறது.

1. மனிதன் கடவுளுக்குக் கட்டப்பட்டவன்.

2. நாம் படைப்புகள் மேல் கரிசனை கொள்ள வேண்டும். இதனை புனித பிரான்சிஸ் அசிசியார் வாழ்வாக்கினார்.

3. மக்கள் அனைவரும் கடவுளின் உடன்படிக்கையில் அடங்குவார் 

தொநூ 9:9 "இதோ நான் உங்களோடும், உங்களுக்குப் பின் வரும் உங்கள் வழி மரபினரோடும்" என் உடன்படிக்கையை நிலை நாட்டுவேன் என்கிறார் ஆண்டவர். இது நமக்கு உணர்த்துவது.

🟣நாம் தனித்த நிலையில், உறவற்ற நிலையில் இறைவனுக்குத் தொண்டு அல்லது பணி செய்ய இயலாது.

🟢சமூகத்தோடு நம்மை இணைத்து, மக்களை முழுமையாக ஏற்று அன்பு செய்து வாழும் போது இறைவனின் உடன்படிக்கைக்குத் தகுதியுள்ளவர் ஆகின்றோம்.

🔴எனவேதான் இறைவன் சின்னஞ்சிறு என் சகோதரர் ஒருவருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்றார். எனவே கடவுளின் உடன்படிக்கை உணர்த்துவது மாற்றம் பெற்று நல்லவர்களாய் கடவுளுக்கு உகந்தவர்களாய் உறவோடு வாழ வேண்டும் என்பது.

மாற்றம் பெற காரணம்

தூய பேதுரு தன் திருமுகத்தில் இரு காரியங்களை வலியுறுத்துகிறார்.

ஆண்டவராகிய இயேசு,

🟡பாவமே அறியாதவர் - பாவிகளாகிய நமக்காகவும்,

🟡நீதியுள்ளவர் - நீதியற்ற, அநீதர் நம்மை மீட்பதற்காக பலியாக தன்னை ஒப்புக்கொடுத்தார்.

இயேசு தன்னை ஒரு முறை பலியாக ஒப்புக்கொடுத்ததன் வழியாக நாம் மீட்கப்பட்டோம்.

எபி 10:10 "இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை  தம் உடலை பலியாக செலுத்தியதன் மூலம் நாம் தூயராக்கப்பட்டிருக்கின்றோம்". எனவே நாம் நம்மை மாற்றிதான் ஆக வேண்டும்.

நற்செய்தியாய் வாழ அழைப்பு

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, பாலை நிலத்தில் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டு, சோதனைகளை வென்ற பின்பு இயேசு கலிலியோவுக்கு வந்து நற்செய்திப் பறைசாற்றினார். காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது மனமாறி நற்செய்தியை நம்புங்கள் என்பது ஆண்டவர் இயேசுவின்  அறைகூவல்.

இறையாட்சி, நற்செய்தி என்பது -எங்கோ, யாருக்கோ அந்த மாறாக நம்மில் நிலை பெற வேண்டியது. இறைவன், படைப்புகள் வழி, மகன் இயேசு வழி, நற்செய்தி வழியாக, அருள் அடையாளங்கள் வழியாக என்றும் நமக்கு அழைப்பு கொடுக்கிறார். இறையரசு நம்மிடையே குடிகொண்டுள்ளது. எனவே மாற்றத்திற்கான செயல்களில் ஈடுபட்டு நற்செய்தியாய் வாழ அழைக்கப்படுகின்றோம்.

இறைவனின் அளப்பரிய அன்பை நாம் ஏற்றுக் கொண்டால் அவவிறைவனை பிறர்தோழமையில், பிறரன்பில், நீதி நிலைநாட்டுவதன் வழி வெளிப்பட வேண்டும். அது பிறருக்கு நற்செய்தியாய் அமையும்.

இறையாட்சியின் பிள்ளைகள் நாம், நான், எனது என்ற சுயநலம் தவிர்த்து, நாம் கடவுளின் அன்பு பிள்ளைகள் என்ற உணர்வோடு, அன்பு, சமாதானம், உறவு வாழ்வுக்குள் பயணப்படும் போது பிறருக்கு நற்செய்தியாய் புலப்படும்.

திபா 119:11 "உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்", என்ற தாவீதின் வரிகளை, உள்வாங்கி, தீமையை விலக்கி நன்மைகளால் அணி செய்யும் போது நற்செய்தியாய் அமைகின்றோம்.

🟡மனித நேய செயல்களால் நாம் ஆபிரகாமின் பிள்ளைகள் என்பதை உலகிற்கு உணர்த்தும் போது அது மற்றவர்களுக்கு நல்ல செய்தியாய் அமையும்.

🔴நம்மிடம் உள்ள ஆணவம், அகங்காரம், வரட்டு கெளரவம் எல்லாவற்றையும் களைந்து நாம் சகோதரர் என்ற உணர்வு உயிர் தரும் போது நற்செய்திக்குச் சான்று பார்க்கின்றோம்.

🟣தேவையற்ற வன்மங்களை களைந்து உறவுக்கு உயிரூட்டும் போது அது நல்ல நற்செய்தியாய் அமையும்.

 🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*