இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
பொதுக்காலம் 5 -ம் ஞாயிறு
04.02.2024
யோபு 7 : 1 - 4, 6 - 7,
1 கொரி 9 : 16 - 19, 22 - 23,
லூக்கா 1: 29 - 39.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
நலம் நல்கும் இறைவன்
🔵மானுட வாழ்வில் இன்பத்தை விட துன்பமும், மகிழ்வை விட மனக்கலக்கமும், கவலையும், கண்ணீருமே அதிகம்.
🟣துன்பம், மனகலக்கம், கவலை இவற்றுக்கான காரணம் அறிந்து அவற்றிலிருந்து விடுதலை பெற முயற்சிப்பதே யோபு நூல்.
🔴கிறிஸ்தவ வாழ்வு என்பது தியாகத்தையும், அர்ப்பணத்தையும் உள்ளடக்கிய சான்று பகரும் வாழ்வு.
🟢நற்செய்திக்குச் சான்று பகர்வதில் நம் அனைவருக்கும் கடமையும், பொறுப்புணர்வு உண்டு.
🟡நற்செய்திக்கு சான்று பகர உழைக்கும் போது நமக்கு அர்ப்பண மனநிலையும், தியாக உள்ளமும், ஆழமான நிறை நம்பிக்கையும் அடிப்படையாகிறது.
🔵யோபுவை பொறுத்த அளவில் எல்லாவற்றையும் இழந்த பின்பும் இறை நம்பிக்கையில் நிலைத்து நின்றார். இறை உறவில் தன்னை உறுதிப்படுத்தினார்.
🟣இறை நம்பிக்கையில் நாம் ஆளப்படும்போது அல்லது இறை உறவில் நாம் நிலைக்கும் போது இடர்கள் நம்மை வருத்தும். அப்போது உறவுகள் பழிக்கும், உற்றார் வெறுப்பர், நண்பர் நகைப்பர், எல்லாரும் ஏளனம் செய்வர்.
🔴ஆயினும் என் இறைவன் என்னில் வாழ்கிறார், என்னை மீட்பார், நலமாக்குவார் என்ற உறுதிப்பாடே நமக்கு அடிப்படையாகிறது.
யோவான் 16:20 "நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள் அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள் ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாய் மாறும்" என்ற இறைவாக்கு யோபுவின் வாழ்வில் முழுமையாய் நிறைவேறியது.
நிகழ்வு
♦️ஒடிசா மாநிலம், புல்பானி அருகே, பேரா பலி கிராமம். அங்கு நான்கு கிறிஸ்தவ குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அதில் ஒன்று விவசாயி அபிமன்யூ நாயக் (40) மனைவி பிரியத்தம்மா மற்றும் நான்கு குழந்தைகள்.
♦️2010 ஆகஸ்ட் 26 சமயவெறி கொண்டவர்கள், வீட்டிற்கு வெளியே படுத்துக்கிடந்தவரைக் தாக்கினர். காரணம் கிறிஸ்தவர்கள் என்பதால், நீ மதம் மாறு என்று துன்புறுத்தினர்.
♦️நான் மதம், மனம் மாற மாட்டேன் இது அபிமன்யூ நாயக்கின் பதில். இதனால் கோபமுற்றவர்கள் அவரை கட்டிச்சாலையில் தரதரவென இழுத்துச் சென்றனர்.
♦️அபிமன்யூவின் அலறும் சப்தம் கேட்டு, அவரின் அண்ணன் வந்தார், கதறினார், கெஞ்சினார் தம்பியை விட்டு விடுங்கள் என்று.
♦️தன்னைப் போல் தன் அண்ணனை அவர்கள் கொல்லக்கூடாது என்பதற்காக ஓடிவிடு, ஓடிவிடு என்று அபிமன்யூ தன் அண்ணனை பார்த்து கத்தினார்.
♦️தம்பியின் அறிவுறுத்தலின் பேரில் அவர் அண்ணன் வேதனையோடு கடந்து போனார்.
♦️அபிமன்யூ உடலில் நெருப்பைக் கொளுத்தினார்கள். தீ விரைந்து பரவியது தரையில் புரண்டு அணைக்க முற்பட்டார் ஆனால் பயனில்லை.
♦️அபிமன்யூவின் அலறல் கேட்டு மனைவியும் மக்களும் வெளியே வந்தனர்.
♦️மனைவியிடம் தண்ணீர் கேட்டார், அவர் உடனே தண்ணீர் கொடுத்தார், குடித்த அபிமன்யூ அங்கே, உயிர் துறந்தார்.
♦️ஏன் இப்படி? ஏன் இத்தனைத் துன்பம்? ஆண்டவர் இருக்கிறாரா? என்று பல வினாக்கள் உள்ளத்தில் எழும். மத்தேயு 5:11 "என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி உங்களைப் பற்றி இல்லாதவை, பொல்லாதவையெல்லாம் சொல்லும் போது நீங்கள் பேறுபெற்றவர்களே "
மத்தேயு 5:12 "மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்கு கிடைக்கும் கைமாறு மிகுதியாகும்"
என்பது நம்பிக்கை வாழ்வின் கைமாறாகும்.
இன்றைய முதல் வாசகத்தில் யோபுவின் துன்பமும், அவரின் மனக்கலக்கத்தின் வெளிப்பாடும் புலப்படுகின்றது. யோபு எப்படிப்பட்டவர் எனில் யோபு "ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும், நேர்மையாளருமாய் இருந்தார், கடவுளுக்கு அஞ்சி தீயதை விலக்கினார்”
யோபு
♦️மாசற்றவர்
♦️நேர்மையாளர்
♦️கடவுளுக்கு அஞ்சியவர்
♦️தீயதை விலக்கியவர் - ஆனால் யோபு துன்புற்றார்.
திருப்பாடல்கள் 34:19 "நேர்மையாளருக்கு நேரிடும் துன்பங்கள் பல அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்" என்பதற்கிணங்க யோபு பின்னைய நாளில் தீமைகளில், துன்பங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
யோபுவின் துன்பங்களாக
♦️பிள்ளைகளை இழந்தார்
♦️அனைத்து செல்வத்தையும் இழந்தால்
♦️உடல் நோய்
♦️மனைவி பழித்தார்
♦️நண்பர் நகைத்தார்
♦️உறவுகள் உதாசீனப்படுத்தினர்
♦️யோபுவின் நம்பிக்கையை, தெய்வத்தைப் பழித்தனர் - ஆனால் யோபு,
யோபு 5:18 "காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரே" யோபு 5:19 "ஆறுவகை அல்லல்களினின்றும் அவர் உம்மை மீட்பார். ஏழாவதும் உமக்கு இன்னல்தராது" என்று ஆறுதல் படுத்தப்பட்டார். இதனால் ஆண்டவரில் கொண்ட நம்பிக்கை, இன்னும் உறுதியாயிற்று.
⭐என்ன நடந்தாலும் நான் ஆண்டவரில் மகிழ்ச்சியாய் இருப்பேன் என்ற உணர்வு, நிலைப்பாடு யோபுவில் நிலைத்தது. அதன் விளைவு யாதெனில் யோபு 42:12 "யோபுவின் முன்னையநாளில் இருந்ததை விட பின்னையநாளில் ஆண்டவர் அதிகமாய் ஆசி வழங்கினார்" எவ்வாறெனில் மக்கள், ஆடு, மாடு, கன்று, காளைகள், சொத்து, ஏர் மாடுகள், ஒட்டகங்கள், நற்சுகம் இவற்றால் ஆசி வழங்கினார்.
⭐இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் பேதுருவின் மாமியாரின் காய்ச்சலைக் குணப்படுத்துகிறார். அதன் விளைவு அவர் ஆண்டவர் இயேசுவுக்குப் பணிவிடைச் செய்தார். இது
⭐அவர் முழு நலம் பெற்றார், தன் பழைய வலுவான நிலைக்கு திரும்பி விட்டார் என்பதை உணர்த்துகிறது.
⭐இயேசு பேதுருவின் வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்த மக்கள் நோயற்றோர், தீய ஆவியால் துன்புற்றோர், அனைவரையும் இயேவிடம் அழைத்து வந்தனர்.
🔴இயேசு நோயினால் வருந்தியவர்களை குணப்படுத்தினார்.
🟣தீய ஆவி பிடித்திருந்தவர்களை சுகப்படுத்தினார்.
🔵எளிய மக்களுக்கு நற்செய்தியை எடுத்துரைத்தார்.
🟡அகப்பார்வையற்றவர் அகப்பார்வைப் பெற்றனர். நாமும் பிறருக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
🟢அதோடு தந்தை கடவுளோடு நாம் செபத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதை தன் செப வாழ்வாய் நிலை நிறுத்தினார்.
🔴இயேசுவின் நலமாக்கும் பணியைக் கண்ட மக்கள், அவரைத் தேடிச் சென்றனர்.
வாழ்வு பெற்றனர்.
நலம் பெற்றனர்.
மன அமைதி பெற்றனர்.
ஏனெனில் குணப்படுத்தும் பணி என்பது விடுதலைப்பணி.
♦️விடுதலை பணி என்பது இறையரசின் அடையாளம்.
♦️இறையரசின் அறிகுறிகள் ஆண்டவராகிய கிறிஸ்துவில் வெளிப்பட்டது.
♦️இறையரசுப் பணியை முன்னெடுக்கும் திருச்சபையிலும் குணமளிக்கும் பணி முக்கியப் பணி என்பது தெளிவு.
♦️நோய் நொடிகள் இயல்பான மனித சூழலை மாசுபடுத்துவதால் குணமாக்கும் பணி மீட்புப் பணியாய் மாறுகிறது.
♦️இயேசு இதைச் சென்ற இடமெல்லாம் செய்தார்.
♦️நாமும் இறையன்பில் நிலைத்து, நிறை உறவில் வளர்ந்து இறை நம்பிக்கையில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்!
நம்முடைய வாழ்வில்
🟣இன்னல், இழப்பு, துன்பம், கண்ணீர் வரும்போது நம் விசுவாச நிலைப்பாடு என்ன?
🔴நோய் நொடிகள் தாக்கும் போது ஆண்டவர் நலமருள்வார் என்ற உறுதிப்பாடு நம்மிடை உண்டா?.
🟢அவசரமான உலகில் அன்புறவைத் தொலைத்து, ஆழ்மனகாயப்பட்டவர்களை நலப்படுத்தும் பணியில் நான் ஈடுபடுகிறேனா?
🟡உறவுகள் இன்றி உள்ளம் உடைந்து, நொறுங்கிப் போனவர்களுக்கு, உறவுகளின் பாலமாய் அமைந்து உறவுகளை வலுப்படுத்த உதவுகிறோமா?
🔵நலமாக்கும் பணி என்பதே முழு மனித விடுதலைப்பணி.
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
No comments:
Post a Comment