Sunday, December 31, 2023

புத்தாண்டு வாழ்த்து - 01.01.2024 (திங்கள்)


 

இன்றைய இறைவாா்த்தை - 01.01.2024 (திங்கள்)


 

சிந்திக்க சில வாிகள் - 01.01.2023 (திங்கள்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (புதிய ஆண்டில் நம்மால் எல்லோரும் நலன்களை பெற்று மகிழட்டும்)- 01.01. 2024 (திங்கள்)


 

Tamil Catholic Status song (புலா்ந்தது புத்தாண்டு)- 01.01.2024


 

Tamil Catholic Status song (அம்மா எங்கள் தாயே)- 01.01.2024


 

Tamil Catholic Status prayer (புதிய ஆண்டில் நம்மால் எல்லோரும் நலன்களை பெற்று மகிழட்டும்)- 01.01. 2024


 

Saturday, December 30, 2023

இன்றைய இறைவாா்த்தை - 31.12.2023 (ஞாயிறு)


 

சிந்திக்க சில வாிகள் - 31.12.2023 (ஞாயிறு)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நல்ல பிள்ளைகளை சமூகத்திற்கு அளிக்கும் நல்ல பெற்றோராவோம்) - 31.12.2023 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (இயேசு வாழ்ந்த திருக்குடும்பம்)- 31.12.2023


 

Tamil Catholic Status song (நோ்மையின் இலக்கணம் சூசை)- 31.12.2023


 

Tamil Catholic Status prayer (நல்ல பிள்ளைகளை சமூகத்திற்கு அளிக்கும் நல்ல பெற்றோராவோம்)- 31.12. 2023


 

Friday, December 29, 2023

இன்றைய இறைவாா்த்தை - 30.12.2023 (சனி)


 

சிந்திக்க சில வாிகள் - 30.12.2023 (சனி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (இயேசு பெற்றோருக்கு உதவுவதில் மகிழ்கிறாா்) - 30.12.2023 (சனி)


 

Tamil Catholic Status song (கருவிழி காக்கும் இமை போல)- 30.12.2023


 

Tamil Catholic Status prayer (இயேசு பெற்றோருக்கு உதவுவதில் மகிழ்கிறாா்)- 30.12. 2023


 

புது வருட பிறப்பு மறையுரை -01.01.2024. (திங்கள்)

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

புது வருட பிறப்பு

01.01.2024.

எண்ணிக்கை 6 : 22 - 27,  

கலாத்தியர்  4: 4 - 7, 

லூக்கா 2: 16 - 21.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

புனித கன்னி மரி கடவுளின் தாய்

🔵இன்று ஆண்டின் முதல் நாள், நமக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஊட்டும் நாள்.

🟢இன்று அன்னை மரியாவின் தாய்மைக்கு விழா எடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

🔴அன்னை மரியா கடவுளின் தாயாக ஆனதால் நமக்கும் தாயாக மாறுகிறாள்.

🟣இறை மக்களுக்குரிய புனித வாழ்வும், அன்பு வாழ்வும் வாழ அன்னை மரியாவிடம் இந்த நாளில் அருள் வேண்டுவோம்.

🟡இந்த புதிய ஆண்டில் இறைவன் நமக்கு வழங்க ஆசிக்கும், இறையாசீரையும் பெற்றுக்கொள்ள நம்மை பயன்படுத்துவோம்.

🟣தாய்மை என்பது உயிராற்றல், நம்பிக்கை, துணிவு.

தாய்மை என்பது வாழ்வு, தியாகம்.

நிகழ்வு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 65 வயதான லதா என்ற தாய் அவருக்கு வயதான கணவர், மூன்று பெண் குழந்தைகள், வறுமையான குடும்பம், இருவரும் கடினப்பட்டு உழைத்து மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்தனர். இப்போது வயதான பெற்றோரை மூன்று பிள்ளைகளும் திரும்பிப் பார்ப்பது இல்லை.

2013 - ஆம் ஆண்டு லதாவின் கணவர் நோய்வாய்ப்பட்டார். லதா அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். மருத்துவர் சோதித்துப் பார்த்த பின் வேறு பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச்ச செல்லச் சொன்னார். ஏழைகள், வசதியில்லை, லதா அக்கம் பக்கத்தாரிடம் நிலைமையைச் சொல்லி பணம் கேட்கிறாள். சிறு தொகை ரூ 2000/- கிடைக்கிறது. அதை வைத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு மருத்துவர் பரிசோதித்து விட்டு லட்ச ரூபாய்க்கு மேலாகும். உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டார். லதா தன்னிடம் இருப்பதைக் கொடுக்கிறாள். இது போதுமானதாக இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பப்படுகின்றார்.

மனச்சோர்வு, உடல் சோர்வு ஆகிய இரண்டோடு இருவரும் அருகில் இருந்த டீ ஸ்டால் போய் 2 சமுசா மற்றும் 2 டீ கேட்கின்றனர். 2 சமுசா ஒரு பேப்பரில் புரிந்து கொடுக்கப்படுகிறது. டீ குடிக்கும் போது சமுசா பொதிந்த பேப்பரில் வந்த செய்தியைப் படிக்கிறார் லதா. தான் வசிக்கும் இடத்திற்கு அருகில் இரு நாட்கள் கழித்து மாரத்தான் போட்டி நடைபெறுவதாகவும், வெற்றி பெறுபவர்களுக்கு பல லட்சம் பரிசு தொகை என்ற விளம்பரத்தைப் பார்க்கிறார். தேதியை உறுதிப்படுத்துகிறார்.

இரு நாட்கள் கழித்து மாறத்தான் தொடங்கும் இடத்திற்கு லதா சென்றார். தானும் போட்டியில் கலந்து கொள்வதாக அதன் பொறுப்பாளர்களிடம் சொல்கிறாள். அவளைப் பார்த்ததும் அவளின் தோற்றம் கண்டு நிராகரிக்கிறது அக்குழு. லதா விடாப்பிடியாய் நிற்கிறாள். அவளின் மன உறுதியைக் கண்டு சம்மதிக்கின்றனர். லதாவைத் தவிர போட்டியில் கலந்து கொண்ட மற்ற அனைவரும் பல மாதங்கள் பயிற்சி பெற்றவர்கள் மாரத்தான் தொடங்குகிறது. லதாவும் ஓடுகிறாள். முடிவில் எல்லாரையும், பல மீட்டர் தூரம் பின்னுக்குத் தள்ளி, பல கிலோமீட்டர் தூரம் ஓடி முதல் பரிசான பல லட்ச ரூபாயை பெற்றார். அத்தொகையைக் கொண்ட கணவருக்கு மருத்துவம் செய்து அவரைக் காப்பாற்றினார்.

தன் கணவரை காப்பாற்ற ஒரு தாய்மையின் போராட்ட நிகழ்வு இது. தாய்மை சிறப்பானது, உயர்வானது.

மானுட குழந்தைகளைப் பாவ நோயில் இருந்து காக்க, மீட்க, மனமுவந்த கடவுளின் தாயின், தாய்மை, வீரம், முயற்சி, மனத்திடம் ஆகியவற்றிற்கு விழா எடுக்கின்றோம்.

கலாத்தியர் 4:4 "நம்மை மீட்டு தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பியுள்ளார்" எனவே தந்தை கடவுள் மரியாவை மீட்பின் கருவியை தெரிந்தெடுத்தார்.

ஆகவே மரியா கடவுளின் தாயாக, மீட்பின் தாயாக, ஆண்டவரின் தாயாக, நமது தாயாக உயர்த்தப்பட்டார்.

இன்றைய முதல் வாசகத்தில், மனிதன் கடவுளிடம் மன்றாடும் போது மூன்று அருட்கொடைகளை கடவுள் மனமுவந்து வழங்குவதாக வாக்குறுதி வழங்குகிறார்.

எண் 6:24 "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னை காப்பாராக"

என் 6:25 "உன் மீது அருள் பொழிவாராக"

எண் 6:26 "உனக்கு அமைதி அருள்வாராக"

ஆசி, பாதுகாப்பு, அருள், அமைதி என்னும் அருளாற்றலை ஆரோனுக்கும் அவன் வழி மரபினருக்கும் நிறைவாய் பொழிவதாக மோசே வழி உறுதி அளிக்கிறார் இறைவன்.

1. ஆசி வழங்கி உன்னைக் காப்பார்

இறையாசீர் நம்மை வழி நடத்துகிறது. இறை யாசின் நம்மை தீமையில் இருந்து பாதுகாக்கிறது.

ஆண்டவரின் ஆசியைப் பெற நாம் ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடக்க வேண்டும். ஆண்டவருக்கு அஞ்சுகிறவர்கள் ஆண்டவர் பார்வையில் பெயர் பெற்றவராய் கருதப்படுவர். ஆண்டவருக்கு அஞ்சுகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசிராக

🟣நமது உழைப்பின் பயனை நாம் உண்போம்.

🟡நற்பேறும் நலமும் பெறுவோம்.

🔴மனைவி கனிதரும் திராட்சைக் கொடிபோல், வளமையைக் கொணர்வாள்.

🟢பிள்ளைகள் ஒலிவக்கன்றுகளைப் போல் பெற்றோரை சூழ்ந்திருப்பர்.

🔵பிள்ளைகளின் பிள்ளைகளை காணும் நீண்ட ஆயுளை வழங்குவார்.

திபா. 128:5 "ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக"

இந்த ஆசீர் பாதுகாப்பாக எப்போதும் இருக்கும்.

திபா. 121:8 "நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும், எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்" என்று கடவுள் தம் ஆசியால் நம்மை எல்லா நிலைகளிலும் பாதுகாப்பார் என்ற உறுதியை இந்த நாள் வழங்குகிறது.

2. உன் மீது அருள் பொழிவார்

இப்புத்தாண்டில் ஆண்டவரின் அருள், இரக்கம், கருணை நம்மை நிரப்ப வேண்டுவோம்.

தாவீது ஆண்டவரை பார்த்து மன்றாடும்போது திபா. 4:6 "ஆண்டவரே எங்கள் மீது உமது முகத்தில் ஒளி வீசும் படி செய்தருளும்" என்று வேண்டினார். ஆண்டவரின் முகத்தின் ஒளி, இறையருளை உணர்த்துகிறது.

நான் பலவீனம் படும்போது கடவுளின் அருள் நம்மை நிறைத்து நம்மை பலவான்களாக மாற்றும்.

2 கொரி 12:9 "என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்று தூய பவுல் அறிவுறுத்துகின்றார். இந்த அருளால் நாம் நிரப்பப்பட நமக்குத் தேவையான இறையனுபவமே.

எபே. 2:8 "நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள் இது உங்கள் செயல் அல்ல மாறாக இது கடவுளின் கொடை" என்கிறார் தூய பவுல். எனவே நம்பிக்கை வழியாக கடவுளின் கொடையான அருள், பரிவு, இரக்கத்திற்கு உரியவராவோம்.

3. உனக்கு அமைதி அருள்வார்

இப்புவியில் சாதி, இனம், மொழி, சமய வேறுபாடின்றி, கற்றவன், கல்லாதவன், உள்ளவன், இல்லாதவன் என்ற பேதம் இன்றி எல்லாரும் ஏங்குவது "அமைதி" க்காக. இவ்வாண்டில் இப் புதிய நாளில் இறைவன் மன அமைதியை நிறைவாய் அருள வேண்டுவோம்.

எபே. 2:14 "அவரே நமக்கு அமைதி அருள்பவர்" என்று எபேசு திருச்சபைக்குத் தூய பவுல் அறிவுறுக்குகிறார்.

2 கொரி 13:11 "மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள். அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்" என்கிறார் பவுலடியார்.

♦️♦️ஒற்றுமை - அமைதியான வாழ்வை வழங்கும்.

♦️♦️ஒற்றுமையும், அமைதியும், அன்பும் கடவுளை நம்மிடம் அழைத்து வரும்.

♦️♦️ஆண்டவர் இயேசு தீமையை, துன்பத்தை, பாடுகளை, சாவை வென்றபின் தம் சீடர்களை உறுதிப்படுத்தி வாழ்த்தியது.

யோவான் 20:19

யோவான் 20:21

யோவான் 26:26 - "உங்களுக்கு அமைதி உரித்தாகுக

மூன்று முறை அறிவிப்பதன் வழியாக, அமைதியை வழங்கி மன அமைதியோடும், நிறைவோடும் வாழ உறுதிப்படுத்துகிறார்.

எனவே இப்புத்தாண்டில், அன்னை மரியாள் இறை நம்பிக்கையில் பெற்றுக் கொண்ட இறையாசி, பாதுகாப்பு, இறையருள், இறையமைதி ஆகியவற்றை அன்னை வழியாக நாமும் பெற்றுக் கொண்டு இவ்வாண்டு முழுவதும், நலமுடனும், வளமுடன் வாழ அருள் வேண்டுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

திருக்குடும்பத் திருவிழா மறையுரை -31.12.2023. (ஞாயிறு)

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

திருக்குடும்பத் திருவிழா

31.12.2023.

தொ.நூ 15 : 1 - 6,  21:1-3,

எபி 11: 8, 11 - 12, 17 - 19, 

லூக்கா 2: 22 - 40.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

அன்பு, அறம் இவற்றின் விளைநிலம் - குடும்பங்கள்

🟣நல்ல குடும்பம் என்பது இறைவன் நேரடியாக உருவாக்கிக் கொடுப்பதல்ல. மாறாக குடும்ப உறுப்பினர் அனைவரின் கூட்டு முயற்சியின் விளைவு.

🟡இயேசு, மரி, சூசை ஆகிய மூவரும் அருள் நிலையில் எப்போதும் கடவுளோடு இணைந்து வாழ்ந்ததால் திருக்குடும்பம் என்கிறோம்.

🔵மிக எளிமையாக, மறைவாக வாழ்ந்த நாசரேத்தூர் திருக்குடும்பம் நமக்கு எடுத்துக்காட்டான குடும்பமாய் திகழக்காரணம் அக்குடும்பம், புனிதத்தில் தழைத்தது, உண்மையான அமைதி ஊற்றெடுக்கும் இடமாகவும், ஒற்றுமை, உறவு ஆகிய புண்ணியங்களின் பிறப்பிடமாகவும் திகழ்ந்தது.

🟢உலகின் மற்ற குடும்பங்களைப் போல், இயேசு, மரி, சூசையின் குடும்பமும் ஒரு சாதாரண குடும்பம் தான். நம்மைப் போல் இணைந்து வாழ்ந்து, உழைத்து, பேசி, சிரித்து, கவலை, மகிழ்ச்சி என்ற உணர்வுகளை அனுபவமாக்கிய குடும்பம் தான் திருக்குடும்பம்.

🔴அருள்நிறைந்த மரியாவும், நேர்மையாளர் யோசேப்பும், உன்னத கடவுளின் மகனாகிய இயேசுவும் இணைந்து உருவாக்கிய குடும்பம் திருக்குடும்பம்.

🟣உலகின் எல்லா குடும்பங்களுக்கும் சிறந்த முன்னுதாரணம் இக்குடும்பம். இதில் உயிரூட்டமாய் நிலை பெற்ற இறை திருவுள்ளத்தை ஏற்றல், தாழ்ச்சி, அன்பு, பொறுமை, எளிமை ஆகிய பண்புகளை திருக்குடும்பமாய் நம்மை உருமாற்ற அழைக்கிறது வழிபாடு.

நிகழ்வு

2017 - அக்டோபர் மும்பையைச் சார்ந்த நித்துராஜ் தான் பணியாற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து மும்பைக்குத் தன் சொந்த ஊருக்கு வருகிறார். அமெரிக்காவில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தந்தை இறந்த பிறகு தாய் கடினப்பட்டு, சிரமத்தோடு - நித்துவை படிக்க வைத்தார். தாய் மட்டுமே வசிக்கும் வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை ஒலிக்கிறார். பலமுறை ஒலித்தும் எந்த பயனுமில்லை. அம்மா! அம்மா! என்று அழைத்துப் பார்க்கிறார். ஆரவாரமில்லை, கதவும் திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்க்கிறான் அங்கே, அவனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, வெளிநாட்டுக்கு அனுப்பிய தாய் ஹாலில் எலும்பு கூடாய் கிடக்கிறாள். 2016 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் தன் தாயிடம் கடைசியாக நித்து பேசினாராம். ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக பேசவில்லை என்கிறார்.

இத்தனைத் தொழில்நுட்பங்கள், அறிவியலின் அபார வளர்ச்சி இருக்கிற இந்த காலத்தில், ஐ.டி -ல் பணி புரியும் ஒரு நபரால் தன்னை உருவாக்கி, பட்டினி கிடந்து ஆளாக்கிய தாயிடம் பேசாமல் இருக்க முடிகிறது என்றால் நம் குடும்ப உறவுகள் எங்கேப் போய்க் கொண்டிருக்கிறது.

அப்படி என்ன வாழ்வை வாழ்வாக்குகிறோம்.

மனித உணர்வுகளையும், உறவுகளையும், உணர்ச்சிகளையும் கொன்றுவிட்டு யாருக்காக உழைக்கின்றோம்.

கோடி கோடியாய் சம்பாதிக்கக் கற்றுக் கொடுக்கிற நாம், உறவுகளைச் சொல்லிக் கொடுக்கவும், உணர்ச்சிகளின் மதிப்பைச் சொல்லிக் கொடுக்கவும், அன்பின் ஆழத்தைச் சொல்லிக் கொடுக்கவும், அற வாழ்வின் தேவை உணர வைக்கவும், தவறிப்போகின்றோம்.

குடும்பங்கள் அன்பையும், அறத்தையும், பண்பையும் சொல்லிக் கொடுக்கவில்லை எனில் குடும்பங்கள் பாலைவனமாகி போகும்.

இதற்கு நேர் மாற்றான ஒரு குடும்பமாக, ஒரு முன்மாதிரியான குடும்பமாக திருக்குடும்பம் திகழ்ந்தது. திரு குடும்பத்தின் ஆணிவேர் இறையச்சமும், இறைநம்பிக்கையும், பொறுமை, தன்னலமற்ற அன்பு, கனிந்த இதயம், மன்னிக்கும் மனம், வாழ்வு வழங்கும் தியாகம், உயிரினும் மேலான நேர்மை, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்தல், நான் பிறருக்காக வாழ்கின்றேன் என்ற மதிப்பீட்டு வாழ்வு நிலைபெற்றது.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் வாக்குறுதி, ஆபிரகாமின் நம்பிக்கையில் நிறைவேறுவதை எடுத்தியம்புகிறது. நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்து நின்ற ஆபிரகாமிற்கு ஆண்டவர் தொ.நூ. 15:1 "ஆபிரகாம் அஞ்சாதே நான் உனக்கு கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைமாறு கிடைக்கும்" என்று வாக்குறுதி கொடுக்கிறார். 

ஆபிரகாம் விசுவசித்தார். எனவே அவர் விசுவாசத்தின் தந்தையானார். அந்த உறுதியான விசுவாசத்தை ஆண்டவர் நீதியாக கருதினார். தொ.நூ. 15:6 "ஆபிரகாம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார் அதை ஆண்டவர், அவருக்கு நீதியாக கருதினார்" ஆபிரகாம் கொண்டிருந்த அதே நம்பிக்கையை, கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டிருக்க வேண்டும் என தூய பவுல்  அறிவுறுத்துகிறார். நாம் கொள்ளும் விசுவாசம் நம் செயல்களில் வெளிப்பட வேண்டும், நம் வாழ்வியல் நெறிகளில் புலப்பட வேண்டும். கலா. 5:6 "அன்பின் வழியாய் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது" என்று தூய பவுல் அறிவுறுத்தினார். அன்பான, செயலாற்றல் - நம்பிக்கையின் வெளிப்பாடு ஆபிரகாம் ஆண்டவர் மீது தான் கொண்ட நம்பிக்கையை தன் செயல்களால் எண்பித்தார்.

🟣ஆண்டவரின் கூற்றுப்படி தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஆண்டவர் காட்டிய நாட்டில் குடியேறினார் (தொ.நூ. 12: 1 - 2)

🔴வயதான காலத்தில் குழந்தையற்ற சூழலில், வானத்து விண்மீன்களைப் போல் உன் சந்தததியை பெருக்குவேன் என்ற போது அதை உறுதியாக நம்பினார். (தொ.நூ . 15:6)

🟢வயதான காலத்தில் வாக்குத்தத்தமாய் வழங்கிய மகனை பலியிட கேட்டபோது ஆபிரகாம் இசைந்தார்  (தொ.நூ. 22) 

இவை ஆபிரகாமின் விசுவாச வாழ்வின் வெளிப்பாடுகள் ஆகும்.

இன்றைய இரண்டாம் வாசகமும் ஆபிரகாம், சாரா ஆகியோரின் விசுவாச வாழ்வை நமக்கு உறுதிப்படுத்துகிறது.

இன்றைய நற்செய்தி திருச்சட்டங்களை நிறைவேற்றும், கடவுளுக்கு அஞ்சும் ஒரு யூத குடும்பத்தின் செயல்பாடுகளை திருக்குடும்பம் வழி உணர்த்துகிறது.

சட்டங்களை - கடைப்பிடிப்பதில்தான் நம்பிக்கை புலப்படும்.

குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ய சூசையும், மரியாவும் எருசலேமுக்கு வருகின்றனர். தூய்மைச்சடங்கை நிறைவேற்றுகின்றார்.

லூக்கா 2:23 "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" அர்ப்பணிக்கப்பட்ட குழந்தைக்கு தூய்மைச் சடங்கு நிறைவேற்ற ஏழையான சூசை - மரியாய் இருவரும் இரு மாடப் புறாக்களை குருவிடம் வழங்குகிறார்கள். ஒன்றைத் தகனப்பலியாகவும், மற்றொன்றை பரிகார பலியாகவும் ஒப்புக்கொடுத்தனர். இந்நிகழ்வு ஒரு யூதன் மோசே சட்டப்படி செய்ய வேண்டிய எல்லாவற்றையும் குறைவின்றி செய்தனர் சூசை - மரியா தம்பதியினர் என்பதை உணர்த்துகிறது.

இவ்வாறு எருசலேம் ஆலயத்தில் சட்ட முறைகளை நிறைவேற்ற சென்றபோது, அங்கு நேர்மையாளரும் இறைப்பற்றுக் கொண்டவரும் ஆண்டவர் மெசியாவை காணும் முன் சாவதில்லை என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்ட சிமியோனும்.

அல்லும் பகலும் இறைவனை செய்தவரும், நோன்பிருந்து மன்றாடும் ஆசேர் குலத்தைச் சார்ந்த "அன்னா" என்ற இறைவாக்கினரும் மீட்பராம் இயேசுவைக் கண்டனர்.

பாலன் இயேசுவை குறித்து சிமியோன் இறைவாக்குரைக்கின்றார்.

🟢மக்கள் அனைவரும் காண தந்தை கடவுள் அனுப்பிய மீட்பு இயேசு.

🔴பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி.

🟣இக்குழந்தை இஸ்ரயேலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக அமையும்.

🟡எதிர்க்கப்படும் அடையாளமாய் இருப்பார்.

🔵மரியாவின் உள்ளத்தை வியாகுலம் ஊடுருவும் என்றுரைத்தார்.

தூய்மைச் சடங்கை முடித்த பின் சூசை,மரியா, இயேசு அவர்களின் சொந்த ஊரான நாசரேத்தூர் சென்று தம் அன்றாட எளிய, தூய, வாழ்வு வாழ்ந்தனர்.

♦️♦️நேர்மையாளராகிய சூசைத் தலைவராகவும்,

♦️♦️அருள் மிகப் பெற்ற மரியாவை தலைவியாகவும்

 கொண்ட குடும்பத்தில் தூய ஆவியால் பிறந்த குழந்தையாகிய இயேசு எல்லாருக்கும் உகந்த பிள்ளையாய் விளங்கினார்.

லூக் 2:62 "இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" என்று லூக்கா விளக்குகிறார்.

நம் குடும்பங்களில்


🔵பெற்றோர் பிள்ளைகளுக்கு சிறந்த விசுவாசத்தின் முன்மாதிரியாக விளங்குகிறார்களா?

🟡குடும்பத்தில் கனிவான சொற்களால் உரையாடுகிறோமா?

🟣குடும்பங்கள் நற்பண்புகளின் விளைநிலமாக அமைகிறதா?

🔴நேர்மையான அறசெயல்களைச் செய்ய பயிற்றுவிக்கின்றோமா?

🟢பிறர் நலம் பேணும் தூய அன்பு உள்ளத்தில் ஊற்றெடுக்கிறதா?

🔵மன்னிக்கும் மாண்பை பிள்ளைகளுக்கு வாழ்வாக்கச் சொல்லிக் கொடுக்கிறோமோ?

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

Thursday, December 28, 2023

இன்றைய இறைவாா்த்தை - 29.12.2023 (வெள்ளி)


 

சிந்திக்க சில வாிகள் - 29.12.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (பொியோாின் ஆசி நம்மை வாழ வைக்கும்) - 29.12.2023 (வெள்ளி)


 

Tamil Catholic Status song (கொஞ்சி கொஞ்சி பேசும்)- 29.12.2023


 

Tamil Catholic Status prayer (பொியோாின் ஆசி நம்மை வாழ வைக்கும்)- 29.12. 2023








 

இன்றைய இறைவாா்த்தை - 28.12.2023 (வியாழன்)


 

சிந்திக்க சில வாிகள் - 28.12.2023 (வியாழன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (அதிகாரப் பசி எப்போதுமே ஆபத்தானது) - 28.12.2023 (வியாழன்)


 

Tamil Catholic Status song (ஒரு கோடி விண்மீன்கள்)- 28.12.2023


 

Tamil Catholic Status prayer (அதிகாரப் பசி எப்போதுமே ஆபத்தானது)- 28.12. 2023


 

Sunday, December 24, 2023

கிறிஸ்மஸ் வாழ்த்து - 25.12.2023 (திங்கள்)


 

இன்றைய இறைவாா்த்தை - 25.12.2023 (திங்கள்)


 

சிந்திக்க சில வாிகள் - 25.12.2023 (திங்கள்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நமக்காக மீட்பா் பிறந்துள்ளாா்) - 25.12.2023 (திங்கள்)


 

Tamil Catholic Status song (சின்ன சின்ன கண்மணியே)- 25.12.2023


 

Tamil Catholic Status song - 25.12.2023


 

Tamil Catholic Status song (செல்லமே என் செல்வமே)- 25.12.2023


 

Tamil Catholic Status song (செல்லமாய் ஒரு செல்லம் பிறந்தாா்)- 25.12.2023


 

Tamil Catholic Status prayer (நமக்காக மீட்பா் பிறந்துள்ளாா்)- 25.12. 2023


 

Saturday, December 23, 2023

கிறிஸ்து பிறப்பு பெருவிழா மறையுரை -25.12.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

கிறிஸ்து பிறப்பு

25.12.2023.

எசாயா 62 : 1 - 5,  

திபணி 13: 16 - 17, 22 - 25,

மத்தேயு 1: 1 - 25.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இறைவன் மனிதரை சந்தித்தாா்

🔴ஏவாவை - பாம்பு சந்தித்தது - பாவமும், சாவும் வந்தது.

🔵ஆபிரகாமை . இறைவன் சந்தித்தார் - சந்ததி வந்தது.

🟢கடவுள் - மோசேயை சந்தித்தார் - விடுதலை தலைவரானார்.

🟡மோசே - பாரவோனை சந்தித்தார் - விடுதலை கிடைத்தது

🟣சாமுவேல் - தாவீதை சந்தித்தார் - தாவீது அரசரானார்.

🔴நாத்தான் - தாவீதை சந்தித்தார் - மனமாற்றம்

🔵மரியாவை - இறைத்தூதர் சந்தித்தார் - மீட்பர் கிடைத்தார்.

🟡கிறிஸ்து - சிலுவையை சந்தித்தார் - மீட்பு கிடைத்தது.

🟣பவுல் - கிறிஸ்துவை சந்தித்தார் - கிறிஸ்தவம் பிறந்தது.

♦️கடவுள் என்ற நிலையில் இருந்து இறைவன் இறங்கி நம்மோடு கடவுளாய், இம்மானுவேலனாய் பிறந்த விழா.

விண் - மண்ணை சந்திக்கிறது

புண்ணியன் - பாவியை சந்திக்கிறார்

♦️எதற்காக சந்தித்தார்?

♦️யார் இந்த இயேசு ?

♦️சந்திப்பதற்கான காரணம் என்ன? என்ற வினாக்களை நாம் எழுப்பினால் அதற்கான விடை புலப்படும்.

யார் இந்த இயேசு?

இயற்கை விதிகளுக்குப் புறம்பாய்

எளிமையில் தன்னை மறைத்து

குழந்தையில் அகதியாய்

செல்வமும் செல்வாக்கும் இன்றி

பதவியின்றி, ஏழையாய் உதித்தவர்.

பிறந்ததும் ஏரோதுவால் கொலை செய்ய தேடப்பட்டவர்.

முறைப்படி கல்வி இல்லை. ஆனால்,

♦️சிறுவனாக இருந்தபோதே - பெரியோருக்கு மறை நூலை விளக்கியவர்

♦️இளைஞனாகிய போது - காற்றையும் கடலையும் அடக்கியவர்.

♦️நூல் எழுதவில்லை - உலகின் பெரும்பாலான நூல்கள் அவரைப் பற்றி பேசும்.

♦️மருத்துவம் படிக்கவில்லை - ஏழை மக்களின் உடல் உள்ள நோய்களை குணமாக்கி செல்வராய் இருந்தும் ஏழையாய் பிறந்தார்.

மரியா

யோசேப்பு

மூன்று ஞானிகள் - கேட்டுப்பாருங்கள் பதில் கிடைக்கும் இவ்வாறு,

பிறந்தது - அன்னியரின் மாட்டு தொழுவம்

உறங்கிய படகு - உழைக்கும் மக்களின் உயிர் காக்கும் தொழில் கருவி.

பயணித்த கழுதை - அன்னியரின் அடிமை விலங்கு

கல்லறை - அடுத்தவருக்குச் சொந்தமானது. 

ஆனால் திருவிவிலியம் கூறுகிறது,

யோவான் 1:3 "அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை"

முதலும் முடிவுமான இயேசு அடிமையாய் வந்தார் நம்மை சந்திக்க.

ஏன் சந்திக்க வேண்டும் ?

பாதை மாறி, பாவத்தில் விழுந்து பரிதவித்து வாழத்துடித்த மனிதனை  - புதிய பாதைக்கு அழைத்துச் செல்ல வந்தார்.

விழி இழந்தோர்க்கு ஒளியாய்

பாவி மனம் மாறி வாழ்வு பெற

தடுமாறும் கால்கள் நிலைத்து நிற்க

அகங்கார மனநிலை அன்பைப்பெற

அன்பாய் தேடி வந்தார்

உறவே மனிதமாய் உறவே புனிதமாய்

வாழ வேண்டிய மானுடக் குடும்பத்தில்

அழுவோர் எண்ணிக்கை அதிகரித்தது

மனிதரின் உள்ளம் வெறுப்பால் வெந்தது

தோப்பு - தனி மரமாகியது

வீடு - காடாகியது

மனிதன் - மிருகமானான்

அன்பு அற்றுப்போய் சுயநலம் சலங்கை கட்டி ஆட்டம் போட்டது. இவ்வேளையில் எசாயாவின் ஏக்கம் நனவாக,

எசாயா 49:15 "பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ கருத்தாகினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ" என்ற இறை வார்த்தை உயிர்பெற, அம்மையும் அப்பனுமான ஆண்டவன் குழந்தையாய் சந்திக்க வந்தார்.

♦️அருள் மிகப் பெற்றவர்களை ஆண்டவர் சந்தித்தார்.

லூக்கா 2:10 "அஞ்சாதீர் இதோ எல்லா மக்களுக்கும் மாபெரும் மகிழ்ச்சியூட்டு நற்செய்தி"

எனவே தான் நம்மை சந்திக்க வந்த கடவுள் நமக்குாய் தன்னை இழந்தார்.

இழப்பு - வழி - வாழ்வு, உயிர் கிடைக்கும்.

கிறிஸ்து - கடவுள் நிலை இழந்து மனிதரானார். நாம் வாழ்வு பெற்றோம்.

நிகழ்வு

அவள் பெயர் - சிந்துஜா, ஏழாம் வகுப்பு. முதல் மதிப்பெண் எடுத்தாள். அரையாண்டுத் தேர்வில் வகுப்பாசிரியர் பரிசு கொடுத்தார். வீட்டிற்கு வந்து அம்மா அப்பாவிடம் பரிசை வழங்கி மகிழ்ந்தார்.

பெற்றோர் கேட்டனர் உனக்கு என்ன பரிசு வேண்டும்? சிந்துஜா சென்னாள் "தலை முடியை மழித்து மொட்டையடியுங்கள்" தன் செல்ல குழந்தையை அழகு செய்யச் சீவி சிங்காரிக்கும் தலைமுடியை மொட்டையடிப்பதா? வேண்டாம்.

வேணும், மொட்டை வேணும், குழந்தை சிந்துஜாவின் பிடிவாதம் அது. 

- இறுதியில் வென்றவள் அவள் தான்.

- மறுநாள் குழந்தை சிந்துஜாவை அவள் தந்தை பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றார் காரில்.

- காரில் இருந்து இறங்கினாள். குழந்தை சிந்துஜாவைக் கண்ட நடுத்தர வயது பெண் ஒருவர் ஓடி வந்தார். குழந்தையைக் கட்டி அணைத்து அழுதாள். கண்ணீரோடு சொன்னாள். என் மகன் ஜெய், அவள் வகுப்பு, ரத்தப்புற்று நோய். Hemo Theraphy - ல் தலைமுடி உதிர்ந்தது. வகுப்பு நண்பர் பரிகசிப்பர். எனவே பள்ளி செல்ல தயக்கம். நேற்று வகுப்பு நண்பர்கள் என் மகனைப் பார்க்க வந்தனர்.

- பள்ளிக்கு வா! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

- வர இயலாது - முடியில்லை, பரிகசிப்பர்.

- நானும் மொட்டை அடிக்கிறேன் என்று சொல்லி சென்ற சிந்துஜா மறுநாள் மொட்டையாய் வந்த போது, மாசு மறுவற்ற குழந்தையின் அன்பும், பரிவும், பாசமும் அறிந்து, அனைவர் கண்களும் பனித்தது.

- நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனைத் தேற்றி தன்னை இழக்க துணிந்த குழந்தை போல் பாவநோய் பிடித்த மனுக்குலத்தை மீட்க கடவுள் மனிதரானார்.

- காரிருளில் நடந்த நாம் பேரொளியை காணுமாறு மனிதராய் நம்மை சந்தித்தார்.

- கிறிஸ்துவின் சந்திப்பு மகிழ்வைக் கொடுத்தது.

நம் சந்திப்பு?

கடவுள் எட்ட முடியாத தூரத்தில் எங்கோ இருப்பவர் அல்ல,

தேடி வந்த தெய்வம் இயேசு - நம்மை தேடி வந்த தெய்வம் இயேசு.

மனித சந்திப்பிலே, உறவிலே மகிழ்கின்றவர்.

நாம் கடவுளை எங்கு தேடுவது?

ஏழைகளில், எளியவரில், தாழ்ச்சி என்னும் பண்பில் சிறையில் வாடும் மக்களோடு மத்தேயு 25:40 "மிகச்செரியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" வதைபடும் வாழும் மானிடத்தில் கிறிஸ்துவை சந்திக்க கற்றுக் கொள்வோம்.

- சந்திப்புகள் சந்தோசமாகட்டும்!

- நம்மை சந்திக்கிறவர்கள் - கிறிஸ்துவை நம்மில் கண்டு கொள்ளட்டும்!

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

இன்றைய இறைவாா்த்தை - 24.12.2023 (ஞாயிறு)


 

சிந்திக்க சில வாிகள் - 24.12.2023 (ஞாயிறு)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (இறைத்திட்டபடி வாழும் மானிடராவோம்) - 24.12.2023 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (அழகின் உருவாய்)- 24.12.2023


 

Tamil Catholic Status prayer (இறைத்திட்டபடி வாழும் மானிடராவோம்)- 24.12. 2023