Saturday, August 31, 2024

பொதுக்காலம் 22-ம் - ஞாயிறு மறையுரை -01.09.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

01.09.2024

இனைச்சட்டம் 4: 1 - 2, 6 - 8, 

யாக்கோபு 1 : 17 - 18, 21-22, 27,

மாற்கு 7: 1 - 8, 14- 15, 21-23.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

வெளிவேடம் களைவோம்

🟣காலம் கடந்து போன மூதாதையர் மரபுகளை இன்னும் வலிந்து பிடித்துக் கொண்டிருந்த பரிசேயர்களின் அடிப்படைவாதம், வெளிவேடமான வாழ்வை இயேசு வெளிப்படையாய் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்.

🟡இந்த காலவதியாகும் யூத மரபுகளின் பயனற்றத் தன்மையையும் இறைவார்த்தைக்கு எதிரான செயல்பாடுகளையும் இயேசு மிகவும் வன்மையாக கண்டிக்கின்றார்.

மாற்கு 7:9 "உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகுத் திறமையாக புறக்கணித்து விட்டீர்கள்" என்ற இயேசுவின் குற்றச்சாட்டு, யூதர் மற்றும் யூதமரபுகளின் சுயநலத்தை வெளிப்படுத்துகின்றது.

🟢இவ்வேளையில் இயேசு அன்பு, பரிவு, மனித நேயம், இரக்கம் போன்ற உயர்வான மதிப்பீடுகளைச் செயல்படுத்தி தமது இறையாட்சிப்பணியைத் திறம்பட செய்து கொண்டிருந்தார்.

🔴இவ்வேளையில் பரிசேயரும், மறைநூல் அறிஞரும் அவரிடம் வந்து சீடரின் செயல்பாடுகளையும், யூத மரபுகளையும் எடுத்துக் கூறி, குற்றம் சுமத்துவதை நற்செய்தி சுற்றுகிறது.

🔵ஆண்டவர் இயேசு வெளிப்புறத்தில் தூய்மையை விரும்பும் மக்களின் உள்ளத்தில் நிறைந்துள்ள தீமைகளையும், வெளிவேடங்களையும் களைந்து உண்மையுடன் வாழ அழைக்கின்றார்.

நிகழ்வு - 1

26.04.1998 தேதியிட்ட தமிழ் வார இதழில் வந்த செய்தி, 15.04.1998 அன்று கம்போடியாவின் சர்வாதிகாரி போல்பாட் இதய நோயால் இறந்து போனான் என்ற செய்தி. இச்செய்தியை கேட்டதும் மக்களின் மனங்களில் எதிரொலித்த கேள்வி போல்பாட்டிற்கு இதயம் இருந்ததா? என்பதுதான்.


போல்பாட் - என்றால் சிறந்த நண்பன் என்று பொருள். இவர் ஆறு வருடம் புத்தமடத்தில் பயின்று, இரண்டு ஆண்டுகள் புத்த துறவியாக வாழ்ந்தவர். பின் அங்கிருந்து வெளியேறி உழவுத்தொழில், எலக்ட்ரிக்கல் தொழில் செய்து வந்தார். 1975 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வழி பதவி பெற்றார். இப்போது தன் இயற்பெயரான "சயோத்சார்" என்று பெயரை போல்பாட் என்று மாற்றிக் கொண்டார்.

சிறந்த நண்பனாக தன்னை அறிமுகப்படுத்திய போல்பாட் தன் கைகளால் அடித்துக் கொன்ற மக்களின் எண்ணிக்கை 20 இலட்சம், இந்த மண்டை ஓடுகளை ஒரு காட்சியகத்தில் வைத்து பார்த்து ரசிப்பது போல்பாட்டின் வழக்கம். எனவே தான் மக்களின் மனங்கள் போல்பாட்டிற்கு  இதயம் இருந்ததா?  என்று கேள்விகளை உதிர்த்தது. மக்களின் சிறந்த நண்பன் என்று வெளிவேடமாய் சொல்லிக்கொண்டே இத்தனை இலட்சம் மக்களைக் கொன்று குவித்த மனித அரக்கன் அவன்.

ஐக்கிய நாட்டு சபை முன்னாள் தலைமைச் செயலர்  "கர்ட் லாஸ்ட்ஹோம்" இவ்வாறு சொன்னார். "உலக வரலாற்றில் கம்போடிய மக்களின் வேதனைகளையும், கொடுமைகளைப் போல் வேறு எந்த இனமும் அனுபவித்திருக்க இயலாது" என்று இத்தகைய வெளிவேட, போலியான வாழ்வைத் துறந்து எதார்த்த எளிய, தூய வாழ்வை வாழ்வாக்க அழைக்கிறது வழிபாடு.

இன்றைய முதல்வாசகம், மோயீசன் கடவுளின் சட்டங்களை மக்களுக்கு அறிவிக்கும் முன் மக்களுக்கு கூறிய அறிவுரையாகும்.  ஒவ்வொரு கட்டளையும் இறைவனே நமக்கு அருளுகின்றார். ஒவ்வொரு கட்டளையும் இறை ஞானத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. இறைச் சட்டங்களுக்கு பணிந்து நடந்தால் நம் வாழ்வு வளம் பெறும் என்பதை உணர்த்துகிறது.

🔵கனிகளைக் கொண்டே மரத்தை மதிப்பிடுகின்றோம். அது போல நமது செயல்களே நாம் யார் என்பதை உலகிற்கு காட்டும். 

🔴கடவுளின் உரிமைச்சொத்து என்று தங்களை உயர்வாக சொல்லிக் கொள்ளும் இஸ்ரயேலர், கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்தால் தான் சிறந்த மக்களினமாக பிற மக்களால் பாராட்டப்படுவர்.

🟢யாவே கடவுளுக்கும், இஸ்ரயேல் மக்களுக்குமான உறவு மிகவும் நெருக்கமானது, ஆழமானது. இதனை இன்றைய முதல் வாசகம் வழி அறிகின்றோம்.

இச 4:7 "நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல் மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா" என்ற இறைவார்த்தை வழி யாவே கடவுளுக்கும், மக்களுக்குமான உறவை அறிய வருகின்றோம்.

🟡நாம் கடவுளுக்கு அஞ்சி, அவர் வழியில் நேரிய உள்ளத்தோடு நடந்தால் தீமையிலிருந்து விடுவிக்கப்படுவோம். இல்லையேல் தீமையில் அகப்பட்டு துன்புறுவோம் என்பதை  நீமொழி 11:8 "கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர். பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்" எனவே நாம் ஒளியின் நெறியில் நற்கனிகள் வழங்க அழைக்கப்படுகின்றோம்.

🟣சட்டம், சம்பிராதயம், சடங்கு, மரபு என பழமை வாதம் பேசுவோர் சமூக, சமய, தேச நலனுக்காக அதை கடைபிடிப்பதில்லை.

🔵எல்லா செயல்களிலும் சுயநலமே மிஞ்சி நிற்கிறது. சுயபுகழே ஆணி வேராகி நிற்கிறது.

யாக் 1:17 "நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம் ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன" இதை உணர்ந்ததில்லை.

🔴 பரிசேயர், மறைநூல் அறிஞர், மூப்பர்கள், மரபுச் சட்டங்களை முன்னிலைப்படுத்திய போது இறைவாக்கினர் எசாயா

எசாயா 29:13 "வாய் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகிறார்கள் உதட்டினால் என்னை போற்றுகின்றனர் ஆனால் அவர்கள் உள்ளமோ என்னை விட்டு தொலைவில் இருக்கிறது" என்று இயம்புகிறார்.

🟢கடவுள் நமக்கு அருளிய கட்டளைகள், மனிதத்தை, மனித மாண்பை, ஞானத்தை, அறிவாற்றலை மையப்படுத்தியது. எனவே போலியான, வெளிவேடமான, மரபு, சடங்கு, சட்டங்களைக் கடந்து செயலாற்ற அழைப்பு விடுக்கிறது இன்றைய வழிபாடு.

இன்றைய நற்செய்தியில், கழுவாத கைகளால் உண்ட சீடர்களின் செயல் சட்டம், மரபை மீறிய செயல் என்று பரிசேயர், மறைநூல் அறிஞர் முறையிட்டனர், இயேசுவிடம் வாதிட்டனர். ஆண்டவர் மோசேயிடம் அறிவுறுத்தியபோது விப. 30:20"சந்திப்புக் கூடாரத்தில் நுழையும் போது அல்லது பலிப்பீடத்தை நெருங்கி ஆண்டவருக்கு நெருப்புப் பலிகளைச் சுட்டெரிக்கும் பணிபுரியும் போது அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்வார்கள்" என்றும் மக்கள் உணவு உண்ணும் முன்பும் கை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

🟡உணவு நேரடியாக மனித உள்ளத்தை, ஆன்மீகத் தூய்மையை சிறிதேனும் பாதிப்பதில்லை.

🟣உள்ளமே நன்மைக்கும் தீமைக்கும் ஊற்று.

🟣போட்டி, வஞ்சகம், கொலை, களவு, விபச்சாரம், பேராசை போன்ற தீய செயல்களும் ஆணவம், பொய், புறணி, பொறாமை, பழிச்சொல் ஆகிய தீய பழக்கவழக்கங்களும் உள் மனதில் இருந்தே எழுகிறது (மாற்கு 7:21-22)

🔴ஒரு மனிதன் கை, கால்களைச் சுத்தம் செய்வதால், அல்லது உண்ணும் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதால் ஆள்மனதில் உள்ள தீமைகள், பாவங்கள் விலகிவிடுவதில்லை.

🔴வெளிப்புறத்தைத் தூய்மைப்படுத்துவதால் அகம், உள்ளம் தூய்மையடையாது.

🟢உள்ளங்கள் சுத்திகரிக்க, தூய்மையாக்கப்பட வேண்டும்.

🟢உள்ளத் தூய்மையைப் புறக்கணித்து, வெள்ளி ஆடம்பரச் செயல்களில் ஈடுபடுவதால் உள்ளம் தூய்மைப் பெற்று விட முடியாது. ஆகவே தான் ஆண்டவர் இயேசு மத் 23:28 "நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும், நெறிக்கேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்" என்று

🔵வெளிவேடம் செய்பவர்களை கடுமையாக கண்டிக்கிறார். எனவே நாம் வெளிவேடம் களைந்து உண்மையான எதார்த்தமான நேரிய வழியில் கடவுளின் பிள்ளைகளாக வாழ முயல வழிபாடு அழைக்கிறது.

நம் வாழ்வை சீர்தூக்குவோம்

🟡ஆலயங்களுக்கு தவறாக செல்வதாலோ, மற்றவர் முன் நல்லவர் என்று பெயர் எடுப்பதாலோ நாம் இறைவனுக்கு ஏற்புடையவராக முடியாது.

🟡உள்ளத்தில் தூய்மை, சொல்லில் உண்மை, செயலில் நேர்மை உள்ளவரே இறைவனின் அருளை சொந்தமாக்குவார்.

மத் 5:8 "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்"

🟡தூய உள்ளம் கடவுளை காணும் வழியாகும்.

🟡வெளி ஆசாரங்கள், சடங்குகளில் அதிக முன்னுரிமை வழங்குவதை விடுத்து, மனதில் மாசின்றி வாழ்தல் இறைவனுக்கு உகந்தது.

🔴இன்றைய வியாபார விளம்பர உலகில் பொய்யை மெய்யாக்கி இல்லாததை இருப்பதாக சொல்லி, தரமற்றதை தரமாகக் காட்டும் பித்தலாட்ட ஊடகங்கள் தங்கள் தர்மத்தை இழந்து செயல்படுகிறது.

🔴பொருள் மைய உலகில், மனித மாண்பு இழந்து விளம்பர சந்தையின் நுகர்வு பொருளாகின்றான் மனிதன்.

🔴விளம்பர பொய்க்குள் சிக்குண்டு எதார்த்த வாழ்வைத் தொலைத்து சல்லடையாய் நொறுங்கிப் போகின்றோம்.

எனவே தேவையற்ற ஆடம்பரங்களையும், வெளிவேடங்களையும் துறந்து நேரிய, உண்மையான, தூய வாழ்வு வாழ வரம் வேண்டுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

Thursday, August 29, 2024

இன்றைய இறைவாா்த்தை- 30.08.2023 (வெள்ளி)


 

இன்றைய சிந்தனை- 30.08.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (விழிப்புணணா்வோடு வாழ்வோம்)-30.08.2024 (வெள்ளி)


 

இன்றைய புனிதா் - (புனித பெலிக்ஸ் மற்றும் அடக்தூஸ்) - 30.08.2023 (வெள்ளி)


 

Tamil Catholic Status song (எழில் கொண்ட மன்னா)-30.08.2024 (வெள்ளி)


 

Tamil Catholic Status prayer (மடமை என எதையும் புறக்கணிக்காமல் தோ்ந்து தெளிவோம்)-30.08.2024 (வெள்ளி)

 


இன்றைய இறைவாா்த்தை- 29.08.2023 (வியாழன்)


 

இன்றைய சிந்தனை- 29.08.2023 (வியாழன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (கண்ணியம் காத்து கடவுளின் பிள்ளைகளாவோம்)-29.08.2024 (வியாழன்)


 

இன்றைய புனிதா் - (புனித திருமுழுக்கு யோவான் கொல்லப்படல்) - 29.08.2023 (வியாழன்)


 

Tamil Catholic Status song (இருளும் புயலும் உன்னை)-29.08.2024 (வியாழன்)


 

Tamil Catholic Status prayer (ஆன்மீகத் தாகம் கொள்வோம்)-29.08.2024 (வியாழன்)

 

Sunday, August 25, 2024

இன்றைய இறைவாா்த்தை- 26.08.2023 (திங்கள்)


 

இன்றைய சிந்தனை- 26.08.2023 (திங்கள்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (இரட்டை வேடமற்ற மானிடராவோம்)-26.08.2024 (திங்கள்)


 

இன்றைய புனிதா் - (புனித செப்ரைனுஸ்) - 26.08.2023 (திங்கள்)


 

Tamil Catholic Status song (என் சொந்தம் யாவும்)-26.08.2024 (திங்கள்)


 

Tamil Catholic Status prayer (துன்பங்களை பொறுமையோடு எதிா்கொள்வோம்)-26.08.2024 (திங்கள்)


 

இன்றைய இறைவாா்த்தை- 25.08.2023 (ஞாயிறு)


 

இன்றைய சிந்தனை- 25.08.2023 (ஞாயிறு)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (கடவுளின் வாா்த்தையை நம்பி வாழ்வை காத்துக்கொள்வோம்)-25.08.2024 (ஞாயிறு)


 

இன்றைய புனிதா் - (புனித ஜோசப் கலாசான்ஸ்) - 25.08.2023 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (உறவைத் தேடும் அன்பனே)-25.08.2024 (ஞாயிறு)


 

Tamil Catholic Status prayer (கடவுளின் வாா்த்தைகள் வாழ்வு தருபவை)-25.08.2024 (ஞாயிறு)


 

Friday, August 23, 2024

இன்றைய இறைவாா்த்தை- 24.08.2023 (சனி)


 

இன்றைய சிந்தனை- 24.08.2023 (சனி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (கடவுளை உள்ளத் தூய்மையோடு அணுகுவோம்)-24.08.2024 (சனி)


 

Tamil Catholic Status song (எனக்காக தானே நீ எல்லாம் செய்தாய்)-24.08.2024 (சனி)


 

Tamil Catholic Status prayer (முன்சாா்பு எண்ணங்களின்றி வாழ்வோம்)-24.08.2024 (சனி)


 

பொதுக்காலம் 21-ம் - ஞாயிறு மறையுரை -25.08.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

25.08.2024

யோசுவா 24: 1 - 2, 15 - 17, 18, 

எபேசியர் 5 : 21 - 32,

யோவான் 6: 60 - 69.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


பிரமாணிக்க முள்ள வாழ்வும், பணியும்

நிகழ்வு

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவின் முக்கிய நாளிதளாகிய "மலையாள மனோரமா" - வில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாகிய, ஜான் F. கென்னடி குடும்பம் பற்றிய ஒரு செய்தி வந்தது. கென்னடியின் தாய் ரோஸ் கென்னடி கொடுத்த ஒரு பேட்டி அது.

தாய் ரோஸின் நேசத்திற்குரிய மகன் ஜான் F. கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு மகன் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். மூன்றாவது மகன் விமான விபத்தில் பலியானார். நான்காவது மகன் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். திருமதி ரோஸ் - யிடம் இந்த இழப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டபோது, அந்தத் தாய் "இவ்வளவு வேதனை நிறைந்த கடந்த காலத்தில் என்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தைக் காப்பாற்றிய கருணை நிறைந்த இறைவன், இனி வரவிருக்கும் காலத்திலும் நான் எனது விசுவாசத்தை இழந்து விடாமல் பிரமாணிக்கத்தோடு வாழ இறைவன் துணை புரிவார்” என்றுக் கூறினார்.

இங்கு இறைவாக்கினர் அபகூக்கின் வார்த்தைகளை நாம் நினைவு கூா்வது நல்லது. அபகூக் 3:17 "அத்தி மரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயனற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும் அபகூக் 3:18 "நான் ஆண்டவரில் களிகூர்வேன். என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுகின்றேன்" என்ற அபகூக்கின் பிரமாணிக்கத்தை போல், இறையூழியன் யோசுவா தன்னை ஆண்டவரில் உறுதிப்படுத்தினார் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துக் கூறுகிறது.

ஏன் உண்மை கடவுளை வழிபட வேண்டும்

🟣இந்தக் கடவுளே அடிமை வீடாகிய எகிப்திலிருந்து வாழ்வின் நாட்டிற்கு அழைத்து வந்தவர்.

🔵இவரே விடுதலைப் பயண வாழ்வில் செங்கடலைப் பிளந்து வழியமைத்தவர்.

🔴இவரே பாறையிலிருந்து பருக நீர் கொடுத்தவர்.

🟢இவரே மன்னாவால் உண்பித்தார்.

🟡இவரே எரிக்கோ மதிலை உடைத்தார்.

🟣இந்தக் கடவுள் தூயவர், ஆற்றல் மிக்கவர், தனி உரிமை பாராட்டுபவர்.

எசே  11:20 "அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்" என்று உரிமை பாராட்டுகிறவர்.

🔵இந்தக் கடவுள் மீட்பர், இருக்கிறவராக இருந்து வழி நடத்துகிறவர், பாதுகாப்பு அருள்கிறவர், எதிரிகளை அழித்து வெற்றி வழங்குபவர்.

🔴கடவுள் (யாவே) ஈடு இணையற்றவர், மக்களின் வலிகளை உணர்ந்து விடுதலை தருகிறவர்.

🟣தன்னிகரில்லாதவர், இஸ்ரயேலர் வரலாற்றில் முன் நின்று கை கொடுத்தவர். ஆகவே முழு இதயத்தோடும், முழு ஆற்றலோடும், முழு ஆன்மாவோடும் அவரை வழிபட வேண்டும் என்று விரும்பினார்.

ஆனால் இஸ்ரயேலர் ஆண்டவர் எந்த அளவிற்கு அவர்கள் தம்முடன் இருக்க வேண்டும் என்று விரும்பினாரோ அந்த அளவிற்கு இறைவனைப் புறக்கணித்தனர்.

ஒசே 11:2 "எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள்" என்று இறைவாக்கினா் ஒசேயா கூறுகிறார்.

🟡இஸ்ரயேலரின் பிரமாணிக்கமின்மையைக் கூறும் போது

எரே 2:13 "என் மக்கள் இரண்டு தீச்செயல்களைச் செய்தார்கள். பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகி என்னைப் புறக்கணித்தார்கள். தண்ணீர் தேங்காத உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்" என்று எரேமியா சுட்டிக்காட்டுகிறார்.

🟢பொங்கி வழிந்தோடும் நீரூற்று என்று, இஸ்ரயேலரின் வாழ்வு தரும் கடவுள், இருக்கின்றவராக இருக்கின்றவர். நாமே உன்னை நலமாக்கும் கடவுள் என்றவரும், நெருக்கடி வேளையில் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்ற யாவே கடவுள் துன்பத்தில் உன்னை காண்கின்றவருமாய் இருந்து வழி நடத்திய "லாகாய்ரோயி" என்ற இந்த கடவுளை மறந்தனர்.

🔵தண்ணீர் தேங்காத உடைந்த குட்டை, வேற்றின தெய்வங்கள். வாழ்வு தர இயலாதவற்றை கடவுளாக நம்பி வணங்கினர். ஆனால் ஆண்டவர் சினம் கொண்டார். இறைவாக்கினர், தம் ஊழியர் வழியாக எச்சரித்தார்.

இச 5:9 "நீ அவைகளை வழிபடவோ, அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர். வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன். என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவர்" என்றார். இத்தகைய வேற்று தெய்வ வழிபாடு நடைபெற்றக் காலத்தில் தான் யோசுவா,  தம் மக்களை வழிபாடுகள் நடத்தி தமது பற்றுறுதியை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் படி அடிக்கடி அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்த சாட்சிய வாழ்வு வாழ வேண்டியிருந்தது.

🟣 "சிக்கேம்" உடன்படிக்கை என்று அழைக்கப்படும் இவ்வழிபாட்டுக் கூட்டத்தில் தான் யோசுவா கூறினார். யோசுவா 24:15 "....நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று பிரமாணிக்கத்தோடு, உறுதியோடு சான்று பகர்த்தார். இதனால் மன உறுதியும், தெளிவும், யாவே மீது நம்பிக்கையும் பெற்ற மக்கள் யோசுவா 24:18 "ஆண்டவர் எல்லா மக்களையும் இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும், எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம் ஏனெனில் அவரே எங்கள் கடவுள்" என்றனர்.

இவ்வாறு வழி தவறிய மந்தையை, பிரமாணிக்க முள்ள மக்களாக யோசுவா மாற்றினார்.

🔴இன்றைய நற்செய்தியில், தாய் தன் குழந்தையின் தேவையை மனநிலையை அறிந்து உணவு ஊட்டுவது போல் இறைமகன் இயேசு தம் போதனையை வழங்கினார்.

🟣அவரின் போதனைகளைக் கேட்டு வியந்தவர்கள் உண்டு, மலைத்துப் போனவர்கள் உண்டு.

🔵இவர் அதிகாரத்தோடு போதிக்கிறார் என்று போற்றிப் புகழ்ந்தவர் உண்டு.

🟢என்னே! இவர் கைகளாலாகும் அருஞ்செயல்கள் என்று ஆச்சரியப்பட்டவர்கள் உண்டு. ஆனால்

🟡வாழ்வு தரும் உணவு நானே (யோ 6:48)

🔴விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே       (யோ 6:51)

🔵எனது சதையை உண்டு என் இரத்தத்தை குடிப்போர் நிலை வாழ்வை கொண்டுள்ளார் (யோ 6:54) என்று வாழ்வு வழங்கும் கிறிஸ்து தன்னை வாழ்வின் அடையாளமாய் அடையாளப்படுத்திய போது

🟣இவன் எப்படி நாம் உண்ண தன் சதையை வழங்க முடியும் என்று வாக்குவாதம் செய்தனர்.

🔴இந்தப் பேச்சு மிதமிஞ்சிப் போகிறது என்று முணுமுணுத்தனர்.

🟢இவரது பேச்சை, ஏற்க இயலாது என்று பலர் அவரிடமிருந்து விலகிச் சென்றனர். இந்தச் சூழலில் இயேசு பன்னிரு சீடரிடம் நீங்களும் போய் விட போகிறீர்களா? என்றபோது சீமோன் பேதுரு யோவான் 6:68 "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" என்று தன் ஆழமான இறையனுபவத்தை உறுதி செய்ததைப் பார்க்கின்றோம். தன் தலைவன் இயேசுவுக்கு பிரமாணிக்கமுள்ள ஊழியராக, சீடராக எண்பித்தார் பேதுரு.

நாம் நம் வாழ்வை ஆய்வு செய்வோம்

🟡குடும்ப உறவுகள் பிரமாணிக்கத்தோடு அமைகிறதா?

🔵பிள்ளைகள் (ஆண், பெண்) பெற்றோருக்கு பிரமாணிக்கமுள்ள வாழ்வு வாழ்கிறார்களா?

🟣என்னிடம் நம்பிக்கை உண்டு என்றால் அதை நாம் நம் செயல்களால் காண்பிக்க வேண்டும்.

🔴துன்பம், நோய், நெருக்கடிகள் வரும்போது நம் மனநிலை என்ன?

🟢தொழில் நஷ்டம், கடினப்பட்டு உழைத்து முன்னேற முடியாத போது பில்லி சூனியம், பிற தெய்வங்களை நாடிச் செல்கிறோமா?

🟡அரசு  பணிகள், பொறுப்புகளில் இருப்போர் இலஞ்ச இலாவண்யங்களை தவிர்த்து உண்மையோடும், நீதியோடும் வாழ்கிறோமா?

🟣நம் பிரமாணிக்கமுள்ள, நம்பிக்கையுள்ள வாழ்வும், பணியும், கடவுளின் பிள்ளைகள் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கட்டும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

இன்றைய இறைவாா்த்தை- 23.08.2023 (வெள்ளி)


 

இன்றைய சிந்தனை- 23.08.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (பிறாிடம் அன்புநிறை உள்ளதோடு பழகுவோம்)-23.08.2024 (வெள்ளி)


 

இன்றைய புனிதா் - (புனித பொ்னாா்த் தாலமி) - 23.08.2023 (வெள்ளி)

 


Tamil Catholic Status song (யாாிவளோ யாாிவளோ)-23.08.2024 (வெள்ளி)


 

Tamil Catholic Status prayer (உயிரற்ற நிலையிலிருந்து உயிா் பெறுவோம்)-23.08.2024 (வெள்ளி)


 

Thursday, August 22, 2024

Monday, August 19, 2024

இன்றைய இறைவாா்ததை- 20.08.2023 (செவ்வாய்)


 

இன்றைய சிந்தனை- 20.08.2023 (செவ்வாய்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (வான்பேறை அடைய இறைவனை சொந்தமாக்குவோம்)-20.08.2024 (செவ்வாய்)


 

இன்றைய புனிதா் - (புனித பொ்னாா்ட் தே கிளோ்வாஸ்) - 20.08.2023 (செவ்வாய்)


 

Tamil Catholic Status song (இறைவா உந்தன் பாதம்)-20.08.2024 (செவ்வாய்)


 

Tamil Catholic Status prayer (நம் நிலை உணா்ந்து வாழ்வோம்)-20.08.2024 (செவ்வாய்)


 

இன்றைய சிந்தனை- 19.08.2023 (திங்கள்)


 

இன்றைய இறைவாா்த்தை- 19.08.2023 (திங்கள்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (செல்வங்களின் மீதான பற்றற்ற வாழ்க்கையே கடவுளை பற்றிப்பிடிக்க வழி)-20.08.2024 (செவ்வாய்)


 

இன்றைய புனிதா் - (புனித யோவான் யுட்ஸ்) - 19.08.2023 (திங்கள்)


 

Tamil Catholic Status song (கரையினை தேடும்)-19.08.2024 (திங்கள்)


 

Tamil Catholic Status prayer (நோ்மையோடு வாழ்வோம்)-19.08.2024 (திங்கள்)


 

இன்றைய இறைவாா்த்தை- 18.08.2023 (ஞாயிறு)


 

இன்றைய சிந்தனை- 18.08.2023 (ஞாயிறு)