Friday, May 31, 2024

கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா- ஞாயிறு மறையுரை -02.06.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

🔴மூவொரு கடவுள் பெருவிழா

02.06.2024

விப 24:3-8,  

எபிரேயர் 9: 11 - 15,

மாற்கு 14: 12 - 16, 22 - 26.

🔴அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

🔴மீட்பின் அடையாளம் நற்கருணை

🟢இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய பாஸ்கா உணவு என்பது விடுதலைப் பெற்று பயணப்பட்ட விடுதலைப் பயணத்தை நினைவு கூர்வது.

🟣எபிரேயர்களை மீட்க, இரத்தம் தெளிக்கப்பட்ட கதவு நிலைகளை கடந்து சென்று எகிப்திய தலைச்சன் பிள்ளைகளை கடவுள் அருளால் தூதர் வீழ்த்தினார் என்பது பழைய பாஸ்கா .

🟡புதிய இஸ்ரயேலராகிய நமக்கு ஆண்டவர் இயேசு வழங்கிய நற்கருணை புதிய பாஸ்காவாக மலர்கிறது.

🔴தொடக்கக் கால திரு அவையில் நற்கருணை விருந்து புதிய பாஸ்கா விருந்தாக அடையாளம் பெறுகிறது.

🔵ஆண்டவர் இயேசுவின் பாடு, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் அருட்சாதன அடையாளமாகிய கிறிஸ்துவின் திருரத்தமாகிய மறைபொருள் மக்களை பாவ இருள் நிலையிலிருந்து அருள் வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் பாஸ்கா உணவாகிறது.

🔴நிகழ்வு

ருமேனிய அரசு "புளோரெஸ்கியு" என்பவரை கிறிஸ்தவர் என்பதற்காக சிறையில் அடைத்தது. கிறிஸ்தவர்கள் ஒளிந்திருக்கும் இடங்களைக் காட்டிக் கொடுக்க கேட்டதற்கு மறுத்தார். இரண்டு வாரம் உட்கார முடியாதபடி நிறுத்தி வைத்தார்கள். அதோடு அவரது 14 வயது மகனை பிடித்து கட்டி அவரின் முன் நிறுத்தி தடியால் அடித்தார்கள். மகனை மீட்க "புளோரெஷ்கியு" தயாரான போது, 14 வயது மகன் தந்தையை உறுதிப்படுத்தினான். இறுதியில் அந்தச் சிறுவன் தந்தையின் கண்ணெதிரில் அடித்துக் கொல்லப்பட்டான். ருமேனிய நாட்டு கிறிஸ்தவர்களை காக்க மீட்க புளோரிஷ்கியு தன் மகனை பலியாக தியாகம் செய்ய வேண்டியிருந்தது.

🟢உலக மக்களை பாவ அடிமை நிலையிலிருந்து மீட்க தந்தை கடவுள் தன் மகனை தியாக, மீட்பின் கருவியாக பலியாக்கினார்.

🟣இயேசு தன்னை நிலை வாழ்வின், மீட்பின் உணவாக தன்னை மாற்றினார்.

🔴இயேசு தன்னை மீட்பின் உணவாக மாற்ற வேண்டிய தேவை என்ன?

🔴தன்னை பலியாகப் படைக்க வேண்டியதன் தேவை என்ன?

எரே 2:13 "ஏனெனில் என் மக்கள் இரண்டுத் தீச்செயல்களை செய்தார்கள். பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள். தண்ணீர் தேங்காத உடைந்த குட்டைகளைத் தங்களுக்கு என்று வைத்துக் கொண்டார்கள்.


♦️வாழ்வு தரும் கடவுளை புறக்கணித்தார்கள்.

♦️பிற தெய்வங்களை வழிபட்டார்கள். எனவே ஆண்டவர் அவர்களை எகிப்தியர், பாபிலோனியர், அசீரியர், உரோமையர் போன்றோரின் கைகளில் அடிமைகளாக ஒப்படைத்தார்.

♦️அடிமைதளையின் வலிகள் அதிகமாகவே, தங்கள் நாட்டை, கடவுளை, வழிபாடுகளை நினைத்து புலம்பினார்கள், அழுதார்கள்.

திபா. 137:1 "பாபிலோனின் ஆறுகளுக்கருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்" என்றும்

விப 2:23 "இஸ்ரயேல் மக்களோ அடிமைத்தனத்தால் அழுது புலம்பினர். அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அவர்களது முறையீடு கடவுளை நோக்கி எழும்பிற்று" ஆகிய இறைவார்த்தைகள் வழி இஸ்ரயேல் மக்களின் அடிமை வாழ்வு புலப்படுகிறது. அவர்களை மீட்கத்திருவுளம் கொண்ட கடவுள் மோசேயை கருவியாகத் தெரிந்து கொண்டார். மோசேயை அழைத்த போது

விப. 3:7 "எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்" எனவே அவர்களை மீட்க உன்னை ஏற்படுத்துகிறேன் என்று சொல்லி தான் மோசேயை அழைத்தார். மோசே வழியாக வாழ்வின் நாட்டிற்க்கு அழைத்துச் செல்லப்பட்ட இஸ்ரயேலின் பன்னிருகுலத்தோரும் மோசே முன்னிலையில் கடவுளோடு செய்த உடன்படிக்கையையும், அந்த உடன்படிக்கையை இரத்தத்தால் உறுதிப்படுத்தியதையும் இன்றைய முதல் வாசகம் உணர்த்துகிறது.

🟣இஸ்ரயேல் மக்கள் மாடுகளை நல்லுறவு பலிகளாக ஆண்டவருக்கு பலியிட்டனர். அதன் இரத்தத்தை

🔴பலிபீடத்தின் மீதும் தெளித்தனர்.

🔴மக்கள் மீதும் தெளித்தார்.

🟣ஏன் பலிபீடத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டது.

விப . 24:6 "மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்து கலங்களில் விட்டு வைத்தார். மறுபாதியை பலிபீடத்தின் மீது தெளித்தார்"

பலிபீடம்    - இறைவனின் உடனிருப்பை, இறைபிரசன்னத்தை உணர்த்தும் அடையாளம்.

இரத்தம் - உயிரின் அடையாளம்

♦️தெளிக்கப்பட்ட இரத்தம் - இறைவன் தன் உயிர்மீது ஆணையிட்டு,  தாம் ஏற்படுத்திய உடன்படிக்கையை நிறைவேற்றுவார் என்பதை உணர்த்துகிறது.

♦️இறைவன் - தன் வாக்கு மாறுவதில்லை, தான் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாய் இருப்பார்.

திபா 91:4 "அவரது உண்மையை (தவறாத அவருடைய வார்த்தை) கேடயமும், கவசமும் ஆகும்" என்ற இறைவார்த்தை இறைவன் சொன்ன சொல் மாறாதவர் என்பதை உணர்ந்து, இஸ்ரயேல் மக்களும்  விப 24:7"ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்தி கீழ்படிந்திருந்தோம்" என்று வாக்குறுதி கொடுத்ததை உணர்த்தி நிற்கிறது.

🟣ஏன் மக்கள் மீது இரத்தம் தெளிக்கப்பட்டது?

இன்றைய முதல் வாசகத்தின் இறுதி வார்த்தை

விப 3:8"மோசே இரத்தத்தை எடுத்து மக்கள் மேல் தெளித்து இவனைத்து வார்த்தைக்கிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" என்றார். இது மக்கள் தாங்கள் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு உட்பட்டு நடக்கும் உறுதிப்பாட்டை உணர்த்துகிறது.

🔴இரத்தம் உயிரின் அடையாளமாதலால், தங்கள் உயிரால் ஆணையிட்டு கூறும் பிரமாணிக்கத்தை எடுத்தியம்புகிறது. இறைவன் பிரமாணிக்கமாய் இருப்பது போல் நாமும் பிரமாணிக்கமாய் கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவர்களாய் விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

🟣மீட்பின் உணவான நற்கருணை

இயேசு சீடர்களோடு பாஸ்கா உணவு உண்ணும் போது, தம் சீடர்களின் மனக்கலக்கத்தை புரிந்து கொண்ட இயேசு, அவர்கள் திக்கற்றவர்களாக, தவிக்காமல் இருக்க அந்த இரவு விருந்திலே அப்பத்தை  - தன் உடலாகவும், ரசத்தை - தன் இரத்தமாகவும் மாற்றி திருத்தூதர்களுக்கு உண்ண, பருக வழங்கினார். இது தன்னை உடைத்து, உங்களை மீட்கிறேன் என்பதன் அடையாளமாய் அமைந்தது. தூய பேதுரு தூய வாழ்வுக்கான அழைப்பை விடுக்கும்போது, வழிவழியாய் வந்த வீணான நடத்தையின்று நம்மை மீட்க கொடுக்கப்பட்ட விலை என்னவென்றால்

1பேதுரு 1:19 "மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயிர் மதிப்புள்ள இரத்தமாகும்" என்று அறிவுறுத்துகிறார்.

கிண்ணத்தில் பருகுதல் என்பது நாம் பிறரோடு கொள்ளும் உறவை குறிக்கும். இயேசுவின் உடலை உண்டு, இரத்தத்தை பருகும் போது நாம் கிறிஸ்துவோடு இணைகின்றோம்.

🟢நற்கருணை உணவு மட்டுமல்ல, மாறாக நம்மை மீட்கும் பலியாகவும் அமைகிறது.

🔵தானே நித்திய குருவாக, பலிப்பொருளாய், பலிபீடமாய் விளங்கி புதிய உடன்படிக்கையை தனது இரத்தத்தால் உறுதிப்படுத்தினார்.

🔴இது என்றோ முடிந்து போனது அல்ல. மாறாக இந்த தியாக, மீட்பின் பலி எந்நாளும் நம் வாழ்வோடு ஒன்றாக வேண்டும் என்பதற்காகவே இதை நினைவாக செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.

🟣நற்கருணை நமது வாழ்வின் பலி

🟢நற்கருணை நமக்கு வாழ்வு தரும் உணவு

🔴நாம் உண்ணும் உணவு, நம் உடலோடு இரண்டறக் கலந்து நம்மை வலுப்படுத்துகிறது.

🟣நற்கருணை என்னும் நிலைவாழ்வின் உணவு நம்மை இயேசுவாக மாற்றுகிறதா?

🟡இயேசுவின் அன்பும், தியாகமும், பரிவிரக்கமும், பொறுமையும், மன்னிக்கும் மனமும், நன்மை செய்யும் உயரியப் பண்பும் நமதாக வேண்டும்.

🟢கிறிஸ்துவின் இரத்தம் நம் பாவத்தைக் கழுவி தூய்மையாக்குகிறது. புனிதப்படுத்துகிறது, புதுப்படைப்பாக்குகிறது எனவேதான் திரு. எண் 11 "கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சியும் நற்கருணை" என்று கூறுகிறது.

🟣நற்கருணை பலி

🔴ஒற்றுமையின் அடையாளம்

🔴இரக்கத்தின் அடையாளம்

🔴தியாகத்தின் அடையாளம்

🔴தன்னலமற்ற அன்பின் அடையாளம்

🔴மன்னிப்பின் அடையாளம்

🟢இந்த விருந்தில் பங்கு கொள்ளும் நாம் ஆண்டவர் இயேசுவின் பிரதிபலிப்பாக மறுகிறிஸ்துவாக செயல்படுகிறோமா?

🟡குடும்பத்தில் பரிமாறிய வாக்குறுதியில் நிலைத்திருக்கிறோமா?

🟣துறவற, குருத்துவ வார்த்தைப்பாடுகளில் வாழ்வின் பொருள் காண்கிறோமா?

🔵எனவே கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பெற்று மறுகிறிஸ்துவாக நம்மை உரு மாற்றுவோம்!

🔴உடல், உறுப்பு தானங்களால் பிறருக்கு வாழ்வு வழங்கும் அறச்செயல்கள் வழி கிறிஸ்துவை உலகிற்கு வழங்குவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

Sunday, May 26, 2024

இன்றைய இறைவாா்த்தை- 27.05.2023 (திங்கள்)


 

இன்றைய சிந்தனை- 27.05.2023 (திங்கள்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (துன்பத்தில் தளா்ந்து போகாமல் வாழ்வோம்)-27.05.2024 (திங்கள்)


 

Tamil Catholic Status song (நீ இல்லாத வாழ்வே) -27.05.2024


 

Tamil Catholic Status prayer (துன்பத்தில் தளா்ந்து போகாமல் வாழ்வோம்)-27.05.2024 (திங்கள்)


 

மூவொரு கடவுள் பெருவிழா- 26.05.2023 (ஞாயிறு)




 

இன்றைய இறைவாா்த்தை- 26.05.2023 (ஞாயிறு)


 

இன்றைய சிந்தனை- 26.05.2023 (ஞாயிறு)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (மூவொரு கடவுள் பெருவிழா)-26.05.2024 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (மூவொரு இறைவா சரணம்) -26.05.2024


 

Tamil Catholic Status prayer (மூவொரு கடவுள் பெருவிழா)-26.05.2024 (ஞாயிறு)


 

Friday, May 24, 2024

மூவொரு கடவுள் பெருவிழா- ஞாயிறு மறையுரை -26.05.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

மூவொரு கடவுள் பெருவிழா

26.05.2024

இணைச் சட்டம் 4:32-24,  39-40,

உரோமையர் 8: 14 - 17,

மத்தேயு 28: 16- - 20.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

ஒன்றாய் செயல்படுவோம்

🟢ஒரே கடவுள் மூன்று ஆள் நிலை என்பதை பகுத்தறிவினாலோ, அறிவியலினாலோ, விஞ்ஞான வளர்ச்சியாலோ புரிந்து கொள்ள இயலாது. மாறாக நம் தனிப்பட்ட இறை உறவினால், இறையனுபவத்தால் புரிவது எளிது.

🔵தந்தை, மகன், தூய ஆவியார். மூன்று வேறுபட்ட மனிதர்கள் என்று புரிவதை விட ஒவ்வொரு காலத்திலும் இறைவன் தன் மக்களுக்கு தன்னை வெளிப்படுத்திய "உறவு நிலை" எனலாம்.

🔴திருமறையில் தந்தை கடவுள் படைப்பவராக, உருவாக்குபவராக, உயிராற்றல் வழங்குபவராக பார்க்கின்றோம்.

🟡மகன் இயேசு - நம்மை, மீட்பராக, வாழ்வு தருபவராக, வழிகாட்டுபவராக, பாதுகாப்பவராக பார்க்கின்றோம்.

🟣தூய ஆவியார் - தேற்றுபவராக, திடப்படுத்துபவராக, ஒருங்கிணைப்பவராக, செயலாக்கத்திற்கு அழைத்து செல்பவராக அறியப்படுகின்றோம்.

🟢காலம் மற்றும் செயல்களால் தமதிருத்துவம் தந்தையாய், மகனாய் , தூய ஆவியாராய் அறியப்படுகின்றோம்.

🔵இறைவனை பண்பு நலன்களால், செயலாற்றலால் அறியலாம்.

🔴இறைவனை சக்தி, ஆற்றல், எலக்ட்ரிக் பவர் என்று கொள்வோமாயின் இந்த சக்தியின் செயல் எல்லாம் ஒன்றாய் அமைவதில்லை.

🟡பல்பு - மின் ஆற்றலால் ஒளிர்கிறது. மின்விசிறி - மின் ஆற்றலால் சுழல்கிறது. மிக்ஸி - மின் ஆற்றலால் அரைக்கிறது. ஒரே ஆற்றல் செலுத்தும் மின் பொருள்களுக்கு ஏற்ப பயன் மாறுபடுகிறது. இதுபோல் ஒரே இறைவன் ஆற்றல் மிக்கவர், காலம், செயல்களுக்கு ஏற்றவாறு தந்தையாய், மகனாய் , தூய ஆவியாராய் புலப்படுகிறார்.

🟣இன்றைய விழா தந்தை, மகன், தூய ஆவியாரின் அன்பின் ஆழத்தையும், செயலாற்றலையும், உறவின் வலிமையையும் ஒன்றிப்பின் தேவையையும் உணர்த்துகிறது.

நிகழ்வு

திருமிகு கிரஹாம் ஹில் என்பவர் தன்னுடைய The power of Glory (மகிமையின் ஆற்றல்) என்ற நூலில் நிகழ்வு ஒன்றை விளக்குகிறார். Fr. மோன்டேயஸ் என்பவரின் பணி வாழ்வின் சவால்களும் துன்பங்களும் விளக்கப்படுகிறது.


மெக்சிகன் மாகாணத்தில், கிறிஸ்துவை ஆராதிப்பது, வணங்குவது, வழிபடுவது, வழிபாடு எல்லாம் தடை செய்யப்பட்டது. இவ்வேளையில் அரசுக்கு தெரியாமல் மக்களைச் சந்தித்து, அவர்களைத் திடப்படுத்தி, திருப்பலி நிறைவேற்றி விசுவாசத்தில் மக்களை உறுதிப்படுத்தினார். இச்செய்தி அரசுக்கு தெரிய வர அவரைக் கைது செய்தனர். விசாரணையில் அருட்தந்தை ஆன்மீகப் பணியாற்றியது உண்மை என்று தெரிய வர Fr. மோன்டேய்ஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த நாளிலிருந்து புதிய அருட்தந்தை அப்பணியைத் தொடர்ந்து செய்தார். ஒரு நாள் கூட ஆன்மீகப்பணி தடைபடவில்லை எப்படி இந்தத் துணிச்சலை பெற்றார். ஆண்டவர் இயேசு சீடர்களைப் பணிக்கு அனுப்பும் போது கூறிய வார்த்தைகள் அவரை தெம்பூட்டின.

மத்தேயு 10:28 "ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும், உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" என்ற வார்த்தைகள் வலுவூட்டின. அருட்தந்தை அவர்கள் பணி வாழ்வில் அடிக்கடி கூறுவது என்னைப் படைத்தவரும், எனக்காய் மடிந்து, உயிர்த்து, என்னைப் பாதுகாப்பவரும், என்னை வலுவூட்டுகிறவருமான திரித்துவ இறைவன் என்னோடு உண்டு என்பதுதான்.

🟢இயேசுவின் பணியிலும், வாழ்விலும் திருத்துவ கடவுளின் செயல்பாடுகள் நிறைந்து செயல்படுவதை நாம் திருவிவிலியத்தில் பார்க்கின்றோம்.

(i) இயேசுவின் திருமுழுக்கின் போது மத்தேயு 3:16, 17 வசனங்கள்

மத் 3:16 "வானம் திறந்ததையும், கடவுளின் ஆவி புறா இறங்குவதைப் போல தன் மீது வருவதையும் அவர் கண்டார்".

மத் 3:17 "என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்ற பகுதிகள் தமது கிறிஸ்தவ ஒன்றிப்பை உணர்த்துகிறது.

(ii) இயேசுவின் உருமாற்றம்      மாற்கு 9 :7

மாற் 9:7 "மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட அந்த மேகத்தினின்று என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற நிகழ்விலும் திரித்துவ செயலை நாம் அளிகின்றோம்.

(iii) இயேசு தம் சீடர்களை திடப்படுத்தும் போது

யோவான் 15:26 "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார் ..... அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்" என்று சீடர்களை தமத்திருத்துவ பெயரால் திடப்படுத்துவதை பார்க்கின்றோம்.

1. கிறிஸ்தவ வாழ்வின் தொடக்கமே திரித்துவம்

நம்மை கடவுளின் பிள்ளைகளாக்குகின்ற அருளடையாளமான திருமுழுக்கு, தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் தான் வழங்கப்படுகிறது. இதேபோன்று நம்மை இறையுறவில் நிலைப்படுத்தும் அருள் அடையாளங்கள் திரித்துவ கடவுளின் பெயராலே வழங்கப்படுகிறது எனவே தூய பவுல் 

கலா 4:16 "நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தன் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார். அந்த ஆவி அப்பா, தந்தையே என கூப்பிடுகிறது" என்றும்

உரோ 8:15 "மீண்டும் அச்சத்திற்குள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையே பெற்றுக் கொண்டீர்கள்" என்கிறார். கிறிஸ்தவ வாழ்வில் நாம் நிலைக்கும் போது அவரின் உரிமைச் சொத்து, அன்பு பிள்ளைகள் என்ற பேற்றை இறைவன் அருளுகின்றார்.

2. திரித்துவம் கிறிஸ்தவ சமூகத்தை ஒன்றிணைக்கிறது.

இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர். ஆயினும் அவரைத் தேடுவோரை தாம் தேர்ந்தெடுத்து தமக்குரியவராக்கி, ஏற்புடையவராகி மாட்சியில் பங்கு பெறச் செய்வார்.

எபே 2:19 "இனி நீங்கள் அன்னியர் அல்ல, வேறு நாட்டினரும் அல்ல இறைமக்கள் சமூகத்தின் உடன்குடி மக்கள்" எபே. 2:20 "கடவுளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்" என்று பிளவுகளற்ற, உறவின், அன்பின் பிள்ளைகளாக இணைந்து வாழ அழைக்கப்படுகின்றோம். நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற முறையில், கிறிஸ்துவின் சகோதரருமாய் விளங்குகிறோம். எனவே நாம் வாழும் குடும்பம், அன்பியம், திருஅவை உறவின், அன்பின், ஒன்றுப்பின் திருஅவையாக விளங்க திாித்துவம் நம்மை அழைக்கிறது.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, சீடர்களை நற்செய்தி பணிக்கு அனுப்பும் போது, அவர்களை எப்படி பண்படுத்தி அனுப்புகிறார் என்பதை எடுத்தியம்புகிறது. நற்செய்தி இயேசுவின் இரு பண்புகளை உறுதிப்படுத்துகிறது.

1. இயேசுவின் அதிகாரம்

உயிர்த்த இயேசுவுக்கு உலகனைத்தும் உரிமையாகிறது. இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடும் ஆற்றலை திருமறை உணர்த்துகிறது.

மத் 28:18 "விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது" என்பதன் வழியாக, இறைவன் உலகின் மீது அதிகாரம் படைத்தவர் என்பதை உணர்த்துகிறது. இந்த அதிகாரத்தால், தம் சீடர்களுக்கு அவர் விடுத்த அழைப்பு

மத் 28:19 "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற கடவுளின் அதிகாரம் நாமும் சீடராகி, பிறரையும் சீடராக்குவது அதற்கான அழைப்பை தருகின்றார்.

2.இயேசுவின் வாக்குறுதி

இறையாட்சிப் பணிக்காக, என் சீடர்களாய் கடந்து செல்லும் போது நீங்கள் தனித்து இல்லை. மாறாக மத் 28:20 "உலகு முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்ற உறுதிப்பாடும்

யோவான் 14:18"நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன் உங்களிடம் திரும்பி வருவேன்" என்ற உடனிருப்பை வழங்கி திடப்படுத்துகிறார். பணி வாழ்வில் பயணிக்கிறார், பாதுகாக்கிறார் என்ற நம்பிக்கையை இன்றைய விழா உணர்த்துகிறது.

திரித்துவம் நமக்கு உணர்த்துவது


🔵ஒருங்கிணைந்த, ஒன்றித்த செயல்பாடு வளர்ச்சியின் அடையாளம்.

🔴ஒருங்கிணைந்த வாழ்வு, பணிவாழ்வை ஆழப்படுத்தும்.

🟡அன்பியங்கள் சாட்சிய வாழ்வின் அடையாளங்களாய் மாற வேண்டும்.

🟣குடும்பங்கள் திாித்துவத்தின் பிரதிபலிப்பு, தந்தை, மகன், தூய ஆவியார் போல தந்தை தாய், பிள்ளைகள் ஒன்றிப்பின் உறவின் வெளிப்பாடு.

🟢தமத்திருத்துவத்தின் உறவு நிலை வணங்கப்பட வேண்டியதல்ல, வாழ்வாக்கப்பட வேண்டியது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

இன்றைய இறைவாா்த்தை- 24.05.2023 (வெள்ளி)


 

இன்றைய சிந்தனை- 24.05.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (மிகையான வாா்த்தைகள் தவிா்த்து வாழ்வோம்)-24.05.2024 (வெள்ளி)


 

Tamil Catholic Status song (தாய் போல தாங்கிடும்) -24.05.2024


 

Tamil Catholic Status prayer (மிகையான வாா்த்தைகள் தவிா்த்து வாழ்வோம்)-24.05.2024 (வெள்ளி)


 

Thursday, May 23, 2024

இன்றைய இறைவாா்த்தை- 23.05.2023 (வியாழன்)


 

இன்றைய சிந்தனை- 23.05.2023 (வியாழன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (உழைப்பு சுரண்டலில் ஈடுபடா நல்லுள்ளம் பெறுவோம்)-23.05.2024 (வியாழன்)


 

Tamil Catholic Status song (கடவுள் படைத்த அழகு நீ) -23.05.2024


 

Tamil Catholic Status prayer (உழைப்பு சுரண்டலில் ஈடுபடா நல்லுள்ளம் பெறுவோம்)-23.05.2024 (வியாழன்)


 

இன்றைய இறைவாா்த்தை- 22.05.2023 (புதன்)


 

இன்றைய சிந்தனை- 22.05.2023 (புதன்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (நன்மை செய்ய வேண்டியது மானுட கடமை)-22.05.2024 (புதன்)


 

Tamil Catholic Status song (யாா் என்னைக் கைவிட்ட போதும்) -22.05.2024

 

Tamil Catholic Status prayer (நன்மை செய்ய வேண்டியது மானுட கடமை)-22.05.2024 (புதன்)

 


Friday, May 17, 2024

தூய ஆவி ஞாயிறு பெருவிழா- ஞாயிறு மறையுரை -19.05.2024.

  👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

தூய ஆவியார் பெருவிழா

19.05.2024

திருத்தூதா்பணிகள் 2: 1 - 11,

கலாத்தியர் 5: 16 - 25,

யோவான் 15: 26- - 27, 16:12 - 15.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


ஒன்றிணைத்து வழிநடத்தும் ஆவியார்

🟣யூதர்கள் மூன்று மாபெரும் விழாக்களை கொண்டாடினர்  

(i) பாஸ்கா திருவிழா

(ii) பெந்தேகோஸ்தே விழா

(iii) கூடாரத் திருவிழா என்பனவாம்

🟢 "பெந்தேகோஸ்தே" என்பதற்கு ஐம்பதாம் நாள் என்று பொருள். அதாவது செங்கடலைக் கடந்து பாஸ்கா விழாவை கொண்டாடி முடித்த ஐம்பதாவது நாள்.

🔵 "பெந்தக்கோஸ்தே" திருநாள் அறுவடை விழா என்றும் முற்கனிகள் விழா என்று அழைக்கப்பட்டது.

விப 23:16 "வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும் போது, அறுவடைவிழாவும்" என்று அறிவுறுத்துகிறது.

🟣அறுவடையின் இறுதியில், பெற்ற நல்ல அறுவடைக்கு நன்றி செலுத்தும் நாளாக முதலில் கொண்டாடப்பட்டது.

🔴அன்று யூதர்கள் புதுப்பலனுக்குரிய காணிக்கைகளை இறைவனுக்கு பலியாக்கினார்

லேவியர் 23:16 "ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புதுப் உணவுப் படையலைச் செலுத்துங்கள்"

🟡இவ்வாறு பாஸ்கா விழாவில் தொடங்கிய அறுவடையும் அதை ஒட்டிய நன்றியுணர்வும், பெந்தகோஸ்தே விழாவில் நன்றி பலியோடு நிறைவுற்றது.

🟢இத்தகைய ஒரு மாபெரும் நன்றி விழாவின் போது இறைவன் தன் ஆற்றலையும், கொடைகளையும் ஈந்து திருத்தூதர்களை உறுதிப்படுத்தி, ஒன்றிணைத்து திருச்சபையை நிறுவியது, மிகப்பொருத்தமாக அமைகிறது.

🔵ஆவியின் உடனிருப்பும், உறுதிப்பாடும், பணி வாழ்வுக்கான தேர்ந்து தெளியும் ஞானத்தையும் தூய ஆவியார் வழங்குகிறார்.

நிகழ்வு

அல்பேனியா நாட்டில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிறந்து ஆக்னஸ் கோஞ்சா என்று பெயரிடப்பட்ட குழந்தை வளர்ந்து தன் 17-வது அகவையில் லொரேட்டா என்ற துறவறசபையில் இணைந்து அருள் சகோதரியாக மாறினார்.

1928 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சேரி பகுதிக்கு வந்து அன்புப் பணியும் அறப்பணியும் ஆற்றினார். 1950 - ஆம் ஆண்டு பிறரன்பு பணியாளர் சபை என்ற சபையைத் தோற்றுவித்த அன்னை தெரசா மரணத்தை எதிர்க்கும் பெண் இறைவாக்கினராக வாழ்வின் கலாச்சாரத்தின் அடையாளமாக, வரலாறாக மாற அவர் கொண்ட இறைபற்று அடிப்படையாயிற்று. புதிய சபையைத் தோற்றுவித்த போது உண்மையை உணர்த்தும் ஆவியார், திடம் கொடுத்து, ஆற்றல்படுத்தி மாண்புறச் செய்தார். சேரியில் கால் பதித்து ஏழைகளின் வாழ்வில் அன்புத் தடம் பதித்த அன்னை தெரசா புனித தெரசாவாக உயர்த்தப்பட்டது ஆவியின் அருட்செயலே. 1997 ஆம் ஆண்டு 5 - ம் தேதி இறையடி சேர்ந்த போது பிறரன்பின் பணியாளர் சபை 123 நாடுகளில் அன்புப் பணியாற்றியது. சேரியில் சிறிதாய் தொடங்கிய சபை உலகம் முழுவதும் பரவ ஆவியின் உடனிருப்பும், உறுதிப்பாடும் ஊக்கப்படுத்தியது.

இன்று திருஅவை தூய ஆவியாரின் விழாவை கொண்டாடும் போது இன்றைய முதல் வாசகம் தூய ஆவியின் ஒன்றிணைப்பை நமக்கு உணர்த்துகிறது.

1. ஒன்றிணைக்கும் ஆவியார்

🔴ஆண்டவரின் மரணத்திற்குப் பிறகு சிதறுண்டச்  சீடர்கள் தங்கள் பணி, இலக்கு இவற்றைத் தொலைத்தனர். பெந்தேகோஸ்தே விழாவின் போது எல்லாரும் ஒன்றாயினர். ஒன்றான திருத்தூதர்கள் மேல் தூய ஆவி இறங்கினார்.

திபணி 2:4 "அவர்கள் அனைவரும் தூய ஆவியில் ஆட்கொள்ளப்பட்டார்கள்"

♦️எண்ணத்தால், பணியால் சிதறுண்டவர்கள், ஆவியால் ஒன்றாய் இணைக்கப்பட்டனர்.

♦️தூய ஆவி நிரம்பி பேசிய திருத்தூதர்களின் போதனைகளை பல்வேறு இன மக்கள் அவர்களின் மொழிகளில் கேட்டு பரவசமடைந்தனர்.

திபணி 2:7 "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?" தூய ஆவியார் மொழிகளையும் கடந்து மக்களையும் ஒன்றிணைத்து வழி நடத்துகிறார்.

திபணி 2:8 "அவ்வாறிருக்க நம்முடைய தாய் மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி என வியந்தனார்"

2. திடப்படுத்தும் ஆவியார்

ஆண்டவர் இயேசுவின் மரணத்திற்கும் பின்னைய நிலையை யோவான் விளக்கும்போது

யோவான் 20:19 "வாரத்தின் முதல், அது மாலை வேளை, யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தனர்" இப்படி அடைபட்டுக் கிடந்தவர்களை தூயஆவி எனும் நெருப்பு பயத்தை எரித்துத் திடப்படுத்தியது. யூதச்சங்கம் திருத்தூதர்களை கிறிஸ்துவை குறித்து பேசக்கூடாது என்று கட்டளையிட்டது. ஆனால் ஆவியால் நிரப்பப்பட்ட பேதுருவும், யோவானும்

திபணி 4:20 "என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க எங்களால் முடியாது" என்று பேசும் அளவிற்கு துணிவு பெற்றனர்.

♦️மீட்பின் செய்தி மரியாவிற்கு அறிவிக்கப்பட்டபோது மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிய போது, தூதர்

லூக்கா 1:30 "மரியா அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளை கண்டடைந்துள்ளீர்"

லூக்கா 1:35 "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்." என்று தூதனால் அறிவுறுத்தப்பட்டபோது, ஆவியின் அருள் பெற்ற மரியா திடன் பெற்று நான் ஆண்டவரின் அடிமை என்று தந்தை கடவுளிடம் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

3. சமாதானம், அமைதி அருளும் ஆவியார்

தூய ஆவியாரின் கனிகளாக தூய பவுல் அறிவுறுத்தும் போது

கலாத்தியர் 5:22 "தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்" என்று அறிவுறுத்துகிறார்.

தூய ஆவியாரின் கனிகள், ஒரு அமைதியான, சமாதானம் நிறைந்த வாழ்விற்கான வழிமுறைகளாக அமைந்திருக்கிறது.

இயேசு சீடர்களுக்கு அறிவுரை வழங்கும்போது அல்லது அவர்களைப் பண்படுத்தும் போது,

யோவான் 14:27 "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன். நான் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றதல்ல" என்று உள்ளம் கலங்காமல், மருளாமல், திடமாய் வாழ அறிவுறுத்துகிறார்.

ஆவியின் கனிகளால் நிரப்பப்பட்டவர்கள் இறைவன் அருளும் அமைதியைப் பெறுவார்கள்.

🔴தூய ஆவியார் நமக்கு அருளும் அமைதி, மயான அமைதி அன்று. மாறாக நம்மை அன்பு செயல்களுக்குத் தூண்டும் உறவு நிலையாகும். உள்ளத்தில் உறவுநிலை ஊற்றெடுத்தால், உள்ளத்தில் நிறை மகிழ்வும், நிறைய அமைதியும் குடிகொள்ளும்.

பெந்தக்கோஸ்தே விழா இன்று நமக்கு விடுப்பு அழைப்பு :

ஆவியின் அனுபவம் நம்மை சரியான புரிதலுக்கு இட்டுச் செல்லட்டும்.

♦️குடும்பத்தில் புரியும் படியாய் பேசுவதும், செயலாற்றுவதும் ஆவியின் அருட்செயல் என்பதை உணர்வோம்.

♦️மக்கள் உணர்வுகளை புரியாமல் பேசுவதல்ல மாறாக மக்களின் உணர்வுகளைப் புரிந்து, தேவையை அறிந்து செயலாற்றுவது. 

ஆண்டவர் இயேசு இதைச் செய்தார் எனவே மக்கள் எவ்வாறு ஆண்டவரை பார்த்தனர் என்பதை

லூக்கா 4:20 "அனைவரின் கண்களும் அவரையே உற்று நோக்கியது" ஏனெனில் மக்களின் வாழ்வைப் பற்றிப் பேசினார்.

🔴பிள்ளைகள், பெற்றோர் - உரையாடல் அர்த்தமுள்ளதாய், வாழ்வு கொடுப்பதாய் அமைய வேண்டும்.

🔵உரையாடல் - உறவை வலுப்படுத்தும். நல்ல உரையாடல் கனிவான சொற்களைக் கொண்ட உரையாடல்களாக அமையட்டும்.

🟢பிரித்தாளும் கயமைத்தனங்கள், முன்னுக்குப்பின் முரணான பேச்சு, செயல்பாடுகளை களைந்து உண்மையோடும் நேர்மையோடும் வாழ வரம் வேண்டுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

Monday, May 13, 2024

இன்றைய இறைவாா்த்தை- 14.05.2023 (செவ்வாய்)


 

இன்றைய சிந்தனை- 14.05.2023 (செவ்வாய்)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (எப்போதும் இறைவேண்டலில் நிலைத்திருப்போம்)-14.05.2024 (செவ்வாய்)


 

Tamil Catholic Status song (என்னை நீயும் அன்பு) -14.05.2024


 

Tamil Catholic Status song (செபத்திலும் தவமதிலும்) -14.05.2024


 

Tamil Catholic Status prayer (எப்போதும் இறைவேண்டலில் நிலைத்திருப்போம்)-13.05.2024 (திங்கள்)


 

இன்றைய இறைவாா்த்தை- 13.05.2023 (திங்கள்)


 

இன்றைய சிந்தனை- 13.05.2023 (திங்கள்)


 

Tamil Catholic Status song (மலா்ந்திடும் மலாில்) -13.05.2024


 

Sunday, May 12, 2024

இன்றைய இறைவாா்த்தை- 12.05.2023 (ஞாயிறு)


 

இன்றைய சிந்தனை- 12.05.2023 (ஞாயிறு)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (எப்போதும் இயங்கி கொண்டேயிருப்போம்)-12.05.2024 (ஞாயிறு)


 

Tamil Catholic Status song (எங்கும் சென்று எல்லாரையும்) -12.05.2024


 

Tamil Catholic Status prayer (எப்போதும் இயங்கி கொண்டேயிருப்போம்)-12.05.2024 (ஞாயிறு)


 

இன்றைய இறைவாா்த்தை- 11.05.2023 (சனி)


 

இன்றைய சிந்தனை- 11.05.2023 (சனி)