Friday, June 28, 2024

இன்றைய இறைவாா்த்தை- 29 .06.2023 (சனி)


 

இன்றைய சிந்தனை- 29.06.2023 (சனி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (திருஅவைக்காய் இணைந்து உழைப்போம்)-29.06.2024 (சனி)


 

Tamil Catholic Status song (தூதா்களே எம் காவலரே) -29.06.2024


 

Tamil Catholic Status prayer (திருஅவைக்காய் இணைந்து உழைப்போம்)-29.06.2024 (சனி)


 

பொதுக்காலம் 13-ம் - ஞாயிறு மறையுரை -30.06.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு

30.06.2024

சா.ஞா 1: 13-15, 2 : 23 - 24,  

2 கொரி 8: 7, 9, 13 - 15,

மாற்கு 5: 21- 43.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நம்பி வாழ்வு பெறுவோம்

🟣வாழ்வோரின் கடவுளாகிய இறைவன், நாம் வாழ வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காகவே மனிதனை தம் சாயலாகப் படைத்தார்.

🟢நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்ப, துயர்கள் நம்முடன் வாழ்பவர்களுக்குப் புரிவதில்லை, தெரிவதில்லை.

🔴நம் துயரில், அழிவில் இறைவன் மகிழ்வதில்லை, கடவுளின் விருப்பமெல்லாம் மனிதன் நலமாய், நன்றாய், இன்புற்று வாழ வேண்டும் என்று முதல் வாசகம் எடுத்துரைக்கிறது.

🟡இறந்து விட்டான் என்று உலகத்தார் கூற, "அஞ்சாதீர் நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறுவதன் வழியாக, மானுடர்க்கு பணம், புகழ், செல்வாக்கு இவற்றால் வாழ்வைப் பெற்றுவிட முடியாது. மாறாக கிறிஸ்துதான் வாழ்வு தர முடியும். அதற்கு அடிப்படை நம்பிக்கை என்ற உண்மையை உறுதியாக முன்வைக்கிறது நற்செய்தி.

🔵நாம் வாழ்வு பெற நமது நம்பிக்கை நம் செயல்களில், அறப்பணிகளில் வெளிப்பட வேண்டும் என்பதை தூய பவுல் கொரிந்து நகர் மக்களுக்கு அறிவுறுத்துவதை இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. 

யாக் 2:26 "உயிர் இல்லா உடல் போல செயல்கள் இல்லாத நம்பிக்கையும் செத்ததே" என்று யாக்கோபும் உறுதிப்படுத்துகிறார். எனவே ஆண்டவர் இயேசுவில் நாம் கொள்ளும் நம்பிக்கையால் நாம் வாழ்வு பெற்று, அதை நாம் நம் செயல்களால் பிறரோடு பகிர்ந்து வாழ, உலகை வாழ்விக்க வழிபாடு அழைக்கிறது.

நிகழ்வு (06.04.2022 சமூக ஊடகச்செய்தி)

ரஷ்யா, உக்ரைன் போர் ரஷ்யா ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி மக்களை அழித்தது. உக்ரைனின் தலைநகரான கீவ் வின் புறநகர் பகுதியில் விழுந்தது. ரஷ்யா ஏவிய ஏவுகணை பல மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளை தாக்கியது. அதில் ஒன்று, ஒரு வீட்டின் சமையல் அறையில் விழுந்தது. இது அந்த வீட்டின் மாடியைத் துளைத்துக் கொண்டு விழும் போது அக்குடும்பத்தார் குடும்பத்திலுள்ள எல்லாரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் உட்பட 9 பேரும் செபித்துக் கொண்டிருந்தனர். சாதாரணமாக விழும் ஏவுகணை வெடித்துச் சிதறும். ஆனால் அந்த மக்கள் செபித்துக் கொண்டிருந்தபோது விழுந்த ஏவுகணை வெடித்துச் சிதறாமல் அப்படியே கிடந்தது. திபா 34:7"ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவார்" என்ற இறைவார்த்தை ஆண்டவரை நம்பி,  அவரில் வாழ்ந்த மக்களுக்கு வாழ்வு வழங்கியது. 

1. வாழ்வு தருபவர் கடவுள் 

வெறுமையில், உருவமற்று இருளாய் இருந்த உலகை கடவுள் தம் வார்த்தையால் ஒருங்கமைத்தார். இயற்கை, பறவைகள், விலங்குகளை படைத்து நன்று என்று கண்டார். மனிதரை தன் சாயலாய் படைத்தார். அவரின் உயிர்மூச்சை வழங்கி வாழ்வு தந்தார்.  

தொநூ 2:7 "நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத மனிதன் உயிருள்ளவன் ஆனான்"

♦️கடவுளின் சாயலையும், கடவுளின் உயிர் மூச்சையும் பெற்றதால் மனிதன் வாழ்வு பெற்றான். கடவுள் வாழ வைத்தார். ஆனால் மனிதன் கடவுளின் அன்பிலிருந்து, வாழ்வின் நெறிமுறைகளிலிருந்து விலகலானான்

♦️கடவுள் வாழ்வு வழங்க, மனிதனோ தீமையை உறுதியாய் பற்றினான். தனக்குத் தானே அழிவை தேடிக்கொண்டான். ஆனால் ஆண்டவர் 

எசேக்கியேல் 18:32 "எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை என்கிறார்,  தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்" என்றும் எசேக்கியேல் 33:11 "தீயோர் சாகவேண்டும் என்பது, என் விருப்பமன்று, ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று ஆண்டவர் தன்னை வெளிப்படுத்துகிறார்.

♦️வாழ்வு தரும் கடவுள் நம்முடன் இருக்கும் போது சாவு எவ்வாறு வந்தது? மனிதரின் பேராசை, சுயநலம், தீய வழிமுறைகளால் நுழைந்தது. இவை உலகைச் சார்ந்தவை.

1யோவான் 2 : 16 "ஏனெனில் உலகச் சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்தப் பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருபவை அல்ல அவை உலகில் இருந்தே வருபவை" எனவே நாம் 

யோவான் 14: 6"வழியும் உண்மையும் வாழ்வுமான" இறைவனை உறுதியாய் பற்றிக்கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

2. குணமளிப்பவர் இயேசு

திருமுழுக்கு யோவானின் சீடர்கள், இயேசுவிடம் வந்து, வரவிருப்பவர் நீர்தாமோ? என்று கேட்டபோது நீங்கள் கண்டதையும், கேட்டதையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். எதைக் கண்டனர்? எதைக் கேட்டனர்? லூக் 7:22 

"பார்வையற்றோர் பார்க்கின்றனர்.

கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், 

தொழுநோயாளர் நலமடைகின்றனர், 

காது கேளாதோர் கேட்கின்றனர், 

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்,

ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது"  - இந்த குணப்படுத்தும் செயல்கள் எல்லாம் இறையாட்சியின் செயல்களே!

🔵இன்றைய நற்செய்தியில் இரு நிகழ்வுகள் நம்பிக்கையால் நலம் பெற்றதை, வாழ்வு பெற்றதை உணர்த்துகிறது.

1. தொழுகைக் கூடத் தலைவர் யாயீரின் மகள்

2. 12 ஆண்டுகள் உதிரப் போக்கினால் வருந்தியவர்.

🔴யாயீரின் மகள் நோயால் துன்புறுகிறார். மிக கடினமானச் சூழல் இந்நிலையில் எத்தனையோ பெரிய "ரபி" க்கள் இருந்தபோது கிறிஸ்துவே வாழ்வு தருகிறவர் என்பதை உணர்ந்து இயேசுவிடம் வந்தார் வந்து 

மாற்கு 5:23 "நீர் வந்து அவள் மீது உன் கைகளை வையும் அப்போது அவர் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வார்" என்று வேண்டினார்.

♦️இயேசுவின் தொடுதல் வாழ்வு வழங்கும் என்று நம்பினார்.

♦️யாயீரின் மகள் இறந்தாள் என்ற செய்தி யாயீரயும் இயேசுவையும் எட்டியவுடன், இயேசு யாயீரிடம் மாற்கு 5:36 "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" யாயீரும் உறுதியாய் நம்பினார். இயேசு யாயீரின் வீட்டை அடைந்ததும் சிறுமியின் கையைப் பிடித்து மாற்கு 5:41 "தலித்தா கூம்" என்றார். அதற்கு, சிறுமி உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு" என்று அழைத்து வாழ்வு கொடுப்பதைப் பார்க்கின்றோம்.

🔴12 ஆண்டுகள் உதிரப்போக்கினால் துயருற்றவளின் நம்பிக்கை சற்று வேறுபாடு ஆனது, அதே நேரம் உறுதியானது.

♦️ஆண்டவர் என்னைத் தொடுவதற்கோ, நான் ஆண்டவரைத் தொடுவதற்கோ நான் தகுதியற்றவள்.

♦️அவர் மட்டுமே என்னை நலமாக்க முடியும் எனவே ஆண்டவரின் ஆடையை நான் தொட்டாலே நலம் பெறுவேன் என்ற ஆழமான உறுதிபாடு, நம்பிக்கை வாழ்வு வழங்குவதைப் பார்க்கின்றோம்.

3. பகிரும் அறப்பணி 

கி.பி. 48 - ஆம் நூற்றாண்டில் யூதேயா, எருசலேம் பகுதியில் கொடிய பஞ்சம் தாக்கியது. மக்கள் பஞ்சத்தால் மிகவே துன்புற்றனர். இவ்வேளை வாணிக நகரமாக இருந்த கொரிந்து மக்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்தனர். தூய பவுல் கொரிந்து மக்களிடம் யூதேயா, எருசலேமில் வாழ்ந்த யூதர்களுக்கு உதவ அழைப்பு விடுக்கிறார்.

♦️கிறிஸ்து செல்வராய் இருந்தும் நமக்காக ஏழையானார். அவரின் ஏழ்மையால் நாம் செல்வரானோம்.

♦️பிறருக்கு உதவுவதால் நாம் ஏழ்மை நிலை அடைய வேண்டும் என்பதல்ல, மாறாக எல்லோரும் "சமநிலை" சமத்துவமாய் வாழ வேண்டும்.

♦️கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கிடையே வேறுபாடுகளற்ற நிலை உருவாக வேண்டும் என்று பவுல் விரும்பினார். கலாத்தியர் 3:28 "இனி உங்களிடையே யூதர் என்றும், கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமை குடிமக்கள் என்றும் இல்லை. ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்" என்பதிலிருந்து கிறிஸ்தவ மனநிலை என்பது

1. வேறுபாடு களைந்து சமமாய் மதிப்பது.

2.பகிர்ந்து வாழ்வளிப்பது -

என்பதை உணர்த்துகிறது. இதைத்தான் யாக்கோபு 2:17 "நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாகும்" என்கிறார்.

♦️நம்பிக்கை செயல்பட்டால் வாழ்வு வழங்கும் என்பது திண்ணம்.

நம் வாழ்வில்

🟣இயேசு வாழ்ந்த நாட்களில் பெண்களை யூதர்கள் பொருட்டாக மதிப்பதில்லை.

🟣இன்றைய நற்செய்தியில் நலம் பெற்றவர்கள் இருவரும் பெண்கள்.

🟣இயேசு நலிந்தவர் மட்டில் சிறப்பு அக்கறை உடையவராய் இருந்தது போல் இயேசுவில் நம்பிக்கையுடைய நாம் செயல்படுகிறோமா?

🔴நம்பிக்கை மலைகளைப் பெயர்ந்து போகச் செய்யும் ஆற்றல் படைத்தது.

🔴நம் நம்பிக்கை நம்மில் குடிகொண்டுள்ள, வேரூன்றிய மூட பழக்கவழக்கங்களை அழித்தொழிக்கிறதா?

🔵நம்பிக்கை கொண்டோர் பகிர்ந்து சமத்துவ உலகு படைத்தனர்.

🔵நாம் பகிர்வால் வாழும் சமூகத்தை பண்படுத்த விளைகிறோமா?

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

Thursday, June 27, 2024

இன்றைய இறைவாா்த்தை- 28 .06.2023 (வெள்ளி)


 

இன்றைய சிந்தனை- 28.06.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (ஏழைகளை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொள்வோம்)-28.06.2024 (வெள்ளி)


 

Tamil Catholic Status song (கண்ணீா் துளிகளை) -28.06.2024

 


Tamil Catholic Status prayer (ஏழைகளை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொள்வோம்)-28.06.2024 (வெள்ளி)


 

இன்றைய இறைவாா்த்தை- 27 .06.2023 (வியாழன்)


 

இன்றைய சிந்தனை- 27.06.2023 (வியாழன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (இறைவாா்த்தைப் படி வாழ்வோம்)-27.06.2024 (வியாழன்)


 

Tamil Catholic Status song (உம் அன்பு நெறிகள்) -27.06.2024


 

Tamil Catholic Status prayer (இறைவாா்த்தைப் படி வாழ்வோம் )-27.06.2024 (வியாழன்)


 

Tuesday, June 25, 2024

இன்றைய இறைவாா்த்தை- 26 .06.2023 (புதன்)


 

இன்றைய சிந்தனை- 26.06.2023 (புதன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (முழு உள்ளத்தோடு திருச்சட்டத்தை கடைபிடிப்போம்)-26.06.2024 (புதன்)


 

Tamil Catholic Status song (சாய்ந்து கொள்ள தோள்கள்) -26.06.2024


 

Tamil Catholic Status prayer (முழு உள்ளத்தோடு திருச்சட்டத்தை கடைபிடிப்போம் )-26.06.2024 (புதன்)


 

இன்றைய இறைவாா்த்தை- 25 .06.2023 (செவ்வாய்)


 

இன்றைய சிந்தனை- 25.06.2023 (செவ்வாய்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (கடவுளின் பராமாிப்பில் நம்பிக்கை கொள்வோம்)-25.06.2024 (செவ்வாய்)


 

Tamil Catholic Status song (நீயாக நான் மாற வேண்டும்) -25.06.2024


 

Tamil Catholic Status prayer (கடவுளின் பராமாிப்பில் நம்பிக்கை கொள்வோம் )-25.06.2024 (செவ்வாய்)


 

இன்றைய இறைவாா்த்தை- 24.06.2023 (திங்கள்)


 

இன்றைய சிந்தனை- 24.06.2023 (திங்கள்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா)-24.06.2024 (திங்கள்)


 

Tamil Catholic Status song (தாய் போல என்னை தாலாட்டு) -24.06.2024


 

Tamil Catholic Status prayer (திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா )-24.06.2024 (திங்கள்)


 

இன்றைய இறைவாா்த்தை- 23.06.2023 (ஞாயிறு)


 

இன்றைய சிந்தனை- 23.06.2023 (ஞாயிறு)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நம் வாழ்வை பிறருக்காகவும் வாழ்ந்து அழகுப்படுத்துவோம்)-23.06.2024 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (கடல் கடந்து சென்றாலும் ) -23.06.2024


 

Friday, June 21, 2024

பொதுக்காலம் 12-ம் - ஞாயிறு மறையுரை -23.06.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 12-ம் ஞாயிறு

23.06.2024

யோபு 38 : 1, 8 - 1,  

2 கொரி 5: 14 - 17,

மாற்கு 4: 35 - 41.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

அமைதியின் கருவியாய்

🔴மனித வாழ்வு இன்பங்களும், துன்பங்களும் நிறைந்தது.

🔴மலர்களும், முட்களும் உடையது.

🔴உயர்வும் தாழ்வும் உடையது.

🟣வாழ்வில் கவலை, பிரச்சனை, பாரங்கள் எல்லாம் ஓய்ந்து விட்டது இனி நம் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி, சமாதானம் என்று நாம் எண்ணும் போது திடீரென பெரும் புயல் அடிக்கும், அலைகள் தாக்கும்.

🟣புயலும்அலைகளும், துன்பங்களும் இன்றி எந்த மானுட வாழ்வும் இல்லை.

🟣புயல், அலை, துன்பம், நெருக்கடிகள் வரும்போது நம்மை அமைதிப்படுத்த, இவற்றிலிருந்து நம்மை காப்பாற்ற ஆண்டவர் இயேசு உண்டு என்ற மகிழ்வின் செய்தியை இன்றைய வழிபாடு நமக்கு வழங்குகிறது.

திருப்பாடல்கள் 65 : 7 "கடல்களின் இரைச்சலையும், அவற்றின் அலைகளின் ஓசையையும், மக்கள் இனங்களின் அமளியையும் அடக்குகின்றீர்" என்பது கடலின் கொடிய அலைகள், புயல் காற்றின் இரைச்சல், சீடர்களின் அமளி ஆகியவற்றிலிருந்து விடுவித்து அமைதியை, ஆண்டவர் இயேசு அருள்வார் என்பதை வழிபாடு உணர்த்துகிறது. அதேவேளை நாமும், சமூகத்தில் அமைதியின் கருவியாய் செயலாற்ற அழைப்பு விடுகிறது.

நிகழ்வு

2019 - ஆம் ஆண்டிற்கான இயற்பியல், வேதியியல், இலக்கியம்மருத்துவம் போன்றவற்றிற்கான நோபல் பரிசினை அந்ப் பிரிவுகளில் சாதனை படைத்தவர்கள் பெற, அமைதிக்கான நோபல் பரிசானது எத்தியோப்பியாவின் பிரதமர் அபிய் அகமது அலி என்பவருக்கு வழங்கப்பட்டது. அண்டை நாடான எயிக்ரியாவுடன் எல்லைப் பிரச்சனைக்கு அமைதியான வழியில், பிரச்சனைகளின்றி தீர்வு எட்டியதால் இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்வு -  2  (2024 - ஜூன் - ஊடகச் செய்தி)

திருப்பூர் மாவட்டம், படியூர் கிராமத்தில் உள்ள றோஸ் கார்டன் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அங்குள்ள இந்து சமய சகோதரர்கள், இந்து கோயில் கட்டுவதற்கு ஆறு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சில மாதங்களுக்கு முன் தானமாக வழங்கினா். அந்த இடத்தில் இந்து சமய மக்கள் எளிதாய் ஒரு ஆலயம் கட்டி முடித்தனர். கோயிலின் குடமுழுக்கு விழாவில் அந்த ஊரின் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டதோடு, அன்னதானத்திற்கு ரூபாய் 30,000 மற்றும் சீர்வரிசையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்கள். சமயத்தால் சண்டையிட்டு அமைதியை குலைக்கும் மானுட சமூகத்தில் றோஸ் கார்டன் பகுதி இஸ்லாமியரும், இந்துக்களும் அமைதின் கருவிகளே!

🔵 மனிதன் இன்று மன நிம்மதிக்காகவும், மன அமைதிக்காகவும் அமைதியான சூழலைத் தேடி, மக்கள் சந்ததி இல்லாத பகுதிகளைத் தேடி அலைகிறான்.

🔵மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள், சமூகம் மற்றும் நாடுகளுக்கிடையே போர்கள். எல்கைப்பிரச்சனை, சமய பிரிவினைகள் அமைதிக்கானச் சூழலை அடியோடு அழித்துப் போடுகிறது.

🔵இத்தகைய சூழலில் இறைவன் நம்மை அருள் நலன்களால் நிறைத்து, அமைதியுடனும், நிறைவுடனும் வாழ அழைக்கிறார்.

துயரத்தின் கரை கண்ட யோபு

யோபு, ஆண்டவர் பார்வையில் எத்தகையவராக இருந்தார் எனில், யோபு 1:1 "ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார் அவர் மாசற்றவர் நேர்மையானவருமாக இருந்தார்" என்று கூறுகிறது.

🟢மாசற்றவரும், நேர்மையானவருமான யோபு குறுகிய காலத்திலே கால்நடைகள் இழந்தார், சொத்து சுகங்களை இழந்தார், செல்வத்தை இழந்தார், பிள்ளைகளை இழந்தார், தன் உடல் நலத்தையும் இழந்தார்.

🟢மொத்தத்தில் எல்லாவற்றையும் இழந்தார் ஆனால் அவர் இழக்காதது

(1) மன அமைதியையும்

(11) ஆண்டவர் மீது கொண்ட நம்பிக்கையையும்

திருப்பாடல்கள் 34 : 19 "நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல அவை அனைத்தினின்றும், ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்" என்ற இறைவார்த்தைக்கேற்ப அவரின் வாழ்வு அமைந்தது.

🟢யோபு தன் வாழ்வின் வேதனைகளை நினைத்து ஆண்டவரிடம் முறையிட்டபோது,

யோபு  3:3 "ஒழிக நான் பிறந்த நாளே. ஓர் ஆண் மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே" என்று புலம்பிக் கதறினார். ஆயினும் அவரின் நம்பிக்கை முழுவதும் கடவுளிடம் மட்டுமே நிலைபெற்றது.

யோபு 5:8 "நான் கடவுளையே நாடுவேன் அவரிடம் மட்டுமே வழக்கை ஒப்புவிப்பேன்" என்று தன்னை இகழ்ந்த, பரிகசித்த நண்பர்கள், மனைவி, உறவுகள் மத்தியில் நம்பிக்கையிலும், அமைதியை இழந்த நிலையிலும் நிலைத்து நின்றார் யோபு. அதன் விளைவு,

யோபு 42:12 "யோபுவின் முந்தைய நாட்களில் இருந்ததை விட பின்னைய நாட்களில் ஆண்டவர் அதிகமாக ஆசி வழங்கினார்" இந்த ஆசீர், அமைதியை, பொறுமையை, நம்பிக்கையை இழக்காமல் உறுதியாய் நிலைத்ததால் ஆண்டவரின் பரிசாய் கிடைக்கப்பெற்றது.

இயேசுவின் ஆற்றல் உணர்ந்த சீடர்கள்

இயேசு இறையாட்சிப் பணி செய்த நாட்களில் நோய்களைக் குணப்படுத்தி, பேய்களை விரட்டி, இறந்தவருக்கு வாழ்வு வழங்கி நன்மைகளையேச் செய்தார்

🟡இன்றைய நற்செய்தியில் காற்றையும் கடலையும் அமைதியுறச் செய்து இயற்கை மீது அதிகாரம் தனக்கு உண்டு என்பதை சீடர்கள் உணரச் செய்தார்.

🟡ஏரி கரையில் பேதுருவின் படகில் அமர்ந்து ஆண்டவர் இயேசு போதித்தார்.

🟡படகிலே ஏறி தனிமை தேடி பயணமாகிறார்.

🟡களைப்பால் படகில் கண்ணயர்ந்து உறங்குகிறார்.

🟡மலைகளால் ஆளப்பட்ட கலிலேயக் கடலில் திடீர் புயல் எழுவது இயல்பு. அன்றைய நாளில் கொடும் புயல்.

🟡படகு செலுத்துவதில் அனுபவம் உள்ள சீடர்களே தடுமாறிப் போயினர்.

🟡தங்கள் திறமை, முயற்சி எல்லாம் பயனற்றப் பிறகு மாற்கு 4:38 "போதகரே சாக போகிறோமே உமக்கு கவலை இல்லையா" என்று புலம்பினர்.

🔵சீடர்களின் மனத்தை உயிர் பயம் மறைத்தது.

🟣வலியும் வாழ்வுமானவர், இம்மானுவேலாகிய இறைவன் எக்காலமும் இருக்கிறவர் நம்முடன் உண்டு என்பதை மறந்து போனார்கள்.

🟢இது சீடர்களின் நம்பிக்கையில் ஏற்பட்ட தளர்வு எனவேதான் ஆண்டவர் இயேசு அவர்களிடம்

மாற்கு 4:40 "ஏன் அஞ்சுகிறீர்கள் உங்களுக்கு இன்னும் நம்பிக்கையில்லையா" என்று கடிந்து கொள்கிறார்.

🟣தாவீது ஆண்டவரை புகழும் போது

திருப்பாடல்கள் 89:8 "படைகளின் கடவுளாகிய ஆண்டவரை உம்மைப் போல் ஆற்றல் மிக்கவர் யார்" என்று வியந்து பாடினார்.

🔵இயேசு புயலால், பெருங்காற்றால் ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து மாற்கு 4:39 "இரையாதே அமைதியா இரு" என்று கடிந்து கொள்ள கடல் அமைதியாயிற்று. ஏனெனில் படைப்பனைத்தும் அவருக்கு கீழ்ப்படுகின்றன.

யோவான் கூறுவது போல்

யோவான் 1:3 "அனைத்தும் அவரால் உண்டாயின, உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை" எனவே இயற்கை, படைப்பு அனைத்தின் மீதும் ஆற்றல் மிக்கவராய் இறைவன் விளங்குகிறார் என்பதை உணர்த்துகிறது.

திருப்பாடல்கள் 121 : 3 "அவர் உன் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார் உம்மை காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்" என்ற இறைவார்த்தை இறைவன் கண்ணயராத இறைவன், அவர் நம்மை இப்போதும், எப்போதும், இரவிலும், பகலிலும், நாம் போகும் போதும், வரும்போது நம்மை காப்பார் என்ற உண்மையை சீடர்கள் உணரச் செய்தது.

நம் அன்றாட வாழ்வுக்கு கடப்போம்

🔴குடும்பங்களில் தொடர் நோய்கள் தாக்கும் போது இறைவனை உறுதியாய் பற்றுகிறோமா? விசுவாச தளர்வுறுகிறோமா? (இங்கு யோபு 5:18, 19 ஆகிய இறை வார்த்தைகளை நினைவு கூறுவது நல்லது)

🟣குடும்பங்களில் பொருளாதார நெருக்கடிகள், கடன் தொல்லைகள், தொழில் நஷ்டங்கள் வரும்போது நாம் எத்தகைய மனநிலை கொள்கிறோம்.

இணைச் சட்டம் 28 : 13 " .....அப்போது ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரேயன்றி கடையனாக்கமாட்டார் நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போக மாட்டாய்" என்ற இறைவார்த்தையை நம்மில் உயிர் பெறச் செய்வோம்.

🟢உறவில் விரிசல், சரியாகப் புரிந்து கொள்ளாமல் நம்மை பிறர் புறக்கணிக்கும் தருணங்களில் உளவருத்தம் கொள்வதை தவிர்த்து அமைதியின் கருவியாக மாறுவோம்.

தூய பிரான்சீஸ் அசிசியாா் ”இறைவா அமைதியின் கருவியாய் என்னை மாற்றும்” என்று இறைவேண்டல் செய்து அதற்கேற்ப தன்னை அமைதியின் தூதனாய் மாற்றியது போல் நாமும் அமைதியின் தூதுவராவோம்!

மத்தேயு 5:9 "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் எனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்"

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*